இடுகைகள்

ஜனவரி, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவின் முதல் என்ஜிஓ!-ச.அன்பரசு

படம்
அபானிந்திரநாத்  தாகூர் நெசவாளர்களுக்கு வாழ்வளிக்கும் இந்தியாவின் முதல் என்ஜிஓ !- ச . அன்பரசு இன்று இந்தியாவில் மூலை முடுக்கெங்கும் நிறைந்துள்ள பல்வேறு என்ஜிஓக்கள் , சமூகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்கள் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி தந்துவருகின்றன . 1916 ஆம் ஆண்டு கொல்கத்தாவைச் சேர்ந்த சுதேசி தலைவரான சுரேந்திரநாத் பானர்ஜி , மக்களை இணைத்து உருவாக்கிய பெங்கால் ஹோம் இன்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் நூறாண்டு கடந்து இன்றும் நெசவாளர்கள் மற்றும் கலைஞர்களின் கலைமுயற்சிகளுக்கு உதவி வருகிறது . சுதேசி இந்தியா ! இந்தியாவின் முதல் என்ஜிஓவான பெங்கால் ஹோம் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷனின் வயது 101. இந்தியாவை தன் தாயாக நேசித்த கொல்கத்தாவின் சுரேந்திரநாத் பானர்ஜியின் சுதேசி இயக்கத்தின் மூலமாக சிறுதொழில்கள் என்ற பிரிவை வணிகத்தில் உருவாக்கினார் . இந்தியாவை தன் பொருட்களுக்கான சந்தையாக காலனி நாடாக மாற்ற முயன்ற கிழக்கிந்திய சுரேந்திரநாத்தின் முயற்சியை எப்படி ஏற்கும் ? இங்கிலாந்தின் வரி தந்திரம் ! அன்று இங்கிலாந்தின் லங்காஷையரிலிருந்து இந்தியாவில் குவிந்த அந்நிய து

எட்டுத்திக்கும் அறிவியல்!

படம்
காட்டுத்தீ ! அமெரிக்காவில் எரிந்த காடுகளின் பரப்பு -8.4 மில்லியன் ஏக்கர்கள் (2015),7.8 மி . ஏ (2017 செப் . வரை .) ஐந்தில் நான்கு காட்டுத்தீ நிகழ்வுகளுக்கு மனிதர்களே காரணம் . மரங்கள் சூழ்ந்த இடத்திலிருந்து நூறு அடி தூரத்தில் வீடு இருப்பது நல்லது . ஆனால் ஒரு கி . மீ தூரத்திற்கு நெருப்பு கங்குகள் பறக்கும் எனவே கவனம் அவசியம் . காட்டுத்தீ சீசன் 1970 இல் 5 மாதங்கள் எனில் தற்போது 7 மாதங்களுக்கும் அதிகம் . 1971 ஆம் ஆண்டு அமெரிக்காவின் விஸ்கான்சின் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் (Great Peshtigo fire) இறந்தவர்களின் எண்ணிக்கை 2,400.   2 சிம்கார்ட்டுக்கு சோதனை ! தாய்லாந்தில் மொபைல் பேங்கிங் , எலக்ட்ரானிக் வழி பண மோசடிகளைத் தவிர்க்க புதியவழியை அரசு கண்டறிந்துள்ளது . முகத்தையும் மற்றும் விரல்களையும் ஸ்கேன் செய்ய ஓகே சொன்னால்தான் இனி தாய்லாந்தில் உங்களுக்கு சிம்கார்ட்டுகளே கிடைக்கும் . வங்கதேசம் , பாகிஸ்தான் , சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் விரைவில் பயோமெட்ரிக் ஸ்கேன் அமலாகவிருக்கிறது . அண்மையில் 4 லட்சம் தாய்லாந்து சிம்கார்ட்டுகளை சட்டவிரோதமாக வ

ஜாலி பக்கங்கள் 2!

படம்
சாதனை ஜம்ப் ! உலகமே நம்மை உற்றுப்பார்க்க வைக்க ஏதாவது செய்யவேண்டும் என்றால் பலரும் உடனே ஓகே சொல்வது உயரமான இடத்திலிருந்து குதிக்கலாம் என்ற ஆப்ஷனுக்குத்தான் . பிரேசிலைச் சேர்ந்த சாகச வீரர்கள் செய்ததும் அப்படியொரு சாதனைக்காகத்தான் . பிரேசிலைச் சேர்ந்த 245 சாகச விரும்பிகள் , 30 மீட்டர் உயரமுள்ள ஹோர்டோலேண்டியா நகர பாலத்திலிருந்து  கின்னஸ் சாதனைக்காக குதிக்க பிளான் செய்தனர் . கயிற்றில் உடலை பிணைத்து ஹெல்மெட் என பக்கா பாதுகாப்போடு ஜம்ப் செய்து , முந்தைய சாதனையான 149 பேர் இதே இடத்திலிருந்து குதித்த ரெக்கார்ட்டை சுக்குநூறாக உடைத்தெறிந்து அசகாய சாதனை செய்திருக்கிறது இக்குழு . கின்னஸ் அமைப்புக்கு தற்போதுதான் சாதனைக்கான மனு அனுப்பப்பட்டிருக்கிறது .  2 ஆதார் படுகொலை ! ஆதாரை போன் நம்பரோடு இணைக்கும் டஜன் கணக்கிலான மெசேஜ்கள் இன்னும் நிற்கவில்லை . பிறந்த குழந்தைக்கும் ஆதார் என எமர்ஜென்சி காலமாக அவசரப்படுத்திய அரசின் ஆதார் வேட்கைக்கு முதல் பலி , ஜார்க்கண்டில் நிகழ்ந்திருக்கிறது . ஜார்க்கண்டின் சிம்தேகா மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் , கூலித்தொழிலாளிகள்

