அதிகரித்து வரும் வெப்பம்! கடிதங்கள்

 


நேரு



அன்புள்ள நண்பர் முருகானந்தம் அவர்களுக்கு, 

வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? இங்கு வெப்பம் அதிகரித்து வருகிறது. அறையில் நீர் தட்டுப்பாடு பிரச்னை வரும் என நினைக்கிறேன். புத்தக காட்சியில்  வாங்கிய இலங்கை சிறுகதைகளை படித்து வருகிறேன். 2 சிறுகதைகளை படித்துள்ளேன். தொகுப்பு மொழியாக்கம் கண்ணையன் தட்சிணாமூர்த்தி. 

நேருவின் போராட்டகால சிந்தனைகள் நூலை அடுத்து படிக்கவேண்டும். அறிவியல் மொழிபெயர்ப்பு  நேர்காணல் நூலை எழுதி அமேசானில் பதிவிட்டேன். ஓராண்டாக தள்ளிப் போய்க்கொண்டிருந்த பணி. இப்போதுதான் அதற்கு நேரம் கிடைத்தது. நூலை எழுதி தொகுத்து பதிவிட்டுவிட்டேன். 

நேரு பேசிய சொற்பொழிவு நூலை நடப்பு ஆண்டில் எழுதிவிட நினைத்துள்ளேன். என்னளவில் அதனை சரியாக செய்ய முயல்கிறேன். அதிர்ஷ்டம் கால் அப்பியாசம் முக்கால் என்பதுதான் நிலை. நன்றி

ச.அன்பரசு

8.3.2021


கருத்துகள்