இடுகைகள்

ப்ரீலான்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வேலைவாய்ப்பு பற்றி மாற்றி யோசிக்கவேண்டிய நேரமிது!

படம்
  எம்ப்ளாய்மென்ட் இஸ் டெட் ஜோஸ் டிரியன், டெபோரா பெர்ரி பிசியன் ஹார்வர்ட் பிசினஸ் ரிவ்யூ பிரஸ் இன்றைய காலத்தில் வேலைவாய்ப்பு சந்தை எப்படி இணையம் சார்ந்ததாக மாறியுள்ளது. அதற்கேற்ப ஒருவர் தன்னை மாற்றிக்கொள்வது, மேம்படுத்திக்கொள்வது எப்படி என இந்நூல் விளக்குகிறது. செயற்கை நுண்ணறிவு காலத்தில் வாழ்கிறோம். ஏறத்தாழ அனைத்து டெக் நிறுவனங்களிலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பணியாளர்கள் நீக்கப்பட்டுக்கொண்டு வருகிறார்கள். மைக்ரோசாப்டில் அண்மையில் ஆறாயிரம் பேர் பணிவிலக்கப்பட்டனர். ஏனெனில் அங்கு கோடிங்குகளில் முப்பது சதவீதத்தை செயற்கை நுண்ணறிவு எழுதுகிறது. பணியாளர்களுக்கான தேவை குறைந்து வருகிறது. ஒருவர் வேலையில் தாக்குப்பிடிக்க வேண்டுமென்றால் வாழ்நாள் முழுக்க கற்க வேண்டிய தேவை உள்ளது. படிப்பு என்பது பள்ளி, கல்லூரியோடு முடிவதில்லை. தொடர்ச்சியாக எந்த வேலை செய்தாலும் மென்மேலும் இணைய படிப்புகள், பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டய படிப்புகளை படித்து தன்னை மேம்படுத்தி்க்கொண்டே இருப்பவர் எப்படியும் தாக்குப்பிடிக்க முடியும் என்பதை நூல் விளக்கமாக எடுத்து கூறுகிறது. சாதாரண வாசகர் படிப்பதை விட இணையம் சார்ந்த க...