உலக நாடுகளை ஆண்ட ராணிகள்! - கிரேட் கேத்தரின், முதலாம் எலிசபெத், டாய்டு பெடுல், சீன ராணி வூ ஸெட்டியான்

 

 

 

Catherine The Great Biography - Childhood, Life ...

 

 

கிரேட் கேத்தரின்


ஜெர்மனியில் அரச குடும்பத்து இளவரசுக்கு மகளாக பிறந்தவர் கேத்தரின். இவர் ரஷ்யா நாட்டை கடந்த காலத்திலிருந்து எதிர்காலத்திற்கு அழைத்து சென்றவர் என்று கூறுகிறார்கள்.


சோபி அகஸ்டே என்ற பெண்மணி ஜெர்மனியில் 1729ஆம் ஆண்டு பிறந்தவர். இவரை பதினைந்து வயதில் ரஷ்யாவுக்கு திருமணம் செய்விக்க அழைத்தனர். மாப்பிள்ளை பீட்டர். மாப்பிள்ளை பெண் என இருவருமே அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். மாப்பிள்ளையின் தாய் எலிசபெத்தான் திருமணத்திற்கான தானாவதி.


1745ஆம் ஆண்டு பீட்டருடன் திருமணம் நடைபெற்றது. அதற்குப் பிறகுதான் சோபிக்கு கேத்தரின் என்ற பெயர் சூட்டப்பட்டது. பீட்டரும் ஜார் மன்னராக மாறினார். ஜார் என்றால் பேரரசர் என்று பொருள். ஜார் மன்னருடன் கேத்தரினுக்கு பிரச்னை தொடங்க, அவரை மன்னர் பதவியிலிருந்து விலக்கி கைதுசெய்து சிறையில் தள்ளினார் கேத்தரின். பிறகு அரியணை ஏறி ராணியானார். ரஷ்யாவின் ராணி என்றால் அழகாக இருக்கும். அடுத்த முப்பது ஆண்டுகள் பதவியில் இருந்து ரஷ்யாவை ஆண்டார்.


கேத்தரின் நாட்டில் ஏராளமான சீர்திருத்தங்களை தொடங்கினார். அதில் முக்கியமானது கல்வி மற்று்ம் கலை தொடர்பானது. பள்ளிகளை நகரமெங்கும் திறந்தார். அடுத்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரை கலாசார மையமாக அறிவித்தார். ராணிக்கு கலைகள் மீது பேரார்வம் இருந்தது.


34 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவர் ஏராளமான நூல்களையும் எழுதியுள்ளார். இவர் என்லைட்மென்ட் என்ற இயக்கத்தை தொடங்கினார். இந்த இயக்கம் உலகமெங்கும் உள்ள அரசியல், அறிவியல், த த்துவம் சார்ந்த விஷயங்களை விவாதித்தது. பிரெஞ்சு தத்துவவியலாளர்களான தியோடர் வால்டேர் ஆகியோருடன் அறிவுசா்ர்ந்த தொடர்பு ராணிக்கு இருந்தது.


கலைப்பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் கொண்ட ராணி கேத்தரின் அருங்காட்சியகங்களை உருவாக்கினார். 1796ஆம் ஆண்டு வாதம் வந்து இறந்துபோனார்.


தங்க இழைகளைக் கொண்டு போர்த்தப்பட்டு கல்லறையில் புதைக்கப்பட்டார் ராணி.


நாடு எந்த பாதையில் செல்லவேண்டும் என்பதை கல்வி, கலை, அறிவியல் விவாதங்கள் மூலம் நாட்டுக்கு சொல்லியவர் கேத்தரின்.



ஆறாவது நூ்ற்றாண்டைச் சேர்ந்த அரசி தியோடரா. இவர் தனது அரசியல் செல்வாக்கு, அதிகாரம் மூலம் பெண்களின் வாழ்க்கை நலமோடு இருக்க பல்வேறு சீர்திருத்தங்களை செய்தார்.


பிரெஞ்சு ராணி கேத்தரின் டி மெடிசி பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். மதம் தொடர்பான போர் நடக்கும்போது நாட்டை அதிகாரமாக வழிநடத்தினார்.இவரது மூன்று மகன்களுமே பிரான்சின் அரசர்களானார்கள்.


பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் மரியா தெரசா. நாற்பது ஆண்டுகள் ஆஸ்திரேலியாவை ஆட்சி செய்தவர் தேசிய அரசு, ராணுவத்தில் முக்கியமான மாற்றங்ளளை செய்தார்.


விக்டோரியா ராணி, அறுபத்து மூன்று ஆண்டுகள் வாழ்ந்தார். தனது பிரிட்டிஷ் அரசை பெருமளவு விரிவுபடுத்தினார்.




