நுரையீரலும் எலும்பும் உடலுக்கு செய்யும் பணிகள் என்ன?

 

 

 

 

K-DRAMA: Park Shin Hye se hace prueba de Covid tras caso ...

 

 

மூச்சு அமைப்புகள்


காற்றிலுள்ள வாயுக்களை சுத்திகரித்து ரத்தத்தில் தூய ஆக்சிஜனை சேர்க்க உதவுகிறது. இந்த அமைப்பு இல்லாதபோது, ஒருவர் தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் உயிருக்கு் போராடும் நிலை ஏற்படும்.


பிறந்த குழந்தை பத்தாவது நொடியில் பூமியில் முதல் மூச்சை இழுக்கத் தொடங்குகிறது. கருப்பையில் இருந்த திரவங்கள் மெல்ல வெளியேற்றப்பட காற்று நுரையீரலில் நிரம்புகிறது. இனிமேல் அந்த குழந்தை வளர்ந்து முதியவராக இறக்கும் வரை நுரையீரல் ஆக்சிஜனை ரத்தத்தில் சேர்த்தும், கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றியும் வேலை செய்யும். இந்த வேலை எப்போதும் நிற்காது.


ஒரு நிமிடத்திற்கு இருபது முறை என எண்ணற்ற முறை நுரையீரல் துடிக்கிறது. ஆறு நிமிடங்கள் உடலுக்கு ஆக்சிஜன் போகவில்லையென்றால் உடனே செல்களில் உள்ள நச்சு உடலில் பரவுகிறது. மூளை மற்றும் இதயம் மெல்ல செயலிழக்கத் தொடங்குகிறது.


உடலில் நடைபெறும் மூச்சு தொடர்பான பணிகள் அனைத்துமே மூளையால் தன்னிச்சையாக செயல்படுத்தப்படுகிறது. அதேசமயம், மூச்சை செய்யும் வேலைக்கு ஏற்ப ஒழுங்குபடுத்திக்கொள்ள முடியும். நீச்சலடிக்கும்போது இதனை ஒருவர் மூச்சை அடக்கிக்கொண்டு இருந்து இதனை சோதித்துப்பாருங்கள். உடல் செய்யும் வேலைகளுக்கு ஏற்ப ஆக்சிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு வாயு அளவு மாறி வரும்.


பூச்சிகளுக்கு நுரையீரல் கிடையாது. அவை உடலிலுள்ள துளைகள் வழியாக ஆக்சிஜனை உள்ளே இழுத்துக்கொள்கின்றன. தொன்மைக்காலத்தில் ஆக்சிஜன் வளிமண்டலத்தில் அதிகம் இருந்தது. அப்போது நுரையீரல் அமைப்பு இல்லாத பூச்சிகள் அளவில் பெரிதாக இருந்தது என கூறுகின்றனர். மூக்கின் வழியாக உள்ளே வரும் காற்று, ஈரப்பதமான பின்னரே மூச்சுக்குழாயுக்குள் செல்கிறது. நுரையீரலில் உள்ள திசுக்கள் மென்மையான காற்று நுழையக்கூடிய தன்மை கொண்டவை. வயது வந்தோர்க்கு இது 300 மில்லியன் என்ற அளவில் இருக்கும்.


ஒரு நொடிக்கு ஏழு லிட்டர் அளவிலான காற்றை சுத்திகரித்து கையாள்கிறது. வெளியுலகிற்கும் உடலிற்குமான இடைமுகமாக நுரையீரல் செயல்படுகிறது. உணவு, காற்று என இரண்டின் வழியாக வரும் பாதிப்புகளை தடுக்க நுரையீரல் முதலில் செயலாற்றுகிறது. காற்றில் நைட்ரஜன், கார்பன்டை ஆக்சைடு, வைரஸ், புகை, தூசி, பாக்டீரியா என நிறைய விஷயங்கள் உள்ளன. இவற்றை தடுத்து ரத்தவோட்டத்தில் கலக்காமல் பார்த்துக்கொண்டு உடலைக் காப்பது நுரையீரல்தான்.


