ரோனியின் ஜாலி பக்கங்கள்!

ஆஸ்திரேலியா கட்டில்!

இன்று நாம் கர்லான் மெத்தையில் கரடுமுரடாக படுத்து புரண்டாலும் முந்தைய ஜெனரேஷன் பயன்படுத்திய பொருட்கள் ஆல்வேஸ் கிளாசிக்தானே! அதையேதான் இணையத்தில் வைரலாகியுள்ள ஆஸ்திரேலிய விளம்பரமும் ஞாபகப்படுத்தியுள்ளது.


ட்விட்டரில் மின்னல் வேக வைரலிலுள்ளது,   ஆஸ்திரேலியாவின் மேட் இன் ஆஸ்திரேலியா கட்டில் விளம்பரம்தான். நாம் இந்தியாவில் காலங்காலமாக பயன்படுத்திய கற்றாலை நார், நூலில் செய்வார்களே அதே கட்டில்தான். டிரெடிஷனல் இந்தியர்களுடையது என்ற பெயரில் மார்க்கெட்டிலுள்ள இக்கட்டில் நீளம், அகலம் எல்லாம் கஸ்டமரின் விருப்பத்திற்கேற்ப செய்து தரப்படும் என உலா வரும் விளம்பரத்தில் கிறுகிறுப்பு தருவது கட்டிலின் விலைதான்.அப்படி என்ன விலை? ஜஸ்ட் ரூ. 50 ஆயிரம்

முதல்வர் திறந்து வைத்த டாய்லெட்!

விஐபிகளை சூப்பர் மார்க்கெட், ஜவுளிக்கடை, நகைக்கடை என ரிப்பன் வெட்டி கடையை ஓபன் செய்ய கூப்பிடுவார்கள். ஆனால் மத்தியப்பிரதேச முதல்வரை புதுமையாக டாய்லெட் திறக்க அழைத்திருக்கிறார்கள்.

போபாலில் திறந்தது டாய்லெட்தான். ஆனால் அது பிரத்யேகமாக திருநங்கைகளுக்கானது என்பதால்தான் ம.பி. முதல்வர் சிவராஜ்சிங் சௌகான் விழாவிற்கு தலைமை தாங்கி ரிப்பன் வெட்டினார். "எனது அரசு திருநங்கை இனத்தவரின் உரிமைகளை நிச்சயமாக பாதுகாக்கும். அவர்களுக்கு எதிரான செயல்பாடுகளை மேற்கொள்வோருக்கு தண்டனை நிச்சயம்" தீர்க்கமாக பேசியுள்ளார் சௌகான். 35 லட்ச ரூபாயில் போபால் முனிசிபாலிட்டி இந்த கழிவறையைக் கட்டியுள்ளது. இதில் மேக்அப் ரூமும் உண்டு. இந்தியாவிலேயே முதல் முயற்சியாக ஆண், பெண், திருநங்கை என மூவரும் பயன்படுத்த முடிவது இதன் ஸ்பெஷல்.   

சீட்பெல்ட் பெனால்டி!

லைசென்ஸ் கொண்டுவரவில்லையா? நிச்சயம் ட்ராஃபிக் போலீஸ் வார்னிங் கொடுத்து பெனால்டி விதிப்பார்கள். ஆனால் அதுவே ஆபீசில் தவறு செய்தால் என்ன செய்வார்கள் என்பதற்கு எக்ஸ்ட்ரீம் சாம்பிள் இது.

சீனாவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் பணிபுரியும் பெண் சுவரில் டேப் வைத்து ஒட்டப்பட்டு இருக்கும் போட்டோவை வெளியிட்டு "பாருங்கள், என் சக ஆபீஸ் நண்பர் என்னை கண்டுகொள்ளாமல் வேலை செய்கின்றனர்" என பதிவிட்டிருந்தார். இப்படியொரு தண்டனை எதற்கு? சுவரில் ஒட்டப்பட்டிருந்த பெண் ஆபீசுக்கு வரும்போது காரில் சீட்பெல்ட் அணியாதது கம்பெனிக்கு தெரிய வந்ததால்தான் இந்த கறார் தண்டனை. 11am -5pm வரை செயல்படும் ஆபீசில் தாமதமாக வருவது, முன்னமே கிளம்புவது ஆகியவற்றுக்கும் இதேபோல ஸ்பெஷல் தண்டனைகள் உண்டு என ரூல்ஸ் லிஸ்டையும் ரிலீஸ் செய்து திகில் கிளம்பியுள்ளார் இந்த லேடி. மிலிட்டரி ஆபீஸ்!


