இடுகைகள்

கூட்டுறவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பால் உற்பத்தியில் இந்தியா சாதித்த வெற்றிக்கதை! - இந்தியா 75

படம்
  இந்தியா 75 கூட்டுறவு நிறுவனங்களின் வெற்றிக்கதை.  குஜராத்திலுள்ள கைரா என்ற மாவட்டமே கூட்டுறவு அமைப்பு முறையில் பால் உற்பத்தியாளர் சங்கங்களை அமைக்க முக்கிய காரணம். இதனை நிர்வாகம் செய்த கேரளத்தை பூர்வீகமாக கொண்ட வர்க்கீஸ் குரியன், ஏழை மக்களை சுரண்டிய பால் நிறுவனங்களை விரட்டியடித்தார். தற்சார்பான பொருளாதாரத்தை அமுல் நிறுவனம் மூலம் சாத்தியப்படுத்தினார். இந்தியா 75 என்ற வரிசையில் அமுலின் கதை முக்கியமானது.  இந்தியா இன்று பால் உற்பத்தி துறையில் முக்கியமான நிறுவனமாக உள்ளது. அதுவும் தனியார் நிறுவனங்களை தாண்டி வெற்றித்தடங்களை பதித்துள்ளது. இந்த நிறுவனம் இப்போது பிஸ்கெட்டுகள், பிரெட், சாக்லெட் என பல்வேறு துறைகளிலும் கால் பதித்து வருகிறது. ஆனால் இதற்கான தொடக்கம் என்பது மிக எளிமையாகவே இருந்தது.  வர்க்கீஸ் குரியன், திரிபுவன்தாஸ் படேல், ஹெச்எம் தலாயா தற்போதைய ஆனந்த் என்ற இடத்தில் உள்ள கிராமங்களில் இருந்து தினசரி 250 லிட்டர் பாலை கைரா மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கம் பெற்று விற்று வந்தது. ஆங்கிலேயர் காலத்தில் ஏகபோக நிறுவனமாக இருந்தது பாய்சன் டைரி என்ற நிறுவனம். இந்த நிறுவனம் பால் உற்பத்தியாளர்களுக்கு

கூட்டுறவு அமைப்புகளை காப்பாற்ற அமித்ஷா வருகிறார்!

படம்
  கூட்டுறவு  அமைப்புகளை வலுப்படுத்த புதிய துறை! கூட்டுறவு அமைப்புகள்  விவசாயத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வந்தது. தற்போது கூட்டுறவு சங்க அமைப்புகளை நாடெங்கும் விரிவுபடுத்தும் பொருட்டு, அதனை தனி அமைச்சகமாக மாற்றியுள்ளனர்.  கூட்டுறவு முறை வலுவாக செயல்படுவது மகாராஷ்டிரா, கர்நாடகம், குஜராத் ஆகிய மாநிலங்களில் மட்டுமே. இதனை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தற்போதைய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொறுப்பேற்று வழிநடத்த உள்ளார். கூட்டுறவு முறை இந்தியாவுக்கு ஏற்கெனவே அறிமுகமான முறை. இதில் பங்கேற்கும் பலரும் தொழிலுக்கான பொறுப்பை ஏற்கிறார்கள். எளிதாக வணிகம் செய்யும் முறையில் கூட்டுறவு சங்க அமைப்பில் தொழில்தொடங்குவது அவசியம் என கூட்டுறவுத்துறை சார்பில் பத்திரிகைகளுக்கு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  பட்ஜெட்டில் கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்துவது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருந்தார்.  குறிப்பிட்ட நோக்கத்திற்காக மக்கள் அனைவரும் இணைந்து உழைப்பதே கூட்டுறவு முறை. இந்த முறையில் பால், சர்க்கரை, வங்கி ஆகிய துறைகள் சிறப்பாக இயங்கி வருகின்றன. நாட்டில் தற்ப