தினசரி இருபது சிகரெட்டுகளை இருபது ஆண்டுகளுக்கு குடித்தாலும் கூட ஒருவர் இறந்துபோகாமல் இருப்பதற்கு முழுமையான காரணம், நுரையீரல்தான். இதில் தினசரி 1.5 லிட்டருக்கு சளிபோன்ற திரவத்தை சுரக்கிறது. இதுவே காற்று வழியாக செல்லும், நாம் விழுங்கும் பொருட்களிலுள்ள ஆபத்தான கிருமிகளை அழிக்கிறது. மூக்கு, வாயில் உட்செல்லும் கிருமிகள் வயிற்றிலுள்ள அமிலத்தில் கரைத்து அழிக்கப்படுகின்றன.


நுரையீரல் சார்ந்த அனைத்து வியாதிகளுக்கும் வெளியிலுள்ள மாசுகள் மட்டும் காரணமல்ல. ஒருவரின் மரபணு சார்ந்த பிரச்னைகளும் ஆஸ்துமா, நுரையீரல் குறைபாடுகள், நோய்கள் ஆகியவற்றுக்கு காரணமாக உள்ளன. காற்று மாசுபாட்டில் நைட்ரஜன் ஆக்சைடு, கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டைஆக்சைடு ஆகியவை முக்கியமானவை. இதன் காரணமாக 4 மில்லியன் குறைப்பிரசவங்கள் உலகம் முழுக்க நடைபெறுகின்றன.


சயின்ஸ் போகஸ்


டாம் அயர்லாந்து


==================================

 

Fierce Ha Ji Won for "Secret Garden" | Soompi

எலும்பு அமைப்புகள்


உடலிலுள்ள எலும்பு அமைப்புகள்தான் நாம் தினசரி நமது பணிகளை செய்து வர உதவுகின்றன. வடிவம், கால்சியம், மெக்னீசியம் ஆகிய சத்துக்களை தேக்கி வைப்பது, உடலில் உள்ள ஹார்மோன்களை கட்டுப்படுத்துவது என நிறைய பணிகளை எலும்பு அமைப்புகள்தான் செய்கின்றன.


பிறக்கும்போது மனிதர்களின் தலையில் 300 எலும்புகள் இருக்கும். இதில் சில எலும்புகள் மட்டுமே வளர்ந்து காலம் முழுக்க தலையில் இருக்கும். மீதி இருக்கும் எலும்புகள் காலப்போக்கில் தானாகவே தேவை முடிந்ததும் அழிந்துவிடும்.


உடலிலுள்ள 206 எலும்புகளில் 106 எலும்புகள் கைகள் மற்று்ம் கால்களில் உள்ளன. அனைத்து எலும்புகளுக்கும் வேலைகள் உள்ளன. உடலிலுள்ள எந்த எலும்பும் தேவையில்லாமல் இல்லை. எலும்புகளும் இணைப்புகளும் இல்லாதபோது உடலை இயக்குவது கடினமாகவே இருக்கும். எலும்புகளில் உள்ள கொலாஜென் எனும் புரதமே எலும்புகளின் நெகிழ்வுத்தன்மைக்கு காரணம்.


ஆண்களின் உடலிலிருந்து பெண்கள் வேறுபடுவது அவர்களின் பெல்விஸ் எலும்பு அமைப்பில்தான். பெண்களுக்கு கருவை தாங்கும் வகையில் வலிமையான இடும்பெலும்பு உண்டு. இதன் எடையும் அதிகம். கால்களை அசைக்கவும், குதிக்கவும் ஆண்களை விட பெண்களுக்கான எலும்பில் நெகிழ்வுத்தன்மை அதிகம். பெண்களுக்கு பதினெட்டு வயதில் முழுமையான எலும்பு வளர்ச்சி கிடைத்துவிடும். ஆண்களுக்கு சில ஆண்டுகள் கழித்தே எலும்புகள் முழுமையான தன்மை பெறும். மத்திய வயதில் எலும்புகள் வலுவிழக்கத் தொடங்கும். பெண்களுக்கு மெனோபாசிற்குப் பிறகு இரண்டு முதல் மூன்று மடங்கு வரை எலும்புகளின் அடர்த்தி குறைந்து கொண்டே வரும்.




















கருத்துகள்