செல்ஃபீ கல்யாணம்! -ரோனி

மேரேஜ் செய்ய பக்கா வேவ்லென்த்தில் இன்று சரியான ஜோடி கிடைப்பது ஈஸி டாஸ்க்கா என்ன? வேறுவழி, வெயிட்டிங் கார்டு போட்டுவிட்டு காத்திருக்கலாம்தான், ஆனால் காலம் தலையில் வெள்ளை அடித்துவிடுமே? இத்தாலி லேடி லாரா மெசி போல இதுபோல சிச்சுவேஷனில் செம தில் முடிவு எடுத்தார். என்ன அது?

இங்கிலாந்தைச் சேர்ந்த நாற்பது வயது மாடல் பெண் லாரா, பனிரெண்டு ஆண்டு ரிலேஷன்ஷிப் முறிந்தவுடன் இன்ஸ்டன்ட்டாக தன்னைத்தானே செல்ஃப் கல்யாணம் செய்துகொண்டார். இல்லீகல் திருமணமான இதற்கும் 70 கெஸ்ட்டுகள் வந்திருந்து பங்ஷனை பரவசப்படுத்தியுள்ளனர். "என் ஃப்யூச்சர் இன்னொருவரை சார்ந்திருப்பதை நான் விரும்பவில்லை. திருமணத்திற்காக என் வாழ்வின் சந்தோஷத்தை தியாகம் செய்ய முடியாதுஎனவே என் நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் அறிவித்துவிட்டே என்னை நானே திருமணம் செய்துகொண்டேன்" என அதிரடியாக நாளிதழில் தில் பேட்டி கொடுத்தது பலரையும் ஷாக் அடிக்க வைத்துவிட்டது. உண்மையில் செல்ஃபீ புள்ள இவங்கதான்.  


 ஐபோன் அபேஸ்!

இந்தியாவில் பிக்பாக்கெட்டுகள் புதுசல்ல. ஆனால் அபேஸ் செய்யும் ஏரியா முக்கியம். போட்டோ எடுத்த பாரீன்காரரிடம் ரூட்டு போட்டு போனை ஆட்டையைப் போட்ட ஹிஸ்டரி பிக்பாக்கெட் நிகழ்வு இது.

டெல்லியிலுள்ள ரெட்ஃபோர்டில் தன் ஐபோனில் சில ஜாலி போட்டோக்களை எடுத்துக்கொண்டிருந்தார் உக்ரைன் நாட்டு தூதரான இகோர் போலிகா. சடக்கென ப்ரேமுக்குள் பர்மிஷன் கேட்காமல் நுழைந்த பிக்பாக்கெட் மனிதர், ஐபோனை சடக்கென பாக்கெட் செய்து மின்னலாக மறைந்துவிட்டார். அப்போது இகோரின் செக்யூரிட்டியும் அருகில் இல்லை. ட்ரைவரும் வெளியே காரில் இருந்திருக்கிறார். நாட்டின் முக்கிய ஸ்பாட்டான செங்கோட்டையிலேயே இப்படியா? திருதிருவென முழித்த இகோர், பின் போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறார். இன்கிரடிபிள் இந்தியா! 



கல்யாணத்தில் குழந்தை தொழிலாளர்கள்!

கல்யாணத்தை கிராண்டாக ஐஸ்க்ரீம், தாம்பூலம், ஆர்க்கெஸ்ட்ரா கச்சேரி என கொண்டாடலாம். ஆனால் குழந்தைகளை ஆடம்பரத்திற்காக படுத்தி எடுத்தால் நியாயமா?

லங்காவின் கண்டி மாவட்டத்தைச்  சேர்ந்த தம்பதிகளின் மெகா ஆடம்பர திருமணம் இது. மணப்பெண் அணிந்திருந்த புடைவையின் நீளம் 3.2 கி.மீ. பிரச்னை அதல்ல. அதனை தூக்கிப்பிடித்திருந்த 250 குழந்தைகளும் அரசுப்பள்ளியில் படிப்பவர்கள். அதோடு சாலையில் நடந்த தம்பதிகளுக்கு பூத்தூவியது அரசுப்பள்ளியைச் சேர்ந்த நூறு மாணவர்கள். மாநில முதல்வர் சரத் ஏகநாயக கல்யாணத்தின் ஸ்பெஷல் சீஃப் கெஸ்ட். "பள்ளிக்கு கல்வி கற்க வந்த மாணவர்களின் தன்மானத்தை குலைக்கும்  செயலை தண்டித்தே ஆகவேண்டும். இதுதொடர்பாக என்கொய்ரி நடந்துவருகிறது" என சீறுகிறார் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் இயக்குநரான டே லிவேரா.

