இடுகைகள்

கம்யூனிஸ்ட் கட்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அபினியால் அழிந்த தேசம் மீண்டெழுந்த வரலாறு! - சீனாவின் வரலாறு - வெ.சாமிநாதன்

படம்
      சீனாவின் வரலாறு வெ சாமிநாதன் பிரபஞ்ச ஜோதி பதிப்பகம் பதிப்பு 1962 தமிழ் இணைய கல்விக்கழகம் நாட்டுடைமையாக்கப்பட்ட படைப்பு சீனாவைப் பற்றி அன்றைய காலத்தில் 81 ஆங்கில நூல்களை படித்து அதிலுள்ள விஷயங்களை எடுத்து சேர்த்து 564 பக்கத்திற்கு நூலை எழுதியிருக்கிறார் நூலாசிரியர். இந்த நூலில் அடிக்குறிப்புகளே நிறைய உள்ளன. அதுமட்டுமல்லாமல் அனுபந்தம், நூலின் முக்கிய பகுதிகள், குறிப்புகள், நூலை எழுத உதவிய மேற்கோள் நூல்கள் என அனைத்தும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இன்றைக்கு கூட இப்படியான தெளிவான நூலை ஒருவர் எளிதாக எழுதிவிட முடியாது. அந்தளவு நூல் சிறப்பாக தெளிவாக உள்ளது. இன்றைக்கு சீனா, தரைவழியாக, நீர் வழியாக தன்னை விரிவுபடுத்திக்கொள்ள முயன்று வருகிறது. எதற்கு இந்த கோபம், ஆக்ரோஷம் என பலரும் நினைப்பார்கள். அதற்கான விடை அதன் வரலாற்றில் உள்ளது. குறிப்பாக ஜென்ம எதிரியான ஜப்பான், சீனாவை அழித்து மக்களை வேட்டையாடிய வரலாற்றை இன்றும் சீன டிவி தொடர்களில் நீங்கள் பார்க்க முடியும். பெரும்பாலான வரலாற்றுத் தொடர்களில், திரைப்படங்களில் ஜப்பானியர்கள்தான் தீயவர்கள், வில்லன்கள். அதற்கான காரணங்களை நீங்கள் வெ ச...

விரைவில்... சற்றும் பொருட்படுத்த தேவையில்லாத மனிதன் - ஷி ச்சின்பிங் இநூல் வெளியீடு

படம்
       

சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு வயது 70! - அடுத்த சீன அதிபர் யார்?

படம்
  ஷி ஜின்பிங், சீன அதிபர் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு வயது 70 சீன அதிபர் ஷி ஜின்பிங், மூன்றாவது முறையாக அதிபராக பொறுப்பேற்று ஆட்சியை நடத்திவருகிறார். இது அவருக்கு மூன்றாவது ஐந்தாண்டு. மார்ச 2023இல் ஆட்சியை தக்கவைத்துள்ளவர், வாழ்நாள் முழுக்க அதிகாரத்தில் இருப்பதற்கு ஏற்றபடி கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள தனது ஆதரவாளர்களை தனது அணியில் திரட்டியுள்ளார். தனக்கு எதிராக உள்ளவர்களை முற்றாக விலக்கியுள்ளார் என அசோசியேட் பிரஸ் தனது செய்தியில் கூறியுள்ளது. கடந்த ஜூன் பதினைந்தாம் தேதி அதிபர் ஷி ஜின்பிங் எழுபது வயதை எட்டினார். அமெரிக்கா, இங்கிலாந்து என பல்வேறு நாடுகளுடன பகை ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டில் பொருளாதாரம் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது. அந்த நேரத்தில் அழுத்தத்தை சமாளித்து அதிகாரத்திலும் இருக்கிறார் ஷி ஜின்பிங். ஷி ஜின்பிங்கிற்கு எழுபது வயதாகிவிட்டது. அடுத்த அதிபராக யார் வருவார் என்ற கோணத்தில் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையாளர்   சுன் ஹான் வாங் பார்டி ஆஃப் ஒன் என்ற நூலை எழுதியிருக்கிறார். அதில் அடுத்து அதிபராக வருபவரின் சாத்தியங்களை அலசியிருக்கிறார். உண்மையில், சீனாவில் அட...