The Story Of Wu Zetian, China's First Female Emperor

2


வூ ஸெட்டியான்


சீனாவை ஆண்ட முதல் பெண்மணி



பிங்சூ என்ற ஊரில் பிறந்தார். கி.மு. 624 காலகட்டம். மன்னர் டாய்ஸாங்கின் இரண்டாவது மனைவியான பின்னரே நாட்டை எப்படி நிர்வாகம் செய்வது என கற்றுக்கொண்டார். கணவர் இறந்தபிறகு காவோசாங் என்பவர் வூவை தனது மனைவியாக்கிக் கொண்டார். வூ தனது செல்வாக்கை இக்காலகட்டத்தில் அதிகரித்துக்கொண்டு தனக்கென கூட்டணியை உருவாக்கினார். காவோஸாங் இறந்தபிறகு, வூ ஸெட்டியான் சீனாவின் ராணியானார்.


இன்று சீனா உருவாக்கத் துடிக்கும் பட்டு சாலையை ராணி தனது காலத்தில் திறந்து வைத்தார். இதனால் வியாபாரம் பெருகியது.


பதினைந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ராணி வூவின் காலம் பொற்காலம் என்றுதான் சொல்லவேண்டும். கல்வி, விவசாயத்தில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தினார். வெளிநாடுகளுடனா உறவு பற்றியும் அறிந்து அதனையும் தீர்மானித்தார். எதிரிகள் இவரது ஆட்சிப்பரப்பில் புகுந்து அதிகாரத்தை விட்டு இவரை அகற்றினர். அதிகாரம் கைவிட்டு போனபிறகு அதிக காலம் ராணி உயிருடன் இருக்கவில்லை.


அமைதி வளம் வளர்ச்சி என்ற சுலோகன் ராணி வூவின் ஆட்சிக்காலத்தில் உண்மையாகவே எடுபட்டது. நடைபெற்ற சம்பவங்களும் அதை நிரூபிக்கின்றன.



Taytu_Betul (1)crop - History of Royal Women

3


டாய்டு பெடுல்

அட்வா போரில் வெற்றியை நோக்கி வழிநடத்திய பேரரசி


நன்கு படித்தவர்கள் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் பெடுல், சாஹ்ல் மரியம் என்ற அரசரை திருமணம் செய்துகொண்டார். சேவா, எனும் பகுதியை மன்னர் ஆண்டு வந்தார். இது எத்தியோப்பியாவின் பகுதி.


1886இல். பெடுல் அடிஸ் அபாபா எனும் நகரை தலைநகராக்க மன்னருக்கு உதவினார். 1889இல் மன்னர் பேரரசர் இரண்டாம் மேனலிக் என பெயர் சூட்டிக்கொண்டார். இத்தாலி, எத்தியோப்பியாவை கையகப்படுத்த முயன்றபோது, பெடுல் நாம் போர் செய்யலாம் என மன்னரை ஒப்புக்கொண்டு முடிவெடுக்க வைத்தார்.


பெடுல், எத்தியோப்பியா எப்போதும் ஐரோப்பாவின் காலனி நாடாக இருக்கக் கூடாது என்று நினைத்தார். அதற்காகவே போராடினார். இவரது, ராணுவ கொள்கைகள் நாட்டைக் காப்பாற்றின.


தனக்கான படைகளை உருவாக்கி இத்தாலியோடு போராடி வென்றார். இது ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கையாக அமைந்தது. போருக்குப் பிறகு பெடுல், நாட்டை நவீனமயமாக்கவும், வர்த்தக வாய்ப்புகளை அதிகரிக்கவும் முயன்றார்.



queen elizabeth 1 - Kings and Queens Photo (9843855) - Fanpop

4


ராணி முதலாம் எலிசபெத்


44 ஆண்டுகளாக ஆட்சி செய்து இங்கிலாந்தை வலுவான அதிகாரம் கொண்ட நாடாக மாற்றினார்.


ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ராணி மேரிதான் எலிசபெத்தின் வாழ்நாள் எதிரியாக இருந்தார். அவரை எலிசபெத் சந்தித்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


எலிசபெத்திற்கு இரண்டு வயதாகும்போது அவருடைய தந்தையான மன்னர் எட்டாம் ஹென்றியும், அவரது மனைவியும் தூக்கிலிடப்பட்டனர். பிறகு அரசை ஆள ஆண் வாரிசு இல்லாத நிலையில் எலிசபெத்தும் அவரது சகோதரி மேரியும் அரசு விவகாரங்களிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டனர். மேரி 1558ஆம் ஆண்டு இறந்தபிறகு எலிசபெத் ராணியாக அரியணை ஏறினார்.


