அலர்ஜி ஏற்படுவதில் மரபணுக்களின் பங்கு!

 

 

 Stitches, Pustules, Mosquito Bites, Bug Bites, Poor

 

 

 

உடலில் அலர்ஜி பாதிப்பு ஏற்படும்போது ஹிஸ்டமைன் என்ற ஹார்மோன் உடலில் எரிச்சல், வீக்கம் என சில பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதன் பணி என்பது உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதல்ல. அலர்ஜி ஏற்படும்போது மட்டும் இப்படி நட்டு கழன்றது போல நடந்துகொள்ளும். இதயத்திலுள்ள மின்தூண்டல் அளவு, ரத்த அழுத்த அளவு, வயிற்றிலுள்ள சீரணிக்கும் அமில அளவு ஆகிய்வற்றை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் ஹார்மோன் இதுதான். ஹிஸ்டாமைன் என்பதற்கென தனி இடம் கிடையாது. அனைத்து இடங்களிலும் பரம்பொருள் போலவே பார்க்க கிடைக்கும்.


அலர்ஜி பாதிப்பு ஏற்படும் என்றால் அனைத்து பொருட்களும் உயிர் போகும் அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது. சில பொருட்கள் அலர்ஜி ஏற்படுத்துபவை என்றாலும் கூட அறிகுறிகளே இருக்காது. சில பொருட்கள் மட்டும் உயிரிழப்பு ஏற்படும் அளவுக்கு சித்திரவதை செய்துவிடும்.


பொதுவாக உடனடியாக அலர்ஜி பாதிப்பு ஏற்படும் என்றால் இரண்டு மணிநேரம் தேவை. அதிகபட்சமாக ஆறு மணிநேரங்களில் அலர்ஜி பாதிப்புள்ளவருக்கு அறிகுறிகள் தெரியத் தொடங்கும். ஆ்ஸ்துமா இந்த வகையில் சற்று தாமதமாக பாதிப்பைத் தொடங்கினாலும் அதிகளவு பாதிப்பை நோயாளிக்கு ஏற்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு செல்கள் மற்றும் ரத்த செல்களில் காணப்படும் புரதங்களான சைடோகைன்கள், கீமோகைன்கள், நோய் எதிர்ப்பு சக்தியை பெருமளவு முடுக்கி விடுகின்றன. இவை ஹிஸ்டாமைனை விட தீவிரமான செயல்பாட்டைக் கொண்டவை.


நீண்ட கால அடிப்படையில் அலர்ஜி பாதிப்புகள் வெளியே தெரியும்போது ஒருவருக்கு உடலில் ஏற்படும் பாதிப்புகள் சிகிச்சை செய்வதற்கு கடினமானவைவாக மாறுகின்றன. இதற்கு காரணமாக புதிதாக அறைக்கு பூசிய பெயின்ட், தூசி, பூவிலுள்ள மகரந்தம், சிகரட்டின் புகை, டியோடிரண்ட் ஆகியவை காரணமாக அமையலாம். இவை அலர்ஜி பாதிப்பு இல்லாதவர்களுக்கும் கூட பாதிப்பை ஏற்படுத்தலாம். வெ்ள்ளை செல்களில் உள்ள இயோசினோபில்களை இவை உசுப்பினால் போதுமானது. இயோசினோபில் என்பவை உடலில் ஏற்படும் ஒட்டுண்ணி பாதிப்பு, அலர்ஜி, புற்றுநோய் ஆகியவற்றை நமக்கு அடையாளம் காட்டுபவை. இவை உடலில் எங்கு நோய் பாதிப்பு ஏற்படுகிறதோ அங்குதான் அதிகம் இருக்கும். இவைதான் அலர்ஜி பாதிப்புகளை தூண்டிவிட்டு பெரிதாக்குகின்ற வேலையைச் செய்கின்றன்.

