நாளைய நாயகர்கள் - கார்டியன் நாளிதழ் தொகுப்பு

 நாளைய நாயகர்கள் 


பெண்களுக்கான அரசியல் பங்கேற்பு உரிமை - எம்பாம்பரா


உகாண்டா நாட்டில் அடுத்த மாதம் பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில், போட்டியிடுபவர் நாற்பது ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள முசெவானி. அவர் வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அதிபர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் அனைவரும் ஆண்கள். பெண்கள் கிடையாது. ஒரே ஒரு பெண் மட்டுமே, தன் உடல், பாலினம் மீதான அவதூறுகள், திட்டமிட்ட கேலி கிண்டல் ஆகியவற்றைக் கடந்து போட்டியிடுகிறார். அவர்தான் நம்முடைய நாயகர். வழக்குரைஞர் எம்பாம்பரா. உகாண்டா நாட்டில் அரசியல் என்பது முழுக்க ஆண்களுக்கானது. அங்கு முசெவானிக்கு எதிராக போட்டியிடுபவர்கள் பலரும் ஆண்கள்தான். மொத்தம் எட்டுப்பேர். இதில் எம்பாம்பரா மட்டும்தான் பெண். எனவே, அவரை அரசியலில் முன்னேற பிற அரசியல்வாதிகளோடு உடலுறவு கொண்டார் என வதந்திகளை ஊடகங்கள் வழியாக இழிவான பிறவிகள் பரப்பி வருகிறார்கள். இதெல்லாம் எம்பாம்பராவை பாதிக்காமல் இல்லை. ஆனால், அவர்தான் அந்த நாட்டிலுள்ள பெண்களுக்கான முன்னோடி தலைவர். ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை என்பதை வலியுறுத்தி போராடி வருகிறார். பெண்களை உறுப்பினர்களாக கொண்ட கட்சியை உருவாக்கவும், பெண் தலைவர்களை உருவாக்கவும் முயன்று வருகிறார். தேர்தலில் எம்பாம்பரா வெல்வதற்கு குறைவான வாய்ப்புகளே உள்ளது. ஆனால், இத்தனை எதிர்ப்புகளை, அவதூறுகளை அவர் சந்தித்து முன்னே செல்வது தனக்காக மட்டுமல்ல. பின்னே வரும் நாளைய பெண்களுக்காகவும்தான் என்பதை வரலாறு மறக்காது. 


கால்பந்து வழியாக மாற்றம் - ஆலாக் குகு


ஆலாக் குகு, சிறுவயதில் கல்வி கற்கவில்லை என்று வருத்தப்படுகிறார். இப்போது அவர் தெற்கு சூடானில் உள்ள செரிகாட்டில் இளைய கனவு என்ற பெயரில் கால்பந்து பயிற்சி நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். ஆனால், அவரது கடந்த காலம் இருண்ட பாதையைக் கொண்டது. அவர் மாஃபியா கூட்டத்தில் அடியாளாக இருந்தவர். தெருச்சண்டை, போதைமருந்து பயன்படுத்துவது என செய்யாத தவறுகள் கிடையாது. அவரை, அவரது தாயின் கண்ணீரும் கூட மாற்றவில்லை. அந்த ரவுடிக் கூட்டத்தில் இருந்து காசு கொடுத்துவிட்டு விலகியிருக்கிறார். சுதந்திரம் எளிதாக கிடைத்துவிடாது அல்லவா? ஆனால், கால்பந்து விளையாட்டு மாற்றியிருக்கிறது. சட்டவிரோத செயல்பாடுகளுக்காக சிறைக்கு கூட சென்றிருக்கிறார். முதலில் ஏழுபேர்களோடு தொடங்கிய கால்பந்து பயிற்சி நிறுவனம் இன்று ஆயிரம் பேர்களைக் கடந்திருக்கிறது. நான் தலைவராக வர விரும்புகிறேன். ஆனால் சிறுவயதில் கல்வி கற்கவில்லை என்பதே பிரச்னை என்கிறார் ஆலாக் குகு. ரவுடியாக சுற்றியபோது கிடைத்த கெட்டபெயருக்கும், இப்போது கிடைத்துள்ள நற்பெருமைக்கும் பெரும் இடைவெளி உள்ளது. அதில் அவரது உழைப்பு முழுக்க நிறைந்திருக்கிறது.