எலிசபெத்தின் சகோதரி மேரி காலத்தில் கத்தோலிக்கர்கள், புரோடெஸ்டெண்டுகள் ஆகியோருக்கு இடையில் பூசல்கள் இருந்தன. எலிசபெத் தனது ஆட்சிகாலத்தில் அவற்றை சரிசெய்தார். இங்கிலாந்தின் பொருட்களை வெளிநாட்டில் விற்கவும் சந்தை கிடைத்தது. வில்லியம் ஷேக்ஸ்பியர் போன்றார் கலாசாரம் சார்ந்த வளர்ச்சிக்கு பெரிதும் பங்களித்தனர்.


எலிசபெத்தின் சகோதரி புரோடெஸ்டெண்டுகளை கடுமையாக தண்டித்து ஆட்சியை நடத்தியதால், அவரை பிளடி மேரி என்று அழைத்தனர்.


வில்லியம் சிசில் என்பவர்தான் எலிசபெத்திற்கு ஆலோசகராக பணியாற்றிய நம்பிக்கைக்குரிய நபர்.


எலிசபெத் இங்கிலாந்து ராணி என்றாலும் அவரின் உடை அலங்காரங்கள் மேனரிசம் என பலவற்றையும் அன்றைய மக்கள் அப்படியே காப்பியடித்தனர். அவருடைய பற்கள் கெட்டுப்போய் கருப்பானபோது அதைப்போல தங்கள் பற்களையும் மாற்றிக்கொண்ட வெறிபிடித்த ரசிகர் கூட்டம் அவருக்கு இருந்தனர். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த உறவினரான ராணி மேரி, முதலாம் எலிசபெத்தை இங்கிலாந்தின் அரியணையிலிருந்து அகற்ற பல்வேறு முயற்சிகளை செய்தார். இதனால் எலிசபெத், அவரைக் கொலல முடிவெடுத்தது முக்கியமான நிகழ்ச்சி.


ஸ்பெயினைச் சேர்ந்த மன்னர் பிலிப், இங்கிலாந்தைக் கைப்பற்ற 1588இ்ல் முடிவெடுத்து உடனே படைகளை அனுப்பினார். கடல் வழியே வந்த 130 கப்பல் படை வீர ர்களை இங்கிலாந்து கடற்படை அடித்து விரட்டி தேசத்தைக் காப்பாற்றியது. இது எலிசபெத்திற்கு முக்கியமான ராணுவ வெற்றி.



Sacagawea - Facts, Death & Husband - Biography

சாகாகாவியா


அமெரிக்காவைச் சேர்ந்த பழங்குடியினர்.


1788ஆம் ஆண்டு சாகாகாவியா பிறந்தார். ஷோசோன் பழங்குடியைச் சேர்ந்தவரான இவருக்கு பனிரெண்டு வயதாகும்போது, எதிரி குழுவான ஹிடாஸ்டா இவரை சிறைபிடித்து கடத்தியது. சில ஆண்டுகளுக்குப் பிறகு இவரை கனடாவைச் சேர்ந்தவர் திருமணம் செய்துகொண்டார்.


இவர், தனது கணவர் மகனோடு அமெரிக்க கண்டுபிடிப்பாளர்களான மெரிவெதர் லூயிஸ், வில்லியம் கிளார்க் ஆகியோரை 1804 அன்று சந்தித்தார். அமெரிக்காவின் மேற்குப்பகுதியை காண அனைவரும் ஒன்றாக சேர்ந்து பயணித்தனர். இந்த பயணத்தில் பழங்குடிகள் சாகாகாவியாவுடன் வந்த அமெரிக்கர்களை தாக்காமல் வரவேற்றனர்.

பனிரெண்டு வயதில் தனது இனத்தை விட்டு விலகியவர் தனது சகோதரரை நாடு தேடும் பயணத்தில் கண்டுபிடித்தார். அவரது சகோதரர், இனத்தின் தலைவராக இருந்தார்.


பசிபிக் கடல் வரை இந்த குழுவினரின் பயணம் தொடர்ந்தது. ஏழு மாதங்களாக பயணம் செய்து பல்லாயிரக் கணக்கான தொலைவை கடந்திருந்தனர். இப்பயணத்திற்கு பிறகு சாகாகாவியா சில ஆண்டுகளே உயிரோடு இருந்தார். தனது 25 வயதில் காலமானார். இவரது இரு குழந்தைகளை வில்லியம் கிளார்க் கவனித்துக்கொண்டார்.


அமெரிக்க அரசு, சாகாகாவியாவை பெருமைப்படுத்தும் விதமாக 2000ஆவது ஆண்டில் நாணயத்தில் அவரது உருவத்தை பொறித்தது.





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்