சைக்கோ டைரி - கொலையும் அதன் பின்னணியும்

 

 

People, Knife, Stabbing, Stab, Kill, Murder, Man

 

சைக்கோ டைரி


ஒரு கொலை நடக்கிறது. அதுவும் பெ்ண இறந்துபோய் கிடக்கிறார். உடனே காவல்துறை என்ன செய்யும் தெரியுமா? அந்த பெண் வல்லுறவு செய்யப்பட்டுள்ளாரா என்று பார்க்கும். இப்படித்தான் பல்வேறு சைக்கோ கொலைகாரர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். பெண்களை வல்லுறவு செய்து கொல்லும் கொலைகாரர்கள், பெரும்பாலும் தன்பாலின விருப்பம் கொண்டவர்களாகவே இருப்பார்கள் என பல்வேறு வழக்கு முடிவுகள் நமக்கு காட்டுகின்றன. அப்படி இல்லாமல் இருபால் விருப்பமுள்ளவராகவும் இருக்க வாய்ப்புள்ளது.


இதற்கு எடுத்துக்காட்டுகள் வேண்டுமே? ஜெப்ரி டாமர், வேய்ன் கேசி ஆகிய இருவரும் தன்பாலின விருப்பம் கொண்டவர்கள். ஆனால் வேறுபாடு இவர்கள் கொலைசெய்ய தேர்ந்தெடுத்த ஆட்களிடம் உண்டு. டாமர் தன்பாலின விருப்பம் கொண்ட ஆண்களைத் தேர்ந்தெடுத்த தனது அறைக்கு கூட்டிச்சென்று கொன்றார். வேய்ன், சிறுவர்களை வேலைக்கு அமர்த்தி பிறகு சில்மிஷத்தை தொடங்கினார். டாமர் தனது பாலின விருப்பத்தை வெளிப்படையாகவே சொல்லிவிட்டார். ஆனால் அதனை மறைத்து வைத்திருந்தார். இருமுறை திருமணம் செய்து பெற்ற மகள்களுக்கு அப்பாக இருந்தாலும் கூட தன்பாலின விருப்பத்தை மறைத்து இயல்பான மனிதராக இருக்க முயன்றார்.


குழுவாக கொலை செய்யலாமா?


சைக்கோ கொலைகாரர்களைப் பொறுத்தவரை தனியாக இருக்கும்போதே முன்னர் கற்பனை செய்துவைத்த வரம்புகளை தாண்டவேண்டும் என நினைப்பார்கள். இதில் குழுவாக சேர்ந்தால் எப்படியிருக்கும்? நிலைமை மோசமாகத்தான் போகும். ஆண், ஆண், ஆண், பெண் என குழுவாக இணைந்து கொலைகளை செய்திருக்கிறார்கள் என்றாலும் இது எண்ணிக்கையில் குறைவுதான். இப்படியிருக்கும் உறவில் ஒருவர் தலைவராக இருப்பார்.


ஆண், பெண் குழுவில் கொல்லப்படுபவரை பெண்கள் ரசித்துக் கொன்றாலும் போலீசில் பிடிபடும்போது, எனது நண்பர் கொடூரங்களை சொல்ல கட்டாயப்படுத்தினார் என பெண்கள் சொல்லுவார்கள். இதனால் அவர்களுக்கு பெரும்பாலும் தண்டனை குறைவாகவே கிடைக்கும். பெண்கள் என்றால் நீதிதேவையும் தராசு தட்டை சற்றே தாழ்த்துவார் என்று யாரும் நினைத்துப் பார்க்கவே முடியாது. ஆண் இணையர்களைப் பொறுத்தவரை கொல்லுவது என்பது பொழுதுபோக்கான விளையாட்டுதான். வயது, கொடுமைகளின் அளவு, கொல்லப்படுபவரின் எதிர்வினை என நிறைய விஷயங்களை பெட் கட்டி விளையாடுவது இவர்களுக்கு பிடித்தமானதாக இருக்கும். உதாரணமாக ராய் நோரிஸ், லாரன்ஸ் பிட்டேக்கர் என்ற இருவரும் பதிமூன்று வயது முதல் இருபது வயது வரையிலான பெண்களை கடத்தி வல்லுறவு செய்து கொல்ல முடிவெடுத்தனர். 19 பெண்களை அனுபவித்துக் கொன்றாலும் வேகமாக லட்சியத்தை அடைய ஆசைப்பட்டதால் காவல்துறையில் மாட்டிக்கொண்டரர். இவர் நெடுஞ்சாலையில் தங்களது மர்டர் மேக் என்ற வேனை வைத்து கொடூர கொலைகளை செய்தனர்.


சைக்கோ கொலைகாரர்களின் வயது 20 முதல் 35 வரையில்தான் உள்ளது?


பொதுவான ஆவணங்கள் அடிப்படையில் இப்படி கூறுகிறார்கள். ஆனால் இது உண்மை அல்ல. இருபது வயதில் ஆண்களுக்கு வாகன வசதிகள் பெருமளவு கிடைக்காது. பெரும்பாலான கொலைகாரர்கள் ஏராளமான கொலைகளை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு பிடிபட்டபோது அவர்களுக்கு வயது 35 ஆக இருந்த்து. இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு நோய், தண்டனை உள்ளிட்ட காரணங்களால் அதற்கு மேல் வாழ வழியில்லாமல் போய்விட்டது. இந்த வயது வரம்பு இல்லாமல் கூட நிறைய கொலைகாரர்கள் கொலைகளை செய்து பிடிபட்டுள்ளனர்.


எண்ணிக்கை


சைக்கோ கொலைகார ர்களின் எண்ணிக்கை இப்போது அதிகரித்துள்ளதாக பலரும் கூறி வருகிறார்கள். இந்த நேரத்தில் நீங்கள் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். மக்கள்தொகையும் பெருமள்வு அதிகரித்துள்ளதால் சைக்கோ கொலைகாரர்களின் எண்ணிக்கையும் கூடியுள்ளது. நீங்கள் குக்கிராமம் ஒன்றில் வாழ்கிறீர்கள் என்றால் அங்கு வாழும் பெரும்பாலான ஆட்களை எளிதாக கண்டுபிடித்துவிடுவீர்கள். சிறிய இடத்தில் குறைந்த எண்ணிக்கையில் மக்கள் இருந்தால் என்ன செய்தாலும் உடனே அனைவருக்கும் தெரிந்துவிடும். எதையும் மறைக்க முடியாது. ஆனால் பல லட்சம் வசிக்கும் நகரில் கொலைகளை எளிதாக செய்து அதனை மறைக்க முடியும். உடலைக்கூட எளிதாக கைவிடப்பட்ட இடங்களில் எறிந்துவிடலாம். தடயங்களை வைத்து பிடிக்க முயல்வதும் எளிதாக இருக்காது. ஆனால் இப்போது ஊடகங்கள் பெருகிவிட்டால், சீரியல் கொலைகார ர்களை எளிதாக பிடித்துவிடும் வாய்ப்பு கூடியுள்ளது. கொலையானவர்கள் பற்றிய செய்தியை அனைவருக்கும் எளிதாக கூற முடிகிறது.


victor kamezi


கருத்துகள்