ரோனி பக்கங்கள்!
ஜஸ்ட் பாஸ் சல்மான்!
ஆதார் கார்டு, ஸ்மார்ட்
ரேஷன் கார்டுகளில் காஜல்,ரஜினி சிரிப்பது இந்தியாவில் சாதாரணமாகிவிட்டது. ஆனால்
காலேஜில் தரும் மார்க்ஷீட்டில் அப்படி குளறுபடி நடந்தால் எக்ஸாம் எழுதியவரின் நிலைமை
என்ன?
அப்படித்தான் அலிகாரிலுள்ள
அம்ரத்தா சிங் நினைவு கல்லூரியில் பிஏ முதலாமாண்டு படித்த மாணவர் ஒருவரின் மார்க்ஷீட்டில்
சின்ன குளறுபடி.
மார்க் ஷீட்டில் மாணவரின் போட்டோ மிஸ்ஸாகி கெத்தான சல்மான்கான் படத்துடன்
பாஸ்மார்க் 35% என வெளியானதுதான் ஆக்ரா யுனிவர்சிட்டி, 'மானம் போச்சே' என தலைகுனிய காரணம்.
"மார்க்ஷீட்டை பிரிண்ட் செய்ய அவுட்சோர்ஸ் செய்வதுதான் இந்த தவறுக்கு
காரணம். இதற்கு முன்பு ராகுல்காந்தி படம், அம்பேத்கர் பெயரும் இடம்பெற்றிருக்கிறது" என்கிறார்
பல்கலை வட்டார மனிதர். ஆக்ரா பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் 7.2
லட்சம் மாணவர்கள் இந்த ஆண்டு மட்டும் தேர்வு எழுதியுள்ளனர். ஷாரூக்கானுக்கும் சான்ஸ் கொடுங்க ப்ரோ!
ஸ்நாக்ஸ் கடத்தல்!
ஃபேவரிட் படத்துக்கு
புக் செய்து தியேட்டருக்குள் செல்லும்போது பசிக்குமே என சுண்டல்,ஆலு பூஜியா
சகிதம் சென்றால், ஸ்நாக்ஸை பிடுங்கி கொண்டுதான் அனுமதிப்பார்கள்.
ஏன்? ஸ்நாக்ஸை நீங்கள் கொண்டுவந்துவிட்டால் அங்கேயுள்ள
கடைகள் எப்படி பிழைப்பது? அதற்குத்தான் ஏஞ்சலா பிரிஸ்க் புதியபாதை போட்டுள்ளார்.
சிம்பிள் வழி கொஞ்சம்
சிக்கல்தான்.
யெஸ். பிரக்னன்ட் ஆகிவிடுவதுதான் ஆஞ்சலா கண்டுபிடித்த
வழி. ஸ்நாக்ஸை வயிற்றில் காம்பாக்ட்டாக வைத்து எப்படி கர்ப்பிணியாக
மாறினேன் என ஏஞ்சலா பிரிஸ்க் படம் போட்டு பாகம் குறித்தது இணையத்தில் சுடச்சுட வைரல்.
எங்கள் குலம்காத்த மாகாளி என பேனர் வைக்காத குறையாத அம்மணிக்கு ஆரத்தி
எடுத்து வாழ்த்துகளை குவிக்கிறார்கள் இணைய கண்மணிகள். ஐடியா ஓகே.
ஆனால் ஆண்களுக்கு? என சிலர் கிராஸ் என்கொயரி கேள்விகளும்
கேட்டுள்ளனர். ஆல்ரெடி எக்ஸ் எல் சைஸ் தொப்பை இருக்க, டோன்ட் வொரி மக்களே!
span lang=TA>
ஐபோனுக்கு பதில்
உருளைக்கிழங்கு!
ஆப்பிளுக்கு பதிலாக
ஏழைகளின் ஆப்பிள் என பேரிக்காயை கொடுத்தாலே டென்ஷன் நமக்கு உச்சிமுடிக்கு எகிறும். ஆர்டர்
செய்த பொருளுக்கு பதில் டுபாக்கூர் பொருளை கொடுத்தால் எப்படியிருக்கும்?
அமெரிக்காவின்
விஸ்கான்சினைச் சேர்ந்த பெண்ணுக்கு ஐபோன் 6 வாங்குவது ஆயுள் கனவு.
ஆனால் கிடைத்தது 11 உருளைக்கிழங்கு பீஸ்கள்தான்.
தன் வீட்டிற்கு அருகில் பிளாக் ஃப்ரைடே விற்பனை பற்றி டஜன் கணக்கிலான
போஸ்டர்களை பார்த்தவர், உடனே வில்வாக்கி சென்றார். ட்ரக்கில் உடைகள், எலக்ட்ரானிக் பொருட்களை எது எடுத்தாலும்
ஸ்லோகனுடன் பரபரவென விற்றுக்கொண்டிருந்தனர்.
அங்கே வைத்திருந்த ஐபோன் 6 யை வாயைப் பிளந்த அம்மணி, 6 ஆயிரம் ரூபாயை ஆன் தி ஸ்பாட் கொடுத்துவிட்டு பாக்ஸை
ஓபன் செய்து பார்க்காமல் வீட்டுக்கு வந்துவிட்டார். கிச்சனில்
வைத்து ஆசையாக திறந்தால் நீட்டாக நறுக்கிய 11 உருளைக்கிழங்கு
துண்டுகளோடு ஆண்ட்ராய்ட் சார்ஜரும் இருந்தது கண்டு நொந்துபோய்விட்டார் அம்மணி.
அதிரடி வெள்ளியில் காமெடி!
குடத்திற்குள்
நாய்!
காவல்துறை மனிதர்களுக்கு
மட்டுமல்ல,
அகில உலக விலங்குகளுக்கும் ப்ரெண்ட்ஸ்தான் என்பதற்கு பெங்களூரு சம்பவமே
சாட்சி.
கர்நாடகாவின் பெங்களூருவில்
தண்ணீர் குடிக்க அலைந்த தெருநாய் ஒன்று எதார்த்தமாக குடத்திற்குள் நீர் இருக்குமே என
தலையை விட்டு துழாவிப் பார்த்தது. தண்ணீர் இல்லையென்றதும் ஓகே என தலையை திருப்பினால்
ரிட்டர்ன் எடுக்கமுடியாமல் உள்ளேயே மாட்டிக்கொண்டது. இதனை ட்விட்டர்
வழியே அறிந்த டிசிபி அபிஷேக் கோயல் உத்தரவுப்படி, 15 பேர் கொண்ட
போலீஸ் டீம் துப்பாக்கி சகிதம் டிப்டாப்பாக சென்று குடத்திற்குள் கபாலம் மாட்டிய நாயை
பரிபக்குவமாக உயிரோடு மீட்டு காவல்துறையின் பெருமையை குன்றிலிட்ட விளக்காக எரியச்செய்துள்ளனர்.
நன்றி: குங்குமம்
தொகுப்பு: கா.சி.வின்சென்ட்