இடுகைகள்

சீரியல் கொலைகார ர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சைக்கோ டைரி - கொலையும் அதன் பின்னணியும்

படம்
      சைக்கோ டைரி ஒரு கொலை நடக்கிறது . அதுவும் பெ்ண இறந்துபோய் கிடக்கிறார் . உடனே காவல்துறை என்ன செய்யும் தெரியுமா ? அந்த பெண் வல்லுறவு செய்யப்பட்டுள்ளாரா என்று பார்க்கும் . இப்படித்தான் பல்வேறு சைக்கோ கொலைகாரர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் . பெண்களை வல்லுறவு செய்து கொல்லும் கொலைகாரர்கள் , பெரும்பாலும் தன்பாலின விருப்பம் கொண்டவர்களாகவே இருப்பார்கள் என பல்வேறு வழக்கு முடிவுகள் நமக்கு காட்டுகின்றன . அப்படி இல்லாமல் இருபால் விருப்பமுள்ளவராகவும் இருக்க வாய்ப்புள்ளது . இதற்கு எடுத்துக்காட்டுகள் வேண்டுமே ? ஜெப்ரி டாமர் , வேய்ன் கேசி ஆகிய இருவரும் தன்பாலின விருப்பம் கொண்டவர்கள் . ஆனால் வேறுபாடு இவர்கள் கொலைசெய்ய தேர்ந்தெடுத்த ஆட்களிடம் உண்டு . டாமர் தன்பாலின விருப்பம் கொண்ட ஆண்களைத் தேர்ந்தெடுத்த தனது அறைக்கு கூட்டிச்சென்று கொன்றார் . வேய்ன் , சிறுவர்களை வேலைக்கு அமர்த்தி பிறகு சில்மிஷத்தை தொடங்கினார் . டாமர் தனது பாலின விருப்பத்தை வெளிப்படையாகவே சொல்லிவிட்டார் . ஆனால் அதனை மறைத்து வைத்திருந்தார் . இருமுறை திருமணம் செய்து பெற்ற மகள்களுக்கு அப்பாக இருந்தாலும் கூட தன்பாலின விருப்பத்தை மறைத்