Asthma, Inhaler, Medicine, Asthmatic, Medical

அலர்ஜி ஏற்படும் போது உடலில் முதல் அறிகுறிகளாக தோன்றுவது கண், மூக்கு ஆகிய பகுதிகளில் ஏற்படும் எரிச்சல், கண்களில் நீர் கொட்டுவது ஆகிய அறிகுறிகளைக் கொண்ட ரைனிட்டிஸ், தோலில் அரிப்பு, கொப்புளங்கள், இவற்றுக்கெல்லாம் அடுத்து ஆஸ்துமா பாதிப்பு. இவற்றையெல்லாம் பார்த்தாலே உடலின் நோய் எதிர்ப்பு சக்தி படுமோசமாக இருக்கிறது, செயல்படுகிறது என முடிவு செய்துவிடலாம். மேலே சொன்னது எல்லாம் அலர்ஜிக்கான பொது அறிகுறிகள்தான். இவை அப்படியே தொடர்ந்தால் அடுத்தடுத்து ஏற்படும் பாதிப்புகள் அலர்ஜிக் மார்ச் என்று கூறுகின்றனர். அதாவது அலர்ஜி பாதிப்பு உடல் முழுக்க மெல்ல பரவி உறுப்புகளை பாதிக்கும் காலம் என இதனைப் புரிந்துகொள்ளலாம்.


அலர்ஜி உடலில் நீண்டகாலம் இருந்தால் ஆஸ்துமா போன்ற குணப்படுத்த முடியாத நோயை உருவாக்கும். இதற்கான தீர்வைக் கண்டுபிடிக்காதபோது, உடனே சிகிச்சை அளிக்காதபோது சித்திரவதையான மரணம் நிச்சயம். சிலருக்கு அலர்ஜி பாதிப்பு மரபணுரீதியாக வருகிறது. இதனால் பெரும்பாலான மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் அலர்ஜி சிக்கல் உள்ளவர்களுக்கு, குறிப்பிட்ட பொருட்கள் பூமியில் நரகத்தைப் பார்த்தது போன்ற உணர்வை ஏற்படுத்தும். உடல் அப்போருட்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் ஏற்பாடுகளை செய்யத்தொடங்குவது தொடர்புடையவருக்கு சித்திரவதையாக இருக்கும்.

Disease, The Medicine, Health, Medications, Pain

1980 ஆம் ஆண்டிலிருந்து உலக நாடுகளில் அலர்ஜி பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. அமெரிக்காவில் ஐந்தில் ஒருவருக்கு அலர்ஜி பாதிப்பு இருப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்கள்.


தற்போது உலகளவில் அலர்ஜி பாதிப்பு 15 சதவீதம் இருப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்கள். இதற்கு காரணம், ஒரு பொருள் அல்லது பல பொருட்கள் என்று கூறுகிறார்கள். எதற்காக இப்படி அலர்ஜி உருவாகிறது என்பதற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. மரபணு ரீதியாக அலர்ஜி ஏற்படுமா என்பதை அறிவியலாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இதன்படி பெற்றோர் இருவருக்கும் அலர்ஜி இருந்தால் எழுபது சதவீதமும், ஒருவருக்கு மட்டும் இருந்தால் 48 சதவீதமும் அலர்ஜி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என கண்டுபிடித்திருக்கிறார்கள்.


அலர்ஜி ஏற்படுவதற்கு வயது தடையில்லை. சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை ஏற்பட வாய்ப்புள்ளது. வெளியிலுள்ள பொருட்கள் பாதிப்பை ஏற்படுத்துவதை போலவே ஒருவர் கடுமையான மன அழுத்தம், மனச்சோர்வு ஆகியவற்றை வாழ்க்கையில் எதிர்கொண்டு இருந்தாலும் அவருக்கும் அலர்ஜி தன் வேலையைக் காட்டும். எனவே, முடிந்தவரை வேலை, வாழ்க்கை இரண்டிலும் இயல்பான போக்கில் ஒருவர் இருப்பதும், இயங்குவதும் முக்கியம்.

அரசு கார்த்திக்

படம் - பிக்சாபே



கருத்துகள்