வெளிப்படைத்தன்மை இன்றைய அரசுகளுக்கு தேவை! -கோபி அன்னான்





முத்தாரம் நேர்காணல்

வெளிப்படைத்தன்மை இன்றைய அரசுகளுக்கு தேவை!

கோபி அன்னான், முன்னாள் ஐ.நா செயலாளர்.
தமிழில்: .அன்பரசு


.நா சபையின் பொதுசெயலாளராக பத்து ஆண்டுகள் பணி. பணியிலிருந்தபோதும் ஆப்பிரிக்காவில் நடைபெறும் வரி ஏய்ப்புக்குக்கும் ஊழல்களுக்கும் எதிராக தன் குரல் உயர்த்திய ஒரிஜினல் அஞ்சா நெஞ்சர்.

ஆப்பிரிக்கா ஏன் இன்னும் வறுமையிலேயே உள்ளது?

ஆப்பிரிக்கா ஏழை நாடல்ல. வளமான நிலங்களையும் வறுமையான மக்களையும் கொண்டுள்ளது. வெளிநாட்டிலுள்ள ஆப்பிரிக்கர்களால் நாட்டிற்கு கிடைக்கும் தொகை 160 பில்லியன் டாலர்கள். நாட்டின் வளங்கள் 200 பில்லியன் அளவு வெளியே சென்றுவிடுவதால்தான் ஆப்பிரிக்காவிற்கு இந்த அவலநிலை.

2013 ஆம் ஆண்டு ஆப்பிரிக்கா அறிக்கைப்படி, காங்கோவுக்கு(2010-2012) காப்பர்,கோபால்ட் கனிமங்களை வர்ஜின் தீவுகளிலுள்ள நிறுவனங்களுக்கு விற்பனை செய்ததில் 1.36 பில்லியன் நஷ்டமாகியுள்ளது என்று கூறியுள்ளீர்கள். நஷ்டதொகை, காங்கோவின் இரண்டாண்டு கல்வி மற்றும் மருத்துவ பட்ஜெட்டிற்கானது. தவறு எங்கே நிகழ்கிறது?

அரசுகள் பன்னாட்டு நிறுவனங்களுடன் செய்துகொள்ளும் ஒப்பந்தங்களிலிருந்து பிரச்னை தொடங்குகிறது. சில நாடுகள் தொழில்முதலீட்டை ஊக்குவிக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏற்கமுடியாத சலுகைகளை தருகின்றனர். அதை நிறுவனங்கள் சுரண்டலுக்கு பயன்படுத்திக்கொள்கின்றனர். முதலீட்டை திரும்ப பெறும் முன்பே லாபத்தை பகிரத்தொடங்குவது மாற்று ஐடியா. பல்லாண்டுகளுக்கு வரி தராமல் தொழில் செய்வது தவறான முறை.

காங்கோவைச் சேர்ந்த தொழிலதிபர்கள், வெளிநாட்டு நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் என நாட்டை ஒன்றிணைந்து சுரண்டுகிறார்கள். இதில் யாரை குற்றம்சாட்டுவது?

அதிகாரிகள் நாட்டின் வளங்களை மலிவு விலைக்கு அயல்நிறுவனங்களுக்கு தாரை வார்த்து நாட்டுக்கும் மக்களுக்கும் துரோகம் செய்கின்றனர். மக்களுக்கான வளர்ச்சியையும், உணவையும் பேராசைக்காரர்களுக்கு கொண்டு சேர்ப்பது இவர்கள்தான். விதிகளை விரும்பாத தொழிலதிபர்களும் முதலீட்டாளர்களும் நாங்கள் லஞ்சம் தராவிட்டால், போட்டியாளர் தருவார் என்ற வாதத்தை  நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.

இதற்கு தீர்வு என்ன?

அரசு நிறுவனங்களுடன் செய்துள்ள ஒப்பந்தத்தில் அரசுக்கு கிடைக்கும் வரி, நிறுவனத்துக்கு கிடைக்கும் லாபம் உள்ளிட்ட விவரங்களை வெளிப்படையாக மக்களுக்கு அறிவிப்பதே ஒரே தீர்வு. கிடைத்த வருமானத்தை அரசு என்ன செய்தது என்பதும் இதில் முக்கியம். ஒவ்வொரு நாடும் இதில் பொறுப்பெடுத்து கவனிப்பது அவசியம். after Doctors Without Borders முறையில் வரி வசூலிக்கும் குழுவை ஆப்பிரிக்காவில் உருவாக்கி உள்ளது நம்பிக்கை தருகிறது.

இராக்கில் எண்ணெய்க்கு உணவு திட்டத்தில் உங்கள் மகன் கோஜோ ஊழலில் ஈடுபட்டுள்ளார். கடந்தாண்டு வெளியான பனாமா பேப்பரில், பல்வேறு நிறுவனங்களில் பங்குதாரராகவும் கோஜோ உள்ளது வெளியாகியுள்ளதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள். 

தவறை மகன் அல்லது உறவு என்றோ சொல்லி மறைக்க முடியாது. கோஜோ தன் கம்பெனி மூலம் அபார்ட்மெண்ட் வாங்கியுள்ளது தேவையில்லாத ஒன்று. அவர் ஏன் இந்த வழியை தேர்ந்தெடுத்தார் என்று எனக்கு தெரியவில்லை. இதில் நான் அறிவுறுத்த, கண்டிக்க ஏதுமில்லை.

நன்றி: ஜெர்மன் தினசரி Suddeutsche Zeitung.