இடுகைகள்

சந்தியா பதிப்பகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுவாரசியங்கள் நிறைந்த பயணத்தை விவரிக்கும் கடிதங்கள்! - இந்தியப் பயணக் கடிதங்கள் - எலிசா பே, தமிழில் அக்களூர் ரவி

படம்
                  இந்திய பயணக் கடிதங்கள் எலிசா பே அக்களூர் ரவி மொழிபெயர்ப்பில் சந்தியா பதிப்பக வெளியீடு ப . 284 விலை . 200 இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வந்த எலிசா பே என்ற பெண்மணியின் பயணத்தை இந்த நூல் விவரிக்கிறது . நூல் முழுக்கவே அவர் தனது குடும்பத்திற்கு எழுதிய 31 கடிதங்களாக நீள்கிறது . 1779 முதல் 1815 ஆம் ஆண்டு வரையிலான எலிசாவின் கடல் மற்றும் தரைவழிபபயணம்தான் கடிதங்களின் அடிப்படை . இந்த நூலை எதற்குப் படிக்கிறோம் , எதனால் முக்கியத்துவம் பெறுகிறது என்றால் , 1779 ஆம் காலகட்ட நிலைமைகள் , போர் , கப்பலில் அவர் சந்தித்த வினோதமான மனிதர்கள் , காட்சிகள் , பருவச்சூழல் மாறுபாடு ஆகியவை சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன . தன் கணவரோடு இந்தியாவின் கல்கத்தாவிற்கு சென்று வாழவிரும்பியவர் , திரும்ப இங்கிலாந்திற்கு வரும்போது அவரது வாழ்க்கை மாறிவிடுகிறது . அவரது கணவர் அவரை விட்டு பிரிந்திருக்கிறார் . ஆனால் தன்னை எப்படிப்பட்ட சூழலிலும் பாதுகாத்துக்கொள்ளும் நெஞ்சுரத்தை எலிசா பெற்றுவிடுகிறார் . நூலின் இறுதியில் எலிசா எழுதும் எழுத்துகள் இதனை அற்புதமாக பிரதிபலிக