அகதிகளுக்கு மிளகாய் ஸ்ப்ரே!- ரோனி

மியான்மரில் ராணுவத்தினரின் அச்சுறுத்தலால், ஆகஸ்ட் 25 லிருந்து இன்றுவரை 4 லட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கயா முஸலீம்கள் வங்கதேசத்திற்குள் அகதியாக நுழைந்துள்ளனர்.

.நா சபை, மியான்மரின் நடந்த இந்த அவலத்தை இனப்படுகொலை என குறிப்பிட்டுள்ள நிலையில் இந்தியா வங்கதேச எல்லையில் அகதிகளை கையாள சிம்பிள் ஐடியாவை கண்டுபிடித்துவிட்டது."அகதிகளை தாக்கவோ, கைது செய்யவே அவசியமில்லை. எனவே அவர்கள் இந்திய எல்லை தாண்ட முயற்சித்தால் மிளகாய் ஸ்ப்ரே பயன்படுத்துகிறோம்."  என அதிர வைக்கிறார் தில்லியைச் சேர்ந்த எல்லை பாதுகாப்புப்படை அதிகாரி ஒருவர். 2014 ஆம் ஆண்டிலிருந்து இந்திய அரசால் கைது செய்யப்பட்டுள்ள ரோஹிங்கயா கைதிகளின் எண்ணிக்கை 270. ரோஹிங்கயாக்கள் சட்டவிரோத அகதிகள் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விமர்சித்துள்ளது அரசின் நடவடிக்கைகளுக்கு ஒரு சோறு பதம்.   


கைகுலுக்கினால் எய்ட்ஸ்!

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என சுற்றிவரும் தகவல்கள் நிஜமா, பொய்யா என்றே அனுப்புபவருக்கும் தெரியாதபடி, பலருக்கும் ஷேர் ஆவது இன்றைய ட்ரெண்ட்.  பஞ்சாப் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம்PSACS) பஞ்சாபியில் வெளியிட்ட நோட்டீஸ் ஒன்று பரபரப்பை கிளப்பியுள்ளது.

கைகுலுக்கினால், நோயாளி பயன்படுத்திய போன், பாத்திரங்கள், கம்ப்யூட்டரை, டாய்லெட்டை பயன்படுத்தினால் எய்ட்ஸ் வரும் என திகில் புளுகு செய்திகள் அதில் இருந்தன. அரசு இப்படி செய்தி வெளியிடலாமா என அசல் இந்தியனாய் பலருக்கும் ஷேர் செய்ய நானோ செகண்டில் இந்தியாவே பீதியானது. பிறகுதான் அது 2014 ஆம் ஆண்டு பிரிண்ட் செய்த நோட்டீஸ் என தெரிந்திருக்கிறது. "ஒரு லட்சம் நோட்டீஸ்களை தவறாக அச்சடித்துவிட்டோம். பிழைகளை கண்டுபிடிப்பதற்கு முன்பே 5,800 நோட்டீஸ்கள் பல மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டதுதான் பிரச்னை" என்கிறார் எய்ட்ஸ் தடுப்பு சங்க இயக்குநர் பவன் ரேகா பெரி. பிரேக்கிங் நியூஸ் நடுக்கம்! 

இது அமைதிப்புறா அல்ல!

இங்கிலாந்தைச் சேர்ந்த மார்க் அண்ட் ஸ்பென்சர் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் உடைகளை தூசு தட்டுவதை விட அங்கு வந்து உட்கார்ந்து லந்து செய்யும் மர்ம புறாவை விரட்டியே தாவு தீருகிறது அந்நிறுவனத்தின் ஊழியர்களுக்கு.

வெளியே விரட்ட ஊழியர்கள் செய்யும் அத்தனை முயற்சிகளையும் சிம்பிளாக ஊதித்தள்ளிவிட்டு அடுத்த செக்‌ஷனில் போய் உயரமாய் அமர்ந்து இளைப்பாறும் புறாவின் வீடியோ இணையத்தில் மிஸ்ட்ரி ஹிட். எங்கிருந்து இந்தப்புறா வருகிறது, சொல்லி வைத்தது போல ஒரே கட்டையை சுற்றி வரக்காரணம் என்ற கேள்விகளோடும், புறாவை  விரட்டல் டாஸ்க்கில் ஜெயிக்கவும் முடியாமல் திருதிருவென விழிப்பது ஊழியர்கள்தான்

தொகுப்பு: ரோனி ப்ரௌன்