தந்தையின் உயிரைக் காப்பாற்ற போராட்டம்


மதவாத நாடுகள் தங்களை குடியரசு என அழைத்துக்கொள்வது வேடிக்கையானது. அதேசமயம், அவர்கள் அடிப்படை உரிமைகளை கேட்பவர்களை சிறையில் அடைப்பது, மரண தண்டனை விதிப்பது என இயங்கி வருகிறார்கள். இந்தவகையில் இஸ்லாமிய குடியரசு நாடான ஈரான், 1400 பேர்களுக்கு மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளது. 2025 ஆம்  ஆண்டு எண்ணிக்கை இது. நடப்பு ஆண்டில் இன்னும் அதிகரிக்கலாம். 


ஸினோ பாபாமிரி என்ற பெண்மணி, மரண தண்டனை விதிக்கப்பட்ட தனது தந்தையைக் காப்பாற்ற முயன்று வருகிறார். மதவாத நாடுகள், அங்கு நடக்கும் அநீதிகளை யாரேனும் உலக நாடுகளிலுள்ள ஊடகங்களுக்கு கூறினால், தகவல் கொடுத்தவரின் உறவினர்களைக் கைது செய்து சிறையில் தள்ளுகிறார்கள். இப்படியான சூழல்கள், உண்மைகளை பேச முயலும் மக்களைக் கூட அமைதியாக்குகிறது. 


உய்குர் மக்களை வேட்டையாடும் சீனா


சீனா, உய்குர் முஸ்லீம்களை வேட்டையாடி துன்புறுத்தி வருகிறது என்பதை உலக நாடுகள் அறிந்திருக்கலாம். உய்குர் இனப் பெண்ணான செய்னுர் ஹாசன்,சீனாவின் ஷி்ன்ஜியாங் பகுதியில் வாழ்ந்து வந்தவர். இப்போது அங்கே இருந்து தப்பி கனடாவில் அடைக்கலம் தேடி வாழ்ந்து வருகிறார். இவரது கணவர் சீன அரசின் அழுத்தம் காரணமாக மொராக்கோவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். அவரை மூன்று குழந்தைகளைப் பார்த்துக்கொண்டு மீட்கவேண்டும். செய்னுர் இதற்கென பிரசார அமைப்பைத் தொடங்கி பல்வேறு தலைவர்களை, இயக்க உறுப்பினர்களை சந்தித்துப் பேசினார். இறுதியாக சீனாவில் அழுத்தத்தைக் கடந்து மொராக்கோ செய்னுரின் கணவரை விடுவித்தது. ஒருவழியாக அவரது குடும்பம் ஒன்று சேர்ந்திருக்கிறது. சீன அரசு, உய்குர் இன மக்களை அரசுக்கு கட்டு்ப்பட்டு வாழும் விதமாக நேர்மறையாக செயல்பாடுகளை அமைத்துக்கொண்டிருக்கலாம். எதற்கு சிறை,தண்டனை என்ற அச்சறுத்தல்கள் எல்லாம்? 

