முஸ்லீம் மக்களை துரத்தவே அரசு இந்துத்துவ திட்டங்களை அமல்படுத்துகிறது! - அமான் வதூத், மனித உரிமைகள் வழக்குரைஞர்

 







அமான் வதூத்

மனித உரிமை வழக்குரைஞர்


செப்.23 அன்று சிபாஜ்கரில் நடைபெற்ற மக்களின் குடியேற்றம் அகற்றல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


முதலில் நான் கூறவிரும்புவது, இப்போது அரசால் குடியிருப்புகள் அகற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் அனைவருமே பல்லாண்டுகளுக்கு முன்னரே இங்கு வந்தவர்கள். பலரும் 1970களிலிருந்து இங்கிருக்கிறார்கள். எனவே இதனை அரசு புதிய குடியேற்றம் என்று கூறமுடியாது. இவர்கள் ஆற்றுநீரின் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு பெர்பெடா, காம்ரூபா ஆகிய மாவட்டங்களிலிருந்து இங்கு வந்தவர்கள். 

ஆற்று வெள்ளம் காரணமாக தங்கள் வீடுகளையும் நிலங்களையும் இழந்தவர்கள் இங்கு வந்து தங்கினார்கள். பலரும் கூலி வேலைகளை செய்பவர்கள்தான். நிலமற்ற மக்கள். 

இங்கு தங்கியிருப்பவர்கள் பெரும்பாலும் ஆற்றையொட்டியுள்ள நிலங்களில் தங்கியிருந்தவர்கள்தான். பொதுவாக அசாம் மக்கள் ஆற்றையொட்டி தங்க மாட்டார்கள். இப்போது முஸ்லீம் மக்கள் உள்ள இடங்களை , அசாமின் பூர்விக மக்களுக்கு தருவதாக கூறியுள்ளது. இங்கு அவர்கள் விவசாயம் செய்வார்கள் என்று அரசு கூறுகிறது. விவசாயம் செய்ய எதற்கு ஆற்றுக்க்கு அருகில் உள்ள நிலங்களை தேர்ந்தெடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. 

இந்த நடவடிக்கை முஸ்லீம்களிடமிருந்து நிலங்களைக் கைப்பற்றுவதை நோக்கமாக கொண்டது. இதில் முஸ்லீம்கள் உண்டுதான். ஆனால் அவர்களை விட அதிகமாக இந்துகள் உள்ளனர். அரசு இப்படி மக்களிடமிருந்து நிலங்களை பிடுங்குவது மேம்பாட்டு பணிகளுக்காக அல்ல. இது காட்டிலுள்ள நிலமும் அல்ல.  அரசியல் காரணங்களுக்காக அரசு மக்களை அநீதியாக இங்கிருந்து வெளியேற்றுகிறது., 


வழக்குரைஞர் அமான் வதூத்


இவர்களுக்கான குடியேற்றம் எங்கு அமையும் என நினைக்கிறீர்கள்?

1970ஆம் ஆண்டிலிருந்து வந்த மக்கள் இங்கு தங்கியிருக்கிறார்கள். எனவே இங்கு வாழும் முஸ்லீம் மக்களின் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே இந்துத்துவா திட்டத்தை அமல்படுத்த தொடங்கிவிட்டனர். இங்கு 1940களிலிருந்து ஆர்எஸ்எஸ் தனது ஷாகா வகுப்புகளை எடுக்கத் தொடங்கிவிட்டது. இப்படித்தான் அசாம் இயக்கம் தொடங்கப்பட்டது.  1983 பிப்ரவரி 14 அன்று சாவோல்கோவாவில் ஆயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நெல்லி படுகொலை நிகழ்வுக்கு நான்கு நாட்கள் முன்னர் நடைபெற்றது. இதற்கு இதேபோன்ற படுகொலைகள் தோல்பூரிலும் நடைபெற்றது. இங்கு 500 பேர் பலியானதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. நானும் இந்த செய்தி பற்றி இணையத்தில் கூறினேன். அரசியல் நோக்கங்களுக்காக கட்சிகள் மக்களை பழிவாங்குகின்றன என்று கூறலாம். 