ஜாலி பக்கங்கள்!

படம்
டீன் - ஏஜ் பணக்காரர் தலைநரைக்கும் முன்பே தரணியில் புகழ்பெறுவது சாதாரண மேட்டரா ? அளவில்லாத ஐக்யூ இருந்தால்தானே இதெல்லாம் அபார சாத்தியம் . இங்கிலாந்தில் டீன்ஏஜிலேயே இதை சாதித்து இருக்கிறார் அக்‌ஷய் . இந்தியா வம்சாவழியைச் சேர்ந்த அக்‌ஷய் ரூபரேலியா , தன் ஆன்லைன் நிறுவனம் மூலம் இங்கிலாந்தின் டீன்ஏஜ் மில்லியனராக முத்திரை பதித்திருக்கிறார் .  இவரின் ஆண்டு வருமானம் 12 மில்லியன் பவுண்ட்ஸ் . "doorsteps.co.uk" என்ற நிறுவனத்தை தொடங்கிய 16 மாதங்களில் இவர் தனது ஏஜன்சியின் மூலம் விற்றுள்ள சொத்துக்களின் மதிப்பு 100 மில்லியன் பவுண்ட்ஸ் என்பதோடு முக்கிய நிறுவனங்களின் பட்டியலிலும் பதினெட்டாவது இடத்தை எட்டிப்பிடித்துள்ளார் . ஆக்ஸ்போர்ட் பல்கலையில் பொருளாதாரம் மற்றும கணிதம் படிக்கும் மாணவரான அக்‌ஷய் ,  தற்போது பிஸினஸிற்காக படிப்புக்கு இன்டர்வெல் விட்டுள்ளார் . 7 ஆயிரம் பவுண்ட்ஸ் கடனில் உருவான அக்‌ஷயின் நிறுவனத்தில் இன்று 12 பேர் பணிபுரிகிறார்கள் . # சுயதொழில் விரும்பு . 2 கண்ணுக்குள் ஷேவிங் ! சலூனுக்கு போனால் முடிவெட்டி பான்ட்ஸ் பவுடர் போட்டு அனுப்புவதுதானே ஆர்டின

ஓ..ஓ.. கிக்கு ஏறுதே! கிறுகிறுக்க வைக்கும் விஸ்கி பிஸினஸ்!

படம்
ஓ .. ஓ .. கிக்கு ஏறுதே ! கிறுகிறுக்க வைக்கும் விஸ்கி பிஸினஸ் ! - ச . அன்பரசு பிறப்புக்கும் இறப்புக்கும் ஆதார் அட்டை இணைப்பு , குபீர் விலை ஏற்றத்தில் ரேஷன் லெவி சர்க்கரை , கடலை மிட்டாய்க்கும் ஜிஎஸ்டி வரி என தினசரி ஹைப்பர் டென்ஷனில் காஸ்மோபாலிடன் நகரங்களில் பற்களைக்கடித்தபடி வாழும் இந்திய குடிமகன்கள் தங்களை உற்சாகப்படுத்திக்கொள்ள என்னதான் செய்கிறார்கள் ? மகிழ்ச்சி பரவசமோ , தோல்வியின் துயரமோ தமிழக அரசின் டாஸ்மாக் பார் சரக்குகள்தான் புதிய இந்தியாவில் அடுத்த நாளை எதிர்கொள்ள மக்களை கடைத்தேற்றுகிறது . மதுவிலக்கு பிரசாரங்களை புறங்கையால் ஒதுக்கி உலகில் உற்பத்தியாகும் விஸ்கியில் 48% குடித்து அந்த பிஸினஸை எவரெஸ்ட் உச்சத்துக்கு நகர்த்தியுள்ளது நம் இந்தியர்களின் தன்னிகரற்ற சாதனை . விஸ்கி தயாரிப்பில் அமெரிக்காவையும் பின்தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது புதிய இந்தியாவின் எனர்ஜி மொமன்ட் . டெல்லியின் பகாரஞ்சனிலுள்ள தனியார் பாரில் 25 மில்லி ( ஒரு பெக் விஸ்கி ) ரூ .50 முதல் 5 ஸ்டார் ஹோட்டல்களில் ரூ . 1,500( ஸ்மால் ) வரை பட்டாசாக விற்கிறது . இதில் அயல்சரக்கு