இடுகைகள்

மனிதநேயம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அம்பேத்கரின் பாதை - பௌத்த மதத்தை தழுவும் தாழ்த்தப்பட்ட மக்கள்!

படம்
  அம்பேத்கரின் பாதை - பௌத்த மதத்தை தழுவும் தாழ்த்தப்பட்ட மக்கள்! இந்தியாவில் ஆண்டுதோறும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான தாழ்த்தப்பட்ட மக்கள் பௌத்த மதத்தை தழுவுகிறார்கள் என குஜராத் மாநில பௌத்த அகாடமி செயலாளர் ரமேஷ் பேங்கர் கூறியுள்ளார். 1956ஆம் ஆண்டு, டாக்டர் பி ஆர் அம்பேத்கர், லட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களுடன் சேர்ந்து பௌத்த மதத்திற்கு மாறினார். சுதந்திர இந்தியாவில் நடந்த முக்கியமான கவனம் கொள்ளப்பட்ட மதமாற்ற நிகழ்ச்சி எனலாம்.  தற்போதைய நேபாளம்தான் சாக்கிய நாடு. அங்கு, இளவரசராக இருந்த சித்தார்த்தர் உலக உண்மைகளை கண்டறிந்து துறவு மேற்கொண்டார். அவர் ஞானம் பெற்று சீடர்களுக்கு நல்வழியை உபதேசிக்க தொடங்கிய பிறகு உருவானதுதான் பௌத்த மதம். கி மு ஐந்தாம் நூற்றாண்டில் பௌத்தம் உருவாகி வளரத் தொடங்கியது.  இந்த மதம், வேதகால இந்துமதத்திற்கு எதிரான கருத்துகளை, செயல்பாடுகளைக் கொண்டிருந்தது. சிராமணி இயக்கத்தின் விளைவாக தோன்றிய பௌத்த மதம், பிராமண சடங்கு, சமூக அமைப்பிற்கு எதிரானதாக இருந்தது என வரலாற்று வல்லுநர் எல்பி கோம்ஸ் குறிப்பிட்டார்.  சமண மதம், பௌத்தத்தை விட காலத்தே சற்று முந்தியது. இதன்

டைம் 2023 செல்வாக்கு பெற்ற நிறுவனங்கள் - லெக்ஸி ஹியரிங், மாவென் கிளினிக், சர்க்கிள்

படம்
  மாவன் கிளினிக் லெக்ஸி ஹியரிங் சர்க்கிள கிரிப்டோகாயின் இன்டிரிபிட் டிராவல் மாசு இல்லாத சுற்றுலா அறிவியல் ரீதியாக மாசுபாடு ஏற்படுத்தாத சுற்றுலா நிறுவனம். பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு விமானம் இல்லாத பயணத்தின் மூலம் மக்களை கூட்டிச் செல்கிறார்கள். சுற்றுலா செல்லும் பயணிகள், போகுமிடமெல்லாம் மதுபான புட்டிகளை உடைப்பது, உணவு கொண்டு செல்லும் பிளாஸ்டிக் கவர், பெட்டிகளை அங்கேயே தூக்கிபோட்டுவிட்டு வருவது இயல்பானது. ஆனால், இந்த நிறுவனம் இதுபோல மக்கள் சுற்றுலா செல்வதை மாற்றியிருக்கிறது. இதன் இயக்குநர், ஜேம்ஸ் தோர்ன்டன். இன்டிரிபிட் டிராவல் நிறுவனம் தொடங்கி 34 ஆண்டுகள் ஆகிறது. #intrepid travel     வார்ட்சிலா தூய ஆற்றலுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய்களை நிறுவனங்கள் செலவழித்து வருகின்றன. சோலார், காற்றாலை என ஏகத்துக்கும் செயல்பாடுகள் தொடங்கி நடந்து வருகின்றன. காலநிலை மாற்றம் தீவிரமாக உள்ள காலத்தில் சூரிய வெளிச்சம் கிடைக்காதபோது, காற்று தீவிரமாக வீசாதபோது என்ன செய்வது? அப்போது கிடைத்த சேகரித்த மின்னாற்றலை சேமிக்கும் வழிவகைகளை வார்ட்சிலா நிறுவனம் வழங்குகிறது. மின்சாரத்தை சேமிப்பதற்கான மையங்களை