இவர்களை இந்தியர்கள் என்று சொல்லுகிறீர்களா? இவர்கள் வங்கதேசத்திலிருந்து அகதியாக வரவில்லையா?

ஆமாம். இவர்களில் ஒருவர் கூட வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களல்ல. நான் இங்கு எட்டு ஆண்டுகளாக வேலை செய்து வருகிறேன். வங்கதேசத்திலிருந்து வந்த அகதிகள் என்பது போலியான செய்தி. மக்கள் அதற்கு முன்னரே இங்கு வந்து தங்கியவர்கள்தான். 

பலரும் ஐம்பது ஆண்டுகளாக இங்கிருப்பதாக கூறுகிறார்... சிலர் முழு வாழ்க்கையும் இங்கு வாழ்ந்திருப்பதாக சொன்னார்கள்?

ஐம்பது ஆண்டுகள் என்பது இங்கு தங்கியிருக்கும் காலத்தை கூறுகிறார்கள். இவர்களது முன்னோர்கள், அசாமின் வேறு பகுதியில் வாழ்ந்து வந்தவர்கள்தான். 

அப்போது இவர்களை அசாமியர்கள் என்று கூறலாமே? இந்தியாவின் வேறு பகுதியில் வந்தவர்கள் என்று ஏன் கூறவேண்டும்?

நிச்சயமாக இல்லை., அசாமிய மக்கள் பிற மத மக்களை தங்களது மாநில மக்களாக ஏற்பதில்லை. எனவே இவர்களை நீங்கள் வங்காள முஸ்லீம்கள் என்றுதான் கூறவேண்டும். இவர்களை அசாமியர்கள் என்றால் இங்குள்ள மக்களே இந்தக் கருத்தை ஏற்கமாட்டார்கள். 

இப்போது அரசால் விரட்டியடிக்கப்படும் மக்கள் இங்கு வெகுகாலமாக வாழ்ந்து வந்தவர்கள்தான். எனது கொள்ளுத்தாத்தா 1970களில் இருநூறு கி.மீ. இடம்பெயர்ந்து வாழ வந்தவர்தான்.  அரசுதான் இப்போது மக்களின் மீது வெறுப்புணர்வைத் தூண்டிவிட்டு வருகிறது. வன்முறையைத் தூண்டிவிட்டு போலிச்செய்திகளை வெளியிட்டு பத்தாயிரம் மக்களின் வாழ்க்கையை பணயத்தில் வைத்துள்ளது மாநில அரசுதான். 

வன்முறையைத் தொடங்கியது மக்கள் என்று அரசு கூறுகிறதே? அவர்கள்தான் காவல்துறையை முதலில் தாக்கினர் என்று கூறப்படுகிறதே?

இல்லை. நான் உங்களுக்கு தகவல்களைக் கூறுகிறேன். அவர்கள் மக்கள்தான் காவல்துறையை முதலில் தாக்கியதாக சொல்லுகிறார்கள். அவர்கள் இருவரை கொன்றுவிட்டனர். ஒருவர் கையில் கேமராவோடு இருந்தார். அவர் எப்படி தாக்கப்பட்டார் என்பதை நாங்கள் பார்த்தோம். மக்கள் காவல்துறையை தாக்கினார்கள் என்று அரசு சொல்லும் கூற்றைப் பார்த்தால், இருவர் மட்டும்தான் இறந்திருப்பார்களா என்ன? பத்தாயிரம் மக்கள் திடீரென எங்கிருந்து வந்திருப்பார்கள். இவை அனைத்துமே பொய்கள் . அரசின் வாயிலிருந்து வரும் பொய்கள். 

பிரன்ட்லைன்

ஸியா அஸ் சலாம்






கருத்துகள்

பிரபலமான இடுகைகள்