டி20 அணியில் இடம்பெறாத சிறந்த வீரர்கள்!
டிவென்டி 20 போட்டியில் விளையாடும் வீர ர்கள் பற்றி அறிந்திருப்பீர்கள். இதில் விளையாடுவார்கள் என சில வீர ர்களை எதிர்பார்த்திருப்போம். ஆனால் அவர்கள் விளையாடும் அணியில் இருக்கமாட்டார்கள். அவர்களில் சிலரைப் பார்ப்போம்.
ஷிகார் தவான்
ஐபிஎல் சீசனை மிகவும் மெல்லத் தொடங்கிய வீர ர் தவான். இந்த சீசனில் 587 ரன்களை எடுத்திருக்கிறார். இவரளவு பிறரை ஒப்பிட முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் இவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. ரோகித் சர்மா, கே.எல். ராகுல், இஷான் கிஷான் ஆகியோர் முதல், இரண்டு, மூன்றாவது இடத்தில் களமிறங்கவிருக்கிறார்கள்.
தமிம் இக்பால்
2016ஆம் ஆண்டு நான்கு ஆட்டங்களில் 295 ரன்களை விளாசியவர் இக்பால். ஆடும் அணியில் வீர ர்கள் நிறைந்துவிட்டதால் இவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. விளையாட்டு நேரம் இவருக்கு சரிவர கிடைக்காத காரணத்தால், அணியில் வெளியே வைக்கப்பட்டு இருக்கிறார்.
ஃபேப் டு பிளெசிஸ்
சென்னை நான்காவது முறையாக ஐபிஎல் பட்டம் வெல்ல பிளெசிஸ் முக்கியமான காரணம். டெஸ்ட் போட்டியில், இரண்டாவதாக அதிக ரன்களை எடுத்தவர் இவர். ஆனாலும் கூட ட்வென்டி 20 போட்டியில் இவரைத் தேர்ந்தெடுக்கவில்லை.
ஏபிடி
ஆர்சிபி அணியில் எப்போதும் ஆடும் தென் ஆப்பிரிக்க வீரர். 2019ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணி கோப்பையை வெல்லாததற்கு காரணம் ஏபிடி அணியில் இல்லாததுதான் காரணம். தனது ஓய்வு முடிவைக் கூட மாற்றிக்கொண்டு விளையாட வந்தார். இப்போது சொல்லிக்கொள்ளும் ஃபார்ம் கிடையாது என்றாலும் அணியில் எடுக்கவில்லை.
பென் ஸ்டோக்ஸ்
இப்போது விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அமைதியாக விளையாடாமல் இருக்கிறார். இன்றைய காலத்தில் சிறந்த ஆல்ரவுண்டர் என லிஸ்ட் போட்டால் அதில் முக்கியமான வீர ராக ஸ்டோக்ஸ் இருக்கிறார். 2019ஆம் ஆண்டு இங்கிலாந்து கோப்பையை வெல்ல இவரே முக்கியமான காரணம்.
கிறிஸ் மோரிஸ்
தென்னாப்பிரிக்க அணியில் 2019ஆம் ஆண்டு விளையாடியவர். ஐபிஎல் அணியில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர், ராஜஸ்தான் அணிக்காக விளையாடினார். தென்னாப்பிரிக்க அணியில் இவரை தேர்ந்தெடுக்கவில்லை. என்ன காரணமோ தெரியவில்லை அமைதியாக இருக்கிறார்கள். தேசிய அணியில் இவருக்கு இடம் கிடைப்பது இனி கடினம்.
சுனில் நரைன்
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் விளையாடியவர், ஆர்சிபி அணியைத் தோற்கடிக்க உதவினார். 2019ஆம் ஆண்டிலிருந்து மேற்கிந்திய தீவுகளுக்காக விளையாடவில்லை. அணிக்கு தேர்வானால் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறார்கள்.
சஞ்சு சாம்சன்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன். போட்டிகளில் வீர ர்கள் சொதப்பினால் கூட விட்டுக்கொடுக்காமல் போராடியவர் இவர் மட்டும்தான். ஆனால் உலகளவிலான போட்டிகளில் சொதப்பி வைத்ததால் வாய்ப்பு கண்ணில் தெரியாமல் போய்விட்டது. இலங்கையில் நடந்த டி20 போட்டியில் சரியாக விளையாடாமல் போனதை பெரும் பின்னடைவாக கருதுகிறார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக