சீரியல் கொலைகாரர்கள் ஏழையா, பணக்காரர்களா ? - சைக்கோ டைரி

 









சைக்கோ டைரி

ஆபாசப்படங்களும் மனநிலையும்

இதற்கு பதில் சொன்னவுடன் நீங்கள் உங்களிடம் உள்ள பிளேபாய் இதழ்களையும், காமசூத்ரா படங்களையும் எரித்துவிடக்கூடாது. சீரியல் கொலைகாரர்கள் தாங்கள் செய்யும் அனைத்து செயல்களையும் எளிதாக அது சரிதான் என்ன தப்பு என்று வாதிடுவார்கள். எனவே இவர்களின் பதில்களை வைத்து நாம் எதையும் முடிவு செய்யமுடியாது. 

இளைஞர்கள் வளரும் பருவத்தில் ஆபாச இதழ்களை படுக்கையில் வைத்து படிப்பது இயல்பான ஒன்றுதான். பெரும்பாலான படங்களில் பெண்கள் நிர்வாணமாக இருப்பார்கள். உறுப்புகள் சில இடங்களில் மறைந்தும் மறையாமலும் இருக்கும். இதெல்லாம் இயல்பானதுதான். இணையத்தில் விரல் சொடுக்கும் நேரத்தில் ஒருவருக்கு ஆபாசப்படங்கள் கிடைத்துவிடுகின்றன. அதனை ஒருவர் பார்ப்பது, ரசிப்பது பிரச்னையில்லை. இதில் ஹார்டுகோர், ரேப் என்ற பிரிவுகளை திறந்து பார்த்துக்கொண்டிருந்தால் உடனே எச்சரிக்கையாவது அவசியம். தனக்கு நடக்கும் கொடுமைகளை ஒருவர் ஏற்றுக்கொள்வது போல ஆபாசப் படங்கள் இந்த பிரிவுகளில் இருக்கும். இதனை பார்க்கும் ஒருவருக்கு பெண்கள் இப்படிப்பட்ட கொடுமைகளுக்கு சரியானவர்கள், நடத்தை கெட்டவர்களை இப்படித்தான் நடத்தவேண்டும். ஏன் கொன்றால் கூட சரிதான் என்று எண்ணங்கள் உருவாகும். எனவே, இந்த நிலையில் ஒருவர் சுதாரித்து வெளியே வராதபோது அவருக்கு நிறைய பிரச்னைகள் ஏற்படும். 

சித்திரவதை செய்யப்பட்ட குழந்தைகள்

சில சீரியல் கொலைகாரர்கள், குடும்ப உறுப்பினர்களால் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டிருகிறார்கள். பெரும்பாலும் நிறைய பேர் குடும்ப கௌரவம் என்று இப்படிப்பட்ட சமாச்சாரங்களை எங்குமே சொல்லமாட்டார்கள். ஆனால் இந்த நிலை ஒருவரின் மனநிலையை நொறுக்கிவிடும். அவர்கள் இயல்பான மனநிலைக்கு வந்து உலகோடு ஒட்டி வாழ்வது கடினமானது. இதை சிறுவர்களிடம் அத்துமீறுபவர்கள் புரிந்துகொள்வதில்லை. 

சிறுவயதில் வல்லுறவு செய்யப்பட்டவர்கள், பாலியல் சீண்டலுக்கு ஆட்பட்டவர்கள் சீரியல் கொலைகாரர்கள் ஆவார்கள் என்பது பொதுவான நம்பிக்கைதான். இதில் உண்மை கிடையாது. பெரும்பாலும் பாலுறவை தேர்ந்தெடுப்பது தன்னை அதிகாரம் கொண்டவனாக பிறருக்கு காட்டத்தான். அதில் வேறு விஷயங்கள் இல்லை. காதலிக்கும் இருவர் ஈடுபடும் உடலுறவு என்பது இருவருக்குமான மகிழ்ச்சிதான். அப்படியான அனுபவமாகவே இருக்கும். ஆனால், சீரியல் கொலைகாரர்களைப் பொறுத்தவரை வலியில் இன்பம் காண்பவர்களாக இருப்பார்கள்.  இவர்கள் ஈடுபடும் பாலுறவு என்பது வலிநிரம்பிய வேதனை தரும் அனுபவமாகவே இருக்கும். 

இயல்பான மனிதர்கள்


சீரியல் கொலைகாரர்களைப் பொறுத்தவரை அவர்களது மனநிலை, செய்யும் செயல்கள்தான் ஆபத்தானவையாக இருக்கும். மற்றபடி அவர்கள் நல்ல வீடுகளில் தங்கியிருப்பார்கள். சாப்பிடுவார்கள். சினிமாவுக்கு போவார்கள். அவர்களுக்கென குடும்பம் கூட இருக்கும். ஆனால் இதெல்லாம் கொலைகளை செய்வதற்கு இடையிலான நேரம்தான். ஒருவரைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அவருடன் அதிக நாட்களை செலவிட்ட நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோரிடம் கேட்டால் தெரிந்துவிடும். இதில் பிள்ளைகள் மீது பாசம் கொண்ட அம்மா இருப்பதால், அவரிடம் கருத்து கேட்பதில் எந்த பிரயோஜனமுமில்லை. 

ஏழையா, பணக்காரனா?

ஒருவர் வேலையை செய்து சம்பாதிக்க மனநிலை முக்கியம். சீரியல் கொலைகார ர்களுக்கு இந்த மனநிலை என்பது சீராக இருக்காது. எனவே வேலைகளில் தங்கியிருக்க மாட்டார்கள். கொலை செய்யப்பட்டவர்களிடமிருந்து பொருட்களை திருடி வாழ்வார்கள். ஜான் வேய்ன் கேசி என்பவர், சீரியல் கொலைகாரர். ஆனால் இவர் தனது கட்டுமானத்தொழிலை வெற்றிகரமாக நடத்தியவர்தான். சிறுவர்களை வேலைக்கு எடுத்து அவர்களை சித்திரவதை செய்து கொன்றது பின்னர்தான் அனைவருக்கும் தெரிந்தது. பெரும்பாலும் சிறுவர்களுக்கு சம்பளத்தை தரவில்லை. 

பெரும்பாலான சீரியல் கொலைகார ர்கள் அதிக வருமானம் கொண்டவர்களாக இருப்பது இயல்பானது அல்ல. அப்படி இருந்தால் அவர்களை லேட் பூமர் என்று கூறலாம். கொலை செய்யும் மனநிலையை ஆற்றுப்படுத்தி படித்து வேலையை செய்துகொண்டிருப்பார்கள். கொலை செய்யும் வேகம் அதிகமாகும்போது இவர்களால் தங்களை வேலையில் தக்க வைத்துக்கொள்ள முடியாது. 

பேட் ப்ரௌன் - கில்லிங் ஃபார் ஸ்போர்ட் - இன்சைட் தி மைண்ட்ஸ் ஆப் சீரியல் கில்லர்ஸ் நூல்






 








கருத்துகள்

பிரபலமான இடுகைகள்