இடுகைகள்

ஸிசோபெரெனியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஸிசோபெரெனியாவில் காதில் கேட்கும் குரலால் கொலை செய்தவர்கள்!

படம்
  அமிஷ் எழுதிய சிவன் முத்தொகுதி நூலில் விகர்மா என்ற கருத்தை முன்வைக்கிறார். இதை தீண்டாமை என முற்போக்கு ஆட்கள் பொருள் கொள்ளவும் அதிக வாய்ப்புள்ளது. அதாவது, சமூகத்தில் முழுமையான செல்வங்களோடு ஊனப்படாமல், வாரிசுகளை இழக்காமல், கணவனை இழக்காமல் வாழ்பவர்கள் அரசின் பொது இடங்களில் புழங்கலாம். மேற்சொன்னபடி இல்லாமல் எதிர்மறையாக ஊனமானவர்கள், உறவுகளை இழந்த ஆதரவற்றவர்கள், கணவனை இழந்த பெண்கள் ஆகியோர் விகர்மா என அடையாளப்படுத்தப்பட்டு அவர்கள் வெளியே செல்வதற்கான தனிப்பட்ட நேரத்தை அரசு குறிப்பிடும். அப்போது மட்டுமே அவர்கள் வெளியே புழங்கலாம். மற்ற நேரங்களில் மூடப்பட்ட அறைகளில் தனியாக இருக்கவேண்டும். இவர்களுக்கு அரசு மானிய உதவிகளை வழங்கும். சிவன் இதை ஏன் என கேள்வி கேட்கும்போது, சமூக வாழ்க்கையை வாழ முடியாதவர்கள், உறவுகளை இழந்தவர்கள், குழந்தை இல்லாதவர்கள் ஆகியோர் மனதில் வருத்தம், சோகம் ஆகிய உணர்ச்சிகளை கொண்டிருப்பார்கள். இவர்களை பொது இடத்தில் புழங்கவிட்டால் ஆபத்துகளை ஏற்படுத்துவார்கள். பிறரின் மகிழ்ச்சியை குலைப்பார்கள் என அரசர் காரணம் சொல்லுவார். சிவன் எதற்கு இந்த சமூகத்தீமைக்காக இந்தளவு பொங்குகிறார் என்றால

இயற்கை பேரிடர்களைத் தவிர்க்க கொலை செய் என காதில் சொன்ன குரல் - முலின்

படம்
  அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான கோப்ரா பார்த்திருக்கிறீர்களா|? படம் நீளம் அதிகம். சுவாரசியம் குறைவு என வணிக ரீதியில் தோற்றுப்போய்விட்டது. நாம் அதைப்பற்றி கவலைப்பட வேண்டும். படத்தில் நாயகர்களில் ஒருவர் அதாவது கணக்கு ஆசிரியருக்கு ஸிஸோபெரெனியா இருக்கும். கற்பனை காட்சிகள் தோன்றும், மனதில் நிறைய பாத்திரங்களோடு பேசிக்கொண்டிருப்பார். அதேதான். அதேபோல காதில் கேட்கும் குரல் கொலை செய்யச் சொல்லியது என பதிமூன்று பேர்களை போட்டுத்தள்ளிய நபர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் முலின். கலிஃபோர்னியாவின் சாண்டா குரூஸ் பகுதியில் நிறைய கொலைகளை இவர் செய்துவந்தார். கத்தி, பிஸ்டல், ரிவால்வர், பேஸ்பால் மட்டை ஆகியவற்றை எப்போதும் தன்னோடு வைத்திருந்தார். அப்புறமென்ன, தேவையான மனிதர்கள் வெளியே உலவும்போது குத்தியோ, சுட்டோ, சிதறடித்தோ கொல்வார். ஏன் இந்த கொலைவெறி?   இப்படி செய்யச் சொல்லி இயற்கைதான் சொன்னது. அப்போதுதான் இயற்கை பேரிடர்கள் என்னனுடைய நகரைத் தாக்காது என வெளிப்படையாகவே சொன்னார் முலின். கொலைகளை 72 தொடங்கி 73 வரையிலான காலகட்டத்தில் செய்தார். இதற்கான தொடக்கம் 1969ஆம் ஆண்டு உருவானது. அப்போது தலையை மொட்டையடித