குங்குமம் பிட்ஸ்!





பிட்ஸ்!

கிறிஸ்துமஸ் பரிசு!

அமெரிக்காவின் ப்ளோரிடாவைச் சேர்ந்த சீன் குடும்பத்திற்கு மிராக்கிள் கிறிஸ்துமஸ் பரிசு கிடைத்துள்ளது. யெஸ். மியாவ் பூனைதான் அது. 2014 ஆம் ஆண்டு சீன் வீட்டிலிருந்து காணாமல் போன பெட் செல்லம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டதை கிறிஸ்துமஸ் சந்தோஷத்தோடு சேர்த்து கொண்டாடியுள்ளது இந்த சூப்பர் குடும்பம்.  

டபுள் பைக் சவாரி!

பிலிப்பைன்ஸ் நாட்டில் பைக் மீது பைக் வைத்து சவாரி செய்த சிறுவர்களின் சாகச வீடியோ இணையமெங்கும் ஹைப்பர் ஹிட். "உடைந்த பைக்கை மற்றொரு பைக்கில் வைத்து கொண்டு செல்ல முடியும் என்பதை இப்போதுதான் பார்க்கிறேன்" என்கிறார் இந்த வைரல் வீடியோவை இணையத்தில் பதிவு செய்த பதிவர்.

ஒயின் பாட்டிலில் உபயதாரர்!

அமெரிக்காவின் ஓஹியோவில் கிறிஸ்துமஸ் பரிசாக, மாணவர் ஜேக் ஆசிரியர்களுக்கு அளித்த ஒயின் ட்ரீட்தான் செம ட்ரெண்டிங். ஒயின் பாட்டிலின் லேபிளில் தன்னுடைய போட்டோவை பிரிண்ட் செய்து ஒட்டி டீச்சர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். ஜேக்கின் ஐடியாவுக்கு பிராக்டிக்கலாக்கியது அவரின் பெற்றோர்தான்.   

பென்குயின் சந்திப்பு!


நியூசிலாந்தின் சவுத்லேண்டிலுள்ள பென்குயின் ஒன்று, பிளாட்பார்மில் பாதசாரிகளை ஆர்வமாக வரவேற்று விளையாடி வருகிறது. பென்குயின் மெல்ல சாலைகளை கடப்பவரின் கால்களின் பின்னாலேயே நடந்து வரும் வீடியோ, இணையத்தில் பலரையும் ஈர்த்துள்ளது.


2

பிட்ஸ்!

வாய்பிளக்கும் சாதனை!

ஒடிஷாவின் மனோஜ்குமார் மகாரானா, வாய்பிளக்கும் கின்னஸ் சாதனையை வெறும் 459 ஸ்ட்ராக்களை வைத்தே செய்திருக்கிறார். யெஸ்! ரப்பர் பேண்டால் ஸ்ட்ராக்களை கட்டி வாயில் திணித்து பத்து நொடிகள் விழாமல் வைத்திருந்த மகாரானாவின் சாதனைதான்  இன்று டாக் ஆப் தி டவுன்!

நண்பேன்டா குரங்கு!

வியட்நாமிலுள்ள ஹா டின் பண்ணையில் வளர்க்கப்படும்  குரங்குகளுக்கும் நாய்களுக்கும் அப்படியொரு நட்பு. ஸ்ட்ராங்க் நட்புக்கு சாம்பிள், நாய் பிரியமாக தலையைக் கொடுத்து நிற்க,கூண்டிலுள்ள குரங்கு நாய்க்கு பேன் பார்த்து அளவளாவுவதுதான். வெளியாகியுள்ள நண்பேன்டா வீடியோ இணையத்தில் ஹாட் ஹிட்.

ஜன்னலில் திருடி!

கொலம்பியாவில் உள்ள மெக்டொனால்ட் ரெஸ்டாரெண்டில் ஜன்னல் வழியாகவே கொள்ளையடித்த லேடியை ஹோவர்ட் கவுன்டி போலீஸ் அரஸ்ட் செய்துள்ளது. உணவு,குளிர்பானம் கூடவே 1,400 டாலர்களை சிம்பிளாக திருடிய பெண்ணை சிசிடிவி புகைப்படம் மூலமே போலீஸ் பிடித்துள்ளதுதான் ஆச்சரியம்.

கின்னஸ் ஸ்டிக்கர்பால்!

உலகின் மெகா ஸ்டிக்கர் பாலை ஸ்டிக்கர் ஜெயண்ட் நிறுவனம் உருவாக்கியுள்ளது. 2 லட்சம் ஸ்டிக்கர்களோடு, 231 பவுண்டு எடை கொண்ட ஸ்டிக்கர்பந்து இது."மக்களை மகிழ்விக்க ஜாலியாக செய்த விஷயம் இதுஎன புன்னகைக்கிறார் ஸ்டிக்கர்பந்தின் பிரம்மாவான ஜான் ஃபிஷ்ஷர்.

தொகுப்பு: கயல்விழி பாமா, பிந்து சாதனா 

பிரபலமான இடுகைகள்