அறிவியல் நியூஸ்!




வாட்டர் பாட்டில் கட்டிடம்!

கான்க்ரீட்டில் கட்டப்படும் கட்டிடங்களை இன்னும் ஸ்ட்ராங்காக்க பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாம் என எம்ஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 20% வலு கூடும் என்கிறது ஆராய்ச்சி தகவல். பிளாஸ்டிக்கை ரீசைக்கிள் செய்வதால் 4.5% கார்பன் வெளியீடும் குறையும் என்பது கூடுதல் பிளஸ்.


"சிமெண்டில் கலக்கப்படும் பிளாஸ்டிக் அளவு குறித்து கவனித்து வருகிறோம். சரியான முடிவை அறிய சிமெண்ட் மிக்சர் அளவை கச்சிதாக உருவாக்குவது அவசியம்" என்கிறார் ஆராய்ச்சிக்குழுவைச் சேர்ந்த குணால் கப்வாடே பாடீல். ஒளியை பிரதிபலிக்கும் தன்மை பிளாஸ்டிக்கில் இருப்பதால் காமா கதிர்வீச்சு அபாயம் பற்றி சர்ச்சை எழுந்தது. "இந்த வகை பிளாஸ்டிக்கில் கதிர்வீச்சு உருவாக பெரிய வாய்ப்பில்லை" என்கிறார் எம்ஐடியின் அணு பொறியியல் ஆராய்ச்சியாளர் மைக்கேல் ஷார்ட்.
2
தொழிற்சாலைகளை மூடிய சீனா!

சீனாவின் காற்றுமாசுபாடு உலகறிந்த பிரச்னை என்பதால் உடனடியாக அதை சரிசெய்ய அரசு களமிறங்கியுள்ளது. "தற்போது ஃபேக்டரிகளுக்கு மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் திடீர் இன்ஸ்பெக்சன் சென்று தவறுகளுக்கு ஃபைன் விதிப்பதோடு சிறைதண்டனையும் உண்டு." என்கிறார் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த கேரி ஹூவாங். கடந்த ஆண்டு 80 ஆயிரம் தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் விதிகளை மீறியுள்ளதாக சீன அரசு கண்டுபிடித்து தொழிற்சாலைகளை மூடவும் உத்தரவிட்டுள்ளது.  

"காற்றிலுள்ள மாசுக்களின் அளவு 2035 ஆண்டு 35 மைக்ரோகிராம்களாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.மக்களின் எதிர்பார்ப்புக்கேற்ப காற்று மாசுபாடு குறையவில்லை என்றாலும் இதற்கு சிறிது காலம் தேவை" என சூழல் அமைச்சர் லி கன்ஜீ கூறியுள்ளார். 2016 ஆம் ஆண்டை விட பெய்ஜிங்கில் 10 மைக்ரோகிராம் குறைந்து 60 ஆக உள்ளது. விகிதம் 2.3%.

  3
அமேஸிங் பிட்ஸ்!

கோடைக்காலத்தில் ஈபிள் டவரின் உயரம் 15செ.மீ அதிகரிக்கிறது.

பொட்டாசியம், சோடியம், சீசியம், ரப்டியம்,லித்தியம் ஆகிய உலோகங்கள் நீருடன் சேரும்போது எலக்ட்ரான்  பரிமாற்றத்தால் கடுமையான வெடிபொருளாகின்றன.

மனிதர்களின் வயிற்றில் உருவாகும் ஹைட்ரோகுளோரிக் அமிலம், பிளேடுகளை அரித்து கரைக்கும் தன்மை கொண்டவை. pH அளவு 2-3.

1971 ஆம் ஆண்டு ரோமானிய மருத்துவரான Corneliu Giurgea என்பவரால் nootropics எனும் மூளையின் திறனை மேம்படுத்தும் மருந்துகள் உலகிற்கு அறிமுகமாயின. இன்று இதன் மார்க்கெட் மதிப்பு 2 பில்லியன் டாலர்கள்.

உலகில் சராசரியாக பிறக்கும் இரண்டாயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தை அரிதாக வாயில் பற்களுடன் பிறக்கிறது

4
பிட்ஸ் எக்ஸ்பிரஸ்!

உலகிலேயே சைக்கிளை 166.94 mph என அதிவேகமாக ஓட்டியவர் ஃப்ரெட் ரோம்பெல்பெர்க்.