நவீன உலகில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தனிநபர்களே காரணம் - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி ஜே கிருஷ்ணமூர்த்தி உலகில் மோசமான நெருக்கடி நிலை, ஏதேனும் சில செயல்பாடுகளால், வாய்ப்பால் ஏற்படுவதில்லை. அதை உருவாக்குவது மக்கள் கூட்டத்தில் உள்ள தனிநபர்களான ஓவ்வொருவரும்தான். பொறாமை, வேட்கை, பேராசை, அதிகார ஆசை, பிறரைக் கட்டுப்படுத்துதல், போட்டி,, இரக்கமில்லாத தன்மை, உடனடியாக பலன்கள் கிடைக்கவேண்டுமென நினைத்தல் ஆகியவற்றை தினசரி வாழ்க்கையில் நாம் செய்கிறோம். உலகில் உருவாகும் அபாயத்திற்கும் குழப்பத்திற்கும் வேறு யாரோ காரணமல்ல. நாம்தான் காரணம்.   அதாவது நீங்களும், நானும்தான்.   ஒன்றை ஆழமாக கவனிக்காமல், சிந்திக்காமல், ஏதேனும் பேராசையை நோக்கி ஓடுவது, உணர்வுகளின் தேவையை மட்டுமே தீர்மானிப்பது, காரணமாக ஆழமான பேரழிவு நேருகிறது.   இந்த மோசமான நிலைக்கு நெருக்கடிக்கு நீங்கள்தான் பொறுப்பு. வேறு எந்த குழுவோ, தனிநபரோ காரணமல்ல. நீங்கள் மட்டுமே காரணம். Madras The cpllected works vol .5october 1947 the collected works 4 நவீன உலகம் என்றால் என்ன? பல்வேறு நுட்பங்களாலும், பெரிய நிறுவனங்களின் திறனாலும் உலகம் உருவாகியுள்ளது. இங்கு, தொழில்நுட்ப மேம்பாட்டுடன் மனிதர்களின் தேவையை பற்றா

பறவையால் அழகாகிறது வானம் மின்னூலின் தரவிறக்க முகவரி இதோ......

படம்
                          பறவையால் அழகாகிறது வானம் என்ற இந்த நூல் கொரோனா காலத்தில் தளர்வுறாது போராடிய சில மனிதர்களைப் பற்றி பேசுகிறது. சமூகத்திற்கு உழைக்கும் மனிதர்கள் எப்போதும்  ஆச்சரியகரமானவர்கள்தான். பிறருக்கான நலன் பாராட்டுவது என்பது தன்னைத்தானே தியாகம் செய்வதற்கு ஒப்பானது. அதில் பாராட்டுகள், அங்கீகாரத்தை விட விமர்சனங்களே அதிகம். அதையும் தாண்டி உயிரைக்கூட பணயம் வைத்து சுயலாபத்தை தள்ளி வைத்து போராடிய சில மனிதர்களைப்பற்றிய குறிப்புகளே இவை.    நூலின் தலைப்பு கொடுத்து உதவியவர் குங்குமத்தின் பொறுப்பாசிரியராக பணியாற்றி தற்போது புதிய பணியிடத்திற்கு சென்றுள்ள திரு. நா. கதிர்வேலன் அவர்கள். அவரின் எழுத்து இந்நூலை எழுதும்போது பெரும் உதவியாக இருந்து என்னை ஊக்குவித்தது.   இவற்றை நீங்கள் கீழ்க்கண்டட வலைத்தளத்தில் தரவிறக்கிக் கொள்ளலாம்.    பீடிஎப் கோப்பு https://www.mediafire.com/file/9gckwypc8sa2emj/corona_warrior.pdf/file  இபப் கோப்பு  https://www.mediafire.com/file/5ns19quf423rj9o/corona_warrior1.epub/file குறிப்பு  மேற்சொன்ன நூலை ஒருவர் தனது வலைத்தளத்தில் பதிப்பிப்பது அவரது சொந்த பொறுப்பு ஆகு