நவீன ஜனநாயக இந்தியாவிற்கான கனவு எளிதாக இருக்கப்போவதில்லை! - ஜவாகர்லால் நேரு

படம்
              விதியுடன் ஒரு போராட்டம் ! பல்லாண்டுகளுக்கு முன்னர் இந்தியா விதியுடனான போராட்டத்தை தொடங்கியது . அதற்கான உறுதிமொழியையும் எடுத்தது . இன்று நாம் அதே நிலையை எட்டியுள்ளோம் . முன்னர் நாம் செய்த உறுதிமொழியைப் போல அல்லாமல் இம்முறை தற்போதைய சூழலுக்கு ஏற்ப போல முடிவெடுக்கலாம் . முழு உலகமும் அமைதியாக உறங்கும் நேரம் இந்தியா தனது சுதந்திரம் மற்றும் வாழ்க்கைக்காக விழித்திருக்கிறது . இத்தனை ஆண்டுகாலமாக கஷ்டப்பட்டு வந்த மக்கள் பழைய காலம் முடிந்து அனைவரும் புதிய உலகில் நுழைகிறோம் . நாம் இந்தியாவிற்கான சேவைக்கு நம்மை ஒப்படைத்துக்கொள்வதோடு , ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தீர்க்கவும் உறுதிபூணவேண்டும் . இந்தியாவின் வரலாற்றில் நாம் கண்டறிய முடியாத நூற்றாண்டுகளாக வெற்றியும் தோல்வியும் உள்ளன . அதிர்ஷ்டம் அல்லது துரதிர்ஷ்டமான நிகழ்ச்சிகள் நடந்தபோதும் இந்தியா தனது பார்வையை இழக்கவில்லை . அவற்றின் வழியே தன்னை மீண்டும் கண்டுபிடித்துக்கொண்டது . நாம் இன்று இந்தியாவின் சாதனைக்காக கொண்டாடிக்கொண்டிருந்தாலும் இன்னும் பெரும் சாதனைகள் எதிர்காலத்தில் நமக்காக காத்திருக்கின்றன . எதிர்காலத்தில

பால் மனிதர் குரியன்! - வர்க்கீஸ் குரியனின் சாதனை ’அமுல்!’

படம்
வெண்மைப்புரட்சியின் தந்தை வர்க்கீஸ் குரியன்  பிறந்த தினம் இன்று. இன்று பிராந்திய பொருளாதார ஒப்பந்தம் உள்நாட்டு வேளாண்துறையை, பால்துறையை பாதிக்கும் என்று கூறி அதனை தடுக்கின்றனர். இதேபோன்ற சிக்கலை அன்று அமுலின் தலைவரான வர்க்கீஸ் குரியன் சந்தித்தார். அறுபது ஆண்டுகளுக்கு முன்பு நியூசிலாந்திலிருந்தும், ஐரோப்பாவிலிருந்தும் பால் பொருட்கள் இந்தியாவில் இறக்குமதியாகிக் கொண்டிருந்தன. இவை அரசுக்கு உதவினாலும் விவசாயிகளுக்கும் பால் உற்பத்தியாளர்களுக்கும் எந்த ஆதரவையும் வழங்கவில்லை. காங்கிரசின் திரிபுவன்தாஸ் படேலின் ஆதரவில் கைரா மாவட்டத்தில் பல்வேறு ஊக்கமூட்டும் செயல்பாடுகளை குரியன் செய்தார். அனைத்தும் தன்னுடைய மேதமையை உலகிற்கு சொல்வது அல்ல. மக்களுக்கு உதவுவதாகவே அமைந்திருந்தன. கைரா பால் உற்பத்தியாளர் சங்கத்தை திரிபுவன்தாஸ் படேலின் ஆதரவுடன் வர்கீஸ் குரியன் உருவாக்கினார். இன்று அமுல் உலகின் முக்கியமான பால் பொருட்கள் விற்பனை நிறுவனமான உள்ளது. தனியார் நிறுவனம் போல செயல்பட்டாலும் கூட்டுறவு அமைப்பாக மக்களின் நலன்களுக்கானதாக உள்ளது. 1964ஆம் ஆண்டு, பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி கை