முத்தாரம் ஒருபக்கம்!



சர்க்கரை இனிக்கிற சர்க்கரை!

அலெக்ஸாண்டர் காலத்தில் இந்தியர்கள் கண்டுபிடித்ததுதான் சர்க்கரை(மூலம் சமஸ்கிருத வார்த்தை சர்க்கரா). ஒரு கிராமில் 4 கலோரி கொண்ட சர்க்கரையை ஒரு ஸ்பூன் எடுத்தால் 20 கலோரி கணக்கு. இன்சுலின் சுரப்பு கட்டுப்பாட்டிற்குள் வைக்கும் சர்க்கரை அளவு குறைந்தால் உங்களுக்கு கபகப பசி எடுக்கும்.

சர்க்கரைக்கு மாற்றாக சாக்கரின்(1879,ஃபால்பெர்க்), சைக்ளமேட்(1937), ஆஸ்பர்டாம், சுக்ரலோஸ், ஏஸ்சல்ஃபேம், நியோடாம் ஆகியவையும், தாவரங்களிலிருந்து (ஆல்கஹால்) வகையில் எரிதிடால், மானிடால், சார்பிடால் ஆகியவை பயன்படுகின்றன. உணவுவகைகளின் டெக்ஸர் கூடுதல் சுவைக்கு உதவுகின்றன. அதிக இனிப்பு, குறைந்த கலோரி இவற்றின் பிளஸ். ஆனால் இவற்றை சாப்பிட்டால் இனிப்பு குறைந்த பழங்களை சாப்பிட மூளை தூண்டாமல் போகும் ஆபத்து உள்ளது. டைப் 2 நீரிழிவு, மாரடைப்பு வருவதற்கான சான்ஸை குறைந்த கலோரி சர்க்கரைகள் ஏற்படுத்துவதாக கனடா மருத்துவக்கழக ஆராய்ச்சி அறிக்கை  தெரிவிக்கிறது

       
 ஹைட்ரஜன் குண்டு Vs அணுகுண்டு!

இரு குண்டுகளுக்கும் ஒற்றுமை, உயிர்பலி வாங்குவதோடு கதிர்வீச்சையும் ஏற்படுத்தும் என்பதுதான்.

ஹைட்ரஜன் குண்டு அணுகுண்டை விட ஆயிரம் மடங்கு அதிக சக்தி கொண்டது. 1954 ஆம் ஆண்டு அமெரிக்கா ஹைட்ரஜன் குண்டை முதன்முதலில் சோதித்தது என தகவல் கூறுகிறது நியூயார்க் டைம்ஸ் நாளிதழ்."ஜப்பான் நாகசாகியில் விழுந்த அணுகுண்டிற்கு பதில் ஹைட்ரஜன் குண்டை போட்டிருந்தால் கதிர்வீச்சு பல கி.மீ பரவி மேலும் பல்லாயிர மக்கள் இறந்திருப்பார்கள். ஹைட்ரஜன் குண்டு ஏற்படுத்தும் சேதத்திற்கு அணுகுண்டு அருகில் கூட வரமுடியாதுஎன்கிறார் அணுபொறியியல் பேராசிரியர் எட்வர்டு மோர்ஸ்.

அணுகுண்டின் அட்வான்ஸ்டு அப்டேட் ஹைட்ரஜன் குண்டு எனலாம். யுரேனியம், புளுட்டோனியம், ட்யூடெரியம், ட்ரிடியம் ஆகியவை அவசியத்தேவை. இதில் குண்டு வெடிப்பது, அணுக்கள் ஒன்று சேர்வதால்தான். மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் ஹை்ட்ரஜன் குண்டின் எடை குறைவு என்பதால் இதனை ஏவுகணையிலும் பயன்படுத்தலாம்.
span style='mso-spacerun:yes'>       



 முதுமையின் சீக்ரெட்!

ஜெர்மனியின் மெய்ன்ஸிலுள்ள மூலக்கூறு உயிரியல்(IMB) மைய ஆராய்ச்சியாளர்கள் மனிதர்களுக்கு முதுமையாவதன் சீக்ரெட்டை கண்டுபிடித்துள்ளனர். செல்கள் தன்னைத்தானே உண்ணும் முறையான autophagy முறையில் ஈடுபடும் செல்கள், செல் முதிர்ச்சிக்கு காரணம் என்ற இந்த ஆராய்ச்சி அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த அறிக்கை மூலம், பார்க்கின்சன், அல்சீமர்ஸ், ஹன்டிங்டன் ஆகிய நோய்களுக்கான சிகிச்சை முறையை அப்டேட் செய்ய முடியும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். ஆட்டோபேஜி முறையை நிறுத்தியபோது உடலில் நல்ல முன்னேற்றங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டு கொண்டனர். "நாங்கள் புழுக்களின் ஒரு செல் மீது ஆட்டோபேஜி டெஸ்ட்டை செய்தபோது, உடனே அது புழுக்களுக்கு பயனளித்தது. இம்முறையில் ்இளமையை நீட்டிக்க 50% சான்ஸ் உண்டு" என்கிறார் ஆராய்ச்சியாளர் தாமஸ் வில்ஹெய்ம். ஆட்டோபேஜி செல்களால் பல்வேறு நோய்களின் பாதிப்பை குறைக்க முடியும்

 தண்ணீரில் எரிபொருள்!

இங்கிலாந்தின் லேன்காஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தண்ணீரிலிருந்து புதுப்பிக்கும் வகையில் எரிபொருளைக் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு க்வாண்டம் தொழில்நுட்பம் உதவியுள்ளது.

முன்னமே ஹைட்ரஜனை போட்டோஎலக்ட்ரோலைசிஸ் முறையில் சோலார் ஆற்றல் மூலம் நீர் மூலக்கூறுகளைப் பயன்படுத்தி ஆக்சிஜன், ஹைட்ரஜனாக பிரித்திருந்தனர். இதனை கமர்ஷியலாக செய்ய அதிக நிதி தேவை. கரிம எரிப்பொருட்களின் பயன்பாட்டு அளவு 90%. இந்த விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சோலார் முறையில் ரெடியாகும் ஹைட்ரஜனை மின்சாரமாக போட்டோவோல்ட் செல்களில் சேகரித்து வசதிகள் இல்லாத கிராமங்களுக்கு எடுத்துச்சென்று அதனை எரிபொருளாக எரிவாயுவைப் பயன்படுத்துவது போலவே பயன்படுத்தலாம். "சக்தியான மாற்று எரிபொருளைக் கண்டறியவது காலத்தின் கட்டாயம்" என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்களான  சாம் ஹாரிசன் மற்றும் மனுஷ் ஹெய்ன்.

தொகுப்பு: அண்ணாமலை, சிவ கணேசன்