பறவையால் அழகாகிறது வானம்! - இலவச மின்னூல் வெளியீடு

படம்
     இலவச மின்னூல் வெளியீடு.... விரைவில் .....       இந்த நூல் கொரோனா காலத்தில் மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்தவர்களைப் பற்றி குறிப்பிடுகிறது . இவர்களைப் பற்றி எழுதக்காரணம் , இதுபோன்ற உதவிகள் துயரமான காலத்தில் அனைவருக்கு்ம கிடைக்கவேண்டும் என்ற நோக்கம்தான் . தற்போதைய காலத்தில் அனைத்து மக்களுக்கும் இடையிலும் பிரிவினை வேலிகள் வேகமாக ஊன்றப்பட்டு வருகி்ன்றன . அதனை மனிதநேயமிக்க மனிதர்கள் தொடர்ந்து களைந்தெறிந்து மக்களுக்கு பாகுபாடு இன்றி உதவி வருவது மகிழ்ச்சியளிக்கிறது . இதில் குறிப்பிடப்பட்டவர்கள்தான் உயர்ந்த மனிதர்கள் என்பதல்ல . நம்மால் முடிந்த உதவியை பாகுபாடின்றி பிறருக்கு வழங்க முன்வருபவர்கள் அனைவருமே நாம் போற்றத்தகுந்தவர்கள்தான் . இந்தநூல் அதற்கான நம்பிக்கையை வாசிப்பவர்களுக்கு வழங்கும் என்று கருதுகிறேன் .  பொதுநலம் சார்ந்து உழைக்கும் பல்வேறு மனிதர்களை அறிமுகம் செய்த  நண்பர் திரு. இரா.முருகானந்தம் அவர்களுக்கு இந்த நூல் சமர்ப்பணம்.  

கொரோனா காலத்தில் ரூ.12 லட்சத்தை வேண்டாம் என்று வாடகைதாரர்களிடம் சொன்ன தொழிலதிபர்!

படம்
      வாடகை வேண்டாம் ! இதுவும் கேரளத்தைச் சேர்ந்தவரின் மனிதநேயம் பற்றியதுதான் . கொரோனா காலம் பல்வேறு மனிதர்களைப் பற்றிய கதைகளை பிறருக்கு சொல்லும் சூழலை உருவாக்கியுள்ளது . வேலை இல்லாமல் பல்வேறு வீடுகளில் வாடகையை வேண்டாம் என்று மறுத்த வீட்டு உரிமையாளர்களும் உண்டு . அந்த வகையில் அவர்களுக்கு இழப்பு என்றாலும் சூழலைப் புரிந்துகொண்டு பிறருக்கும் இளைப்பாறுதலை தங்களது செயல் வழியே செய்கிறார்கள் . சிஇ சக்குண்ணி என்றால் கேரளத்தில் யாருக்கும் அடையாளம் தெரியாது . நூற்றுக்கும் மேலான கடைகளை கட்டி வாடகைக்கு விட்டிருக்கும் ஆள்தான் அவர் . பொதுமுடக்க காலத்தில் வியாபாரிகளால் கடை வாடகை தரமுடியாது என்று அறிந்தார் . இதனால் கடைக்காரர்களிடம் வாடகையைக் கேட்காமல் தனக்கு வரவேண்டிய ரூ .12 லட்சத்தை இழந்துள்ளார் . இதேகாலகட்டத்தில் பல்வேறு மளிகை , அரிசி ஆகியற்றின் விலை அதிகரித்து விற்கப்பட்டது . ஆனால் சக்குண்ணி தனக்கு நியாயமாக வரவேண்டிய பணத்தை வேண்டாம் என ஒதுக்கியுள்ளார் . 1968 ஆம் ஆண்டில் கோழிக்கோடு சந்தையில் சக்குண்ணி அண்ட் கோ என்ற சொந்த நிறுவனத்தைக் தொடங்கினார் அதற்கு முன்னர் இவர் சந்த