லா.ச.ராவின் நுட்பமான உரையாடல்கள்! கடிதங்கள்
அன்புள்ள தோழர் முருகு அவர்களுக்கு, வணக்கம்.
நலமாக இருக்கிறீர்களா? சென்னையில் பகலில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இரவில் அதன் வெளிப்பாடாக புழுக்கம் அதிகமாக உள்ளது.
மீனோட்டம் - லா.ச.ரா எழுதிய சிறுகதைத் தொகுப்பிலுள்ள ஆறு கதைகளைப் படித்தேன். அதில் இரண்டு மட்டும்தான் பிடிபட்டது. மீதி பலவும் நுட்பமான விஷயங்களைக் கொண்ட உரையாடல்கள். லா.ச.ரா அவரது சொந்தங்கள் கூட பேசுவது போலவே இருப்பதால் அதனை எளிதில் தொடர்புபடுத்திக்கொண்டு ஆர்வமாக படிக்க முடியவில்லை. மின்னூலாக படிப்பதில் அதிகம் சோதித்த நூல் இது. படிப்பை கைவிட்டுவிட்டேன்.
குமுதம் தீராநதி படித்தேன். குழந்தை எழுத்தாளர் கோதை சிவகண்ணகி பேட்டி நன்றாக வந்திருந்தது. இதழை ஆசிரியர் மலர்வதி ஒற்றையாளாக செய்கிறார் போல. இதழ் முழுக்க அவரின் கைவண்ணம்தான் அதிகம்.
சப்தரிஷி லா.ச.ரா எழுதும் தொடர் பரவாயில்லை ரகத்தில் இருக்கிறது. படிக்கலாம். ரணரங்கம் என்ற தெலுங்குப்படத்தைப் பார்த்தேன். சர்வானந்த் நம்பிக்கையுடன் நடித்த கேங்க்ஸ்டர் படம். காலத்தில் முன்னும் பின்னுமாக காட்சிகள் மாறி மாறி ஓடுகின்றன. கல்யாணி பிரியதர்ஷன் பிளாஷ்பேக் காட்சிகளில் பொருந்தால் வந்து போகிறார். காஜல் அகர்வால் வேறு இருக்கிறார். இவருக்கு வயதான சர்வானந்த்தான் ஜோடி. பீரியட் படங்களை இன்னும் கவனத்துடன் எடுத்திருக்கலாம் என்று தோன்றும்படியான படம். சண்டைக்காட்சிகளை நன்றாக எடுத்திருந்தாலும் படத்தில் உணர்ச்சிகரமான காட்சிகள் சரிவர உருவாக்கப்படவில்லை.
எங்கள் இதழ் வரும் 20ஆம் தேதியோடு நிறைவு பெறுகிறது. அடுத்து பள்ளி தொடங்கும்போது மீண்டும் வேலைகள் தொடங்கும் என நினைக்கிறேன்.
நன்றி!
ச.அன்பரசு
11.3. 2020
கருத்துகள்
கருத்துரையிடுக