 

மழைக்காட்டின் பாதுகாவலர்


ஆரவல்லி மலைத்தொடரை ஒன்றிய அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சகாய விலையில் விற்க பேரம் பேசிக்கொண்டிருக்கிறது. மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.பெரும்பாலான ஊடகங்கள் அரசிடம் புத்தாண்டு பரிசுகளைப் பெற்றுவிட்டதால், மக்கள் பிரச்னைகளைப் பேசுவதில்லை. இந்த சூழலில் நாம் தென்னிந்தியாவில் உள்ள கேரளத்திற்க்குச் செல்வோம். இங்கு லாலி ஜோசப் என்ற பெண்ணோடு தன்னோடு நிறைய பெண்களை சேர்த்துக்கொண்டு 2 ஆயிரம் தனித்துவமான கேரளத்திற்கு சொந்தமான தாவர இனங்களை பாதுகாத்து மீட்டுள்ளார். இப்படி தாவர இனங்களை பாதுகாக்கும் பணியை தன்னுடைய பத்தொன்பதாவது வயதில் இருந்து செய்து வருகிறார். இவருக்கு வோல்ஃப்கேங் என்ற ஜெர்மனைச் சேர்ந்த சூழல் பாதுகாப்பாளர் முன்மாதிரியாக இருந்தார். குருகுலா சரணாலயம் என்ற பெயரில் தான் சேகரித்த தாவர இனங்களை வளர்த்து வருகிறார். இது ஒரு சிறிய முயற்சிதான். நாளை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். 


 காவல்துறை வன்முறை


சோனியா போன்ஃபிம் விசென்டேவின் வாழ்க்கை ஒரே நாளில் மாறியது. மாற்றியவர்கள் பிரேசில் நாட்டு காவல்துறையினர். கணவர், பதினேழு வயது மகன் ஆகியோர் வெளியே சென்றனர். திரும்பி வரும்போது சடலமாகவே வந்தனர். காவல்துறை அவர்களை சுட்டுக்கொன்றிருந்த்து. பிரேசில் நாட்டில் காவல்துறையால் ஆண்டுக்கு ஆறாயிரம் பேர் கொல்லப்படுகிறார்கள். இதை அரசும் கண்டுகொள்வதில்லை. விட்டுவிடுகிறார்கள் சோனியா, பாதிக்கப்பட்டவர்களுக்கு இறந்த குடும்பங்களுக்கு ஆதரவாக போராடி வருகிறார். கணவர், மகன் இறப்பிற்கு அதிகாரிகளை சந்திக்க முயன்றாலும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. அவமானங்களே மிச்சம். தன்னையொத்த பெண்களோடு சேர்ந்து உண்மையைப் பெற முயன்று வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் நடந்த காவல்துறை தாக்குதலில் 130 பேர் பலியானார்கள். இவர்களில் பாதிப்பேர் முப்பது வயதிற்கும் கீழே உள்ளவர்கள்.


செவிலியரின் சேவை


செனகல் நாட்டின் ஜோல் என்ற பகுதி. இங்கு மீன்பிடிப்பதே தொழில். அதுவும் இப்போது அந்தளவு லாபகரமாக இல்லை. எம்எஸ்ஐ என்ற மருத்துவசேவை நிறுவனத்தில் வேலை செய்கிறார் எம்பாயே. இவர் வேலை செய்யும் இடமும் சிறப்பானதல்ல. இங்கும் மழை பெய்தால் வாளி வைத்து அதை சிந்தாமல் சிதறாமல் பிடிக்க வேண்டியிருக்கும். கழிவறையில் நீர் இருக்காது. மின்சாரம் இருப்பது போல தெரியும். மின்வெட்டுகளின் எண்ணிக்கை அதிகம். செனகலில் மருத்துவம் இலவசம் கிடையாது. மருத்துவ சேவையைப் பெற அதிக செலவாகும். எம்பாயே, கர்ப்பிணிகளுக்கு உதவுவது, கர்ப்பதடை மாத்திரைகளை வழங்குவது என இயங்கி வருகிறார். தன்னுடைய சம்பளத்தில் குறிப்பிட்ட பகுதிகளை பயன்படுத்திக் கூட நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்திருக்கிறார். ஆனால், அந்த முறையில் எத்தனை பேருக்கு உதவ முடியும். 



 

நன்றி

தி கார்டியன் நாளிதழ் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?