ஜாலி நியூஸ்!






ஜிப்ஸி இந்தியர்!

உலகம் சுற்ற கையில் பணமும், வைராக்கிய மனமும் தேவை. அதையும் அட்வென்ச்சராக மாற்ற முடிந்தால் நீங்கள்தான் அடுத்த துருபாத் மிஸ்ட்ரி. குஜராத் மனிதரின் அண்மைய அட்வென்ச்சர் பயணம் சீட் நுனி த்ரில் சுவாரசியம்.

இங்கிலாந்தின் லண்டனில் வேலை செய்து வந்த துருபாத் மிஸ்ட்ரிக்கு, இந்தியாவில் செட்டிலாக ஆசை. ஆனால் இந்தியாவுக்கு செல்வதை அட்வென்ச்சர் பயணமாக மாற்ற, பொதுப்போக்குவரத்தை( பஸ்,ட்ரெய்ன், டாக்சி,ஒட்டகங்கள்) பயன்படுத்தி 14 நாடுகள், 21 ஆயிரம் கி.மீ.களைக் கடந்து இந்திய மண்ணை முத்தமிட்டிருக்கிறார் மிஸ்ட்ரி. கடந்த மே 25 அன்று ராவுல்,வானெடியா, மிஸ்ட்ரி என மூன்று நண்பர்களாக கிளம்பினாலும் இடையில் ராவுலும் வானெடியாவும் கழன்றுகொள்ள, சைபீரியா,சீனா,திபெத் என சுற்றி நாற்பது நாட்களுக்கு பிறகு ஜூலை 3 அன்று தான் பிறந்த உதய்பூர் மண்ணை மிதித்து ஆசுவாசமாகியுள்ளார் மிஸ்ட்ரி.


 லைஃப் கொடுத்த வடா பாவ்!

இங்கிலாந்தின் லண்டனில் பொருளாதார மந்தநிலை வரும்வரை ஸ்டார் ஹோட்டலில் வேலை செய்த மும்பை பூர்வீகவாசியான சுஜய் சோஹானிக்கு எல்லாமே சந்தோஷ மொமண்ட்தான். அதே நிலையில்தான் அவரது கல்லூரி நண்பரான சுபோத் ஜோஷியும் இருந்தார்.

வேலை பறிபோன நிலையில் என்ன செய்வது இருவரும் தவித்தபோதுதான வடாபாவ் விற்க ஐடியா சட்டென மூளையில் பொறி தட்ட, 2010 ஆம் ஆண்டு விநாயகரை வலம்வந்து கடைக்கு பூஜை போட்டு வடாபாவை பாதசாரிகளுக்கு சாம்பிள் கொடுத்தார்கள். பர்கரில் புதுவெரைட்டியா? வியந்தவர்களின் ரியாக்‌ஷனை பார்த்தே நிம்மதி ஆனவர்களின் சுறுசுறு உழைப்பில் ஏழு ஆண்டுகள் கடந்ததே தெரியவில்லை. இன்று 60 வகை இந்திய ஸ்ட்ரீட் உணவுகளை 35 ஊழியர்களை பணியமர்த்தி லண்டன்வாசிகளுக்கு பரிமாறி தோஸ்த் இருவரும் சம்பாதித்தது மட்டும் ஆண்டுக்கு 4.39 கோடிகள்

 விண்வெளியில் வீரநடை!

முன்பு வானத்திலுள்ள நட்சத்திரங்களை ஆச்சரியமாக பார்த்த ஜெனரேஷனுக்கு இன்று விண்வெளியில் வல்லரசு நாடுகளின் தகத்தகாய முயற்சிகள் பேரதிசயமாகவே இருக்கும். அப்படி ஒன்றைத்தான் ரஷ்யா சாதித்துள்ளது.

விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை வல்லரசு நாடுகள் கைகோர்த்து அமைத்து வருகின்றன. அதில் ரஷ்யாவின் விண்வெளி வீரர்களான செர்ஜி ரியாஸான்ஸ்கி, ஃபெடோர் யுர்ச்சிகின் இருவரும் விண்வெளியில் நானோ சாட்டிலைட்டை நிறுவ வீரநடை நடந்த 360 டிகிரி வீடியோவை வெளியிட்டுள்ளனர். விண்வெளியில் வீரர்கள் வாக்கிங் சென்ற முதல் 360 வீடியோ என்பதால் உலகெங்கும் செம ஹாட் வைரலாகி வருகிறது. ஆகஸ்ட் மாதம் பதிவு செய்யப்பட்ட 3 நிமிட வீடியோ 2 லட்சம் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.   

 ரீல் சினிமாவில் ரியல் போலீஸ்!

ரீல் லைஃபும் அநியாய நிஜ வாழ்வும் மிங்கிளானால்  குழப்பம் ஏற்படுவது லாஜிக்தானே? அமெரிக்காவிலும் அப்படியொரு சின்ன குழப்பம் ஏற்பட்டுவிட்டது. விளைவு, போலீஸ் வரைக்கும் சென்றுவிட்டது.

அமெரிக்காவின் இண்டியானா பகுதியில் ஹோட்டலில் மாஸ்க் அணிந்த மனிதர் கையில் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்தார்.அங்கு ரோந்து சென்று கொண்டிருந்த போலீஸ்காரருக்கு அதைப் பார்த்ததும் நெஞ்சு விம்மி மூக்கு புடைத்து நம் எல்லையில் திருடனா நெவர் என பாய்ந்து சுட்டவரின் புல்லட்டில் அசகாய முயற்சி செய்து தப்பித்தார் மாஸ்க் மனிதர். அடுத்த ரவுண்டுக்கு போலீஸ புல்லட் தேட, பதறிய மாஸ்க் மனிதர் "சார் இது சினிமா ஷூட்டிங், என்னோட பெயர் ஜெஃப் டஃப்" என கெஞ்ச போலீசின் மெல்ல கோபம் தணிந்திருக்கிறது. போலீஸ் ஸ்டோரி பயங்கரம்!  


ரெஸ்யூம் பாடகர்!

ரெஸ்யூமை கிரியேட்டிவ் கில்லியாக ரெடி பண்ணி ஜாப் வாங்குவதுதான் இன்றைய ட்ரெண்ட். அதை ஏன் பேப்பரில் ஆர்டினரியாக தரவேண்டும் என யோசித்த அபூர்வ சிந்தாமணி டாவெய்ன் கிர்க்லாண்ட் என்ன செய்தார் தெரியுமா?

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த டாவெய்ன் கிர்க்லாண்டு இந்தாண்டுதான் தனது டிகிரியை முடித்தார். வேலை அனுபவம் வேண்டுமே? தனக்கு மிகவும் பிடித்த வெய்னர் மீடியா என்ற டிஜிட்டல் ஏஜன்சிக்கு இன்டர்ன்ஷிப்பிற்கு விண்ணப்பிக்க கிரியேட்டிவாக விரலால் நெற்றிப்பொட்டைத் தட்டி  யோசித்தார். கிடைத்தது ஐடியா. பாடகர் கென்ட்ரிக் லாமரின் டிஎன்ஏ பாடலின் மெட்டில் அப்படியே ரெஸ்யூமை பாடலாக மாற்றி யூட்யூப்பில் ஏற்றி, அப்ளாஸ் அள்ளியதால்  சந்தோஷத்தில் மிதக்கிறார் டாவெய்ன்.

தொகுப்பு: ரோனி ப்ரௌன்

பிரபலமான இடுகைகள்