கிராஃபிட்டி எனும் சுவர் ஓவியக்கலை பிலடெல்பியாவில் 1960 ஆம் ஆண்டு தொடங்கியது. லீகலாக கிராஃபிட்டி வரைய உலகெங்கும் 1,650 சுவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

குரூப்பாக உள்ள பாண்டா கரடிகளுக்கு Embarrassment என்று பெயர்.

இன்று படம் தியேட்டருக்கு வரும் முன் ரிலீசாகும் ட்ரெய்லர்கள், முன்பு தியேட்டர்களில் படம் சுபம் போட்டபின்பு திரையிடப்பட்டன.

ஒரே சிட்டிங்கில் 86 பென்குயின்களை லன்ச்சாக சாப்பிடும் சமர்த்து துருவக்கரடிகளுக்கு உண்டு

5
கருப்பு வெள்ளை பாண்டா!

பாண்டா கரடிகளின் கருப்பு வெள்ளை நிறம் அவை பனியில் மறையவும், கருப்பு நிறம் தகவல் தொடர்புக்காகவும் உதவுகிறது என்பதை கலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.

"பாண்டா கரடிகளைப்போல வேறெந்த பாலூட்டியும் இப்படியொரு நிறத்தை கொண்டிருக்கவில்லை என்பது ஆராய்ச்சியாளர்களுக்கு பெருங்குழப்பம் தந்தது. தற்போது, பாண்டாக்களின் தோள், கால்களில் உள்ள மறைவான சூழலில் பிற உயிரிகளை தொடர்புகொள்ளவும், கண்களைச் சுற்றியுள்ள கருப்பு நிற திட்டுகள் பிற பாண்டாக்களை அடையாளம் காணவுமான பொது அடையாளமாக உள்ளது" என்கிறார் ஆராய்ச்சியாளரான டிம் கார்கோ. மூங்கில்களை மட்டுமே உணவாக் கொள்வதால் உடலில் கொழுப்பு படிவது குறைவதோடு, முழு ஆண்டும் சுறுசுறுப்பாக பல்வேறு சூழல்களுக்கும் பயணப்படும் அவசியம் ஏற்படுகிறது என்பதும் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
பு தியேட்டர்களில் படம் சுபம் போட்டபின்பு திரையிடப்பட்டன.


ஒரே சிட்டிங்கில் 86 பென்குயின்களை லன்ச்சாக சாப்பிடும் சமர்த்து துருவக்கரடிகளுக்கு உண்டு.    
6
சூப்பர் கம்ப்யூட்டர் ரெடி!

அமெரிக்காவில் அடுத்த பவரான சூப்பர் கம்ப்யூட்டர் ரெடியாகிவிட்டது. டென்னிசியிலுள்ள ORNL லேபில், சூப்பர் கம்ப்யூட்டர் விரைவில் அறிவியல் கேள்விகளுக்கு பதில் சொல்லும். தற்போதுள்ள செம மைலேஜ் தரும் சூப்பர் கம்ப்யூட்டரின் பெயர் டைட்டன்.

"சுமித் கம்ப்யூட்டரில் சில விஷயங்களை இப்போதுதான் ரன் செய்துகொண்டுள்ளோம்" என்கிறார் ஆராய்ச்சியாளரான பிளாண்ட். 2018 ஆம் ஆண்டில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் கம்ப்யூட்டர் இது. அண்டம் உருவானது முதற்கொண்டு கேட்டு பதில் பெறும் ஆற்றல் கொண்ட கணினி இது. "நட்சத்திரம் வெடிப்பு ஏன் உங்களையும் என்னையும் பற்றிக்கூட அறியலாம்" என்கிறார் பிளாண்ட். இதற்கான ஆய்வுச்சோதனைகள் 2019 ஆண்டு தொடங்கலாம் என தகவல் கூறுகின்றது ORNL குழு. தற்போதைய சூப்பர் கம்ப்யூட்டர் சீனாவிலுள்ள சன்வே டைஹூலைட். 125 petaFLOPS திறன் கொண்டது. சாதாரண கணினிகளின் திறன் 63GFLOPS.

நன்றி: முத்தாரம்
தொகுப்பு: விஜயேந்திரன், பாலு மூர்த்தி