போருக்கு தயாராகுங்கள் என்று ராணுவத்திற்கு அழைப்பு விடுப்பது இயல்பானதுதான்! - டெய்லர் ஃபிராவல்
போருக்கு தயாராகுங்கள் என்று சீனா சொன்னது இயல்பானதுதான் எம்.டெய்லர் ஃபிராவல் எம்ஐடி பாதுகாப்பு ஆராய்ச்சி, அரசியல் அறிவியல் பேராசிரியர் சீன அதிபர் ஜின்பிங், மக்கள் விடுதலை ராணுவத்திடம் போருக்கு தயாராகுங்கள் என்று சொல்லியிருக்கிறாரே? அவர் கூறிய வார்த்தை ஒன்றும் புதிதல்ல கடந்த ஆண்டும் இதேபோலத்தான் கூறினார். மக்கள் விடுதலை நாளிதழில் இத்தகையை குறிப்புகள் 2018 இல் 1,300 முறையும், 2019 இல் 1,100 முறையும் கூறப்பட்டுள்ளன. ராணுவம் தனது இலக்குகளை நோக்கி முன்னேறச் செய்ய அதன் தலைவர் இப்படி ஊக்கமூட்டுவது வழக்கம்தான். அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளிலும் இதுபோல பேசப்பட்டுள்ளது. சீனா டோக்லம் பகுதி முன்னேற்றத்தின்போது அமைதியாகவே இருந்தது. இதை எப்படி புரிந்துகொள்கிறீர்கள்? Add caption 2017 ஆம் ஆண்டு முதலே டோக்லம் பகுதியில் எல்லைப்ப்பிரச்னை தொடர்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பிரச்னை இருந்து வருகிறது. இதில் இந்தியா, சீனாவின் எல்லை மீறலுக்கு பதிலடியாக சீனா, பூடான் எல்லைப்பகுதியில் தன் படைகளை உள்ளே அனுப்பியது. இதனை சீனா தனது இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலாக கருதியது. அதேசமயம் இந்தியா பூடான் நாட்