ஜாலி பக்கங்கள் 2!





சாதனை ஜம்ப்!

உலகமே நம்மை உற்றுப்பார்க்க வைக்க ஏதாவது செய்யவேண்டும் என்றால் பலரும் உடனே ஓகே சொல்வது உயரமான இடத்திலிருந்து குதிக்கலாம் என்ற ஆப்ஷனுக்குத்தான். பிரேசிலைச் சேர்ந்த சாகச வீரர்கள் செய்ததும் அப்படியொரு சாதனைக்காகத்தான்.


பிரேசிலைச் சேர்ந்த 245 சாகச விரும்பிகள், 30 மீட்டர் உயரமுள்ள ஹோர்டோலேண்டியா நகர பாலத்திலிருந்து  கின்னஸ் சாதனைக்காக குதிக்க பிளான் செய்தனர். கயிற்றில் உடலை பிணைத்து ஹெல்மெட் என பக்கா பாதுகாப்போடு ஜம்ப் செய்து, முந்தைய சாதனையான 149 பேர் இதே இடத்திலிருந்து குதித்த ரெக்கார்ட்டை சுக்குநூறாக உடைத்தெறிந்து அசகாய சாதனை செய்திருக்கிறது இக்குழு. கின்னஸ் அமைப்புக்கு தற்போதுதான் சாதனைக்கான மனு அனுப்பப்பட்டிருக்கிறது

2
ஆதார் படுகொலை!

ஆதாரை போன் நம்பரோடு இணைக்கும் டஜன் கணக்கிலான மெசேஜ்கள் இன்னும் நிற்கவில்லை. பிறந்த குழந்தைக்கும் ஆதார் என எமர்ஜென்சி காலமாக அவசரப்படுத்திய அரசின் ஆதார் வேட்கைக்கு முதல் பலி, ஜார்க்கண்டில் நிகழ்ந்திருக்கிறது.

ஜார்க்கண்டின் சிம்தேகா மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பத்தினர், கூலித்தொழிலாளிகள். படிப்பறிவற்றவர்களுக்கு ஆதார்தான் இனி எல்லாம் என எப்படித்தெரியும்? அக்குடும்பத்தின் சந்தோஷ்குமாரியின் படிப்பு,பசி இரண்டையும் அக்கிராம பள்ளிக்கூடம் தீர்த்து வைத்தது. ஆனால் நவராத்திரி விடுமுறை அதற்கும் பிரச்னையாக, பசியால் துடித்த சந்தோஷ்குமாரிக்கு கிராமத்தினரின் கருணை சிலவேளை பசி தீர்த்தாலும், உயிரைக் காப்பாற்றவில்லை. "அரிசி கிடைத்திருந்தால் என் மகளை காப்பாற்றியிருப்பேன். ஆனால் எங்களுக்கு அரசு ரேஷன்கார்டை அளிக்கவில்லை." என கண்கலங்க பேசுகிறார் சந்தோஷ்குமாரியின் அம்மா

3
ஆதார் படுகொலை!

ஆதாரை போன் நம்பரோடு இணைக்கும் டஜன் கணக்கிலான மெசேஜ்கள் இன்னும் நிற்கவில்லை. பிறந்த குழந்தைக்கும் ஆதார் என எமர்ஜென்சி காலமாக அவசரப்படுத்திய அரசின் ஆதார் வேட்கைக்கு முதல் பலி, ஜார்க்கண்டில் நிகழ்ந்திருக்கிறது.

ஜார்க்கண்டின் சிம்தேகா மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பத்தினர், கூலித்தொழிலாளிகள். படிப்பறிவற்றவர்களுக்கு ஆதார்தான் இனி எல்லாம் என எப்படித்தெரியும்? அக்குடும்பத்தின் சந்தோஷ்குமாரியின் படிப்பு,பசி இரண்டையும் அக்கிராம பள்ளிக்கூடம் தீர்த்து வைத்தது. ஆனால் நவராத்திரி விடுமுறை அதற்கும் பிரச்னையாக, பசியால் துடித்த சந்தோஷ்குமாரிக்கு கிராமத்தினரின் கருணை சிலவேளை பசி தீர்த்தாலும், உயிரைக் காப்பாற்றவில்லை. "அரிசி கிடைத்திருந்தால் என் மகளை காப்பாற்றியிருப்பேன். ஆனால் எங்களுக்கு அரசு ரேஷன்கார்டை அளிக்கவில்லை." என கண்கலங்க பேசுகிறார் சந்தோஷ்குமாரியின் அம்மா


4

கிரேட் செல்ஃபீ ஜோடி! -ரோனி

காதல் வரும்போது ஆணும் பெண்ணும் செய்யும் அன்லிமிடெட் லூசுத்தனங்களுக்கு எல்லையே கிடையாது. ரஷ்ய காதல் ஜோடி,ஹாங்காங்கில் உலகம் பீதியடைய செய்திருப்பதும் அந்த வகையறாதான்

ஏஞ்சலா நிக்கோலாவ் மற்றும் அவரது காதலரான இவான் பீர்கஸ் இருவருக்கும் வேலையே, உயரமான இடங்களில் காதல் பொங்க ஜோடியாக ஏறி, செல்ஃபீ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ஹிஸ்டரியில் இடம்பிடிப்பதுதான். ஏஞ்சலா ஹைட்டான இடங்களில் யோகா, அக்ரோபாட் பயிற்சிகள் செய்து உலகையே மெர்சலாக்கிய வரலாறு கொண்டவர். ஹாங்காங்கில் உள்ள உயரமான கிரேனில் செக்யூரிட்டி பொருட்கள் இல்லாமல் செல்ஃபீ ஸ்டிக் வித் கேமராவோடு ஏறி, ஜோடிகள் இருவரும் லவ் பெருக எடுத்த செல்ஃபீக்கள்தான் இணையத்தில் இன்று வைரல் புயல்.

5
டிஸ்மிஸ் ஆன நாய்!

ஆபீசில் கொடுத்த டாஸ்க்குகளை சரியாக செய்வது நமக்கே கஷ்டமாக இருக்கும்போது நாய்களை அன்ஃபிட் என சொல்லி பற்களை கடிப்பது நியாயமா? அமெரிக்காவின் சிஐஏ அண்மையில் செய்த திடீர் டிஸ்மிஸ் ஆக்சன்தான் இப்படி உலகை சொல்ல வைத்திருக்கிறது.

கருப்பு லேப்ரடார் நாயான லூலுவுக்கு ஒன்றரை வயசு. சிஐஏ, பாம்களை கண்டுபிடிக்க சில வாரங்கள் லூலுவை செலக்ட் செய்து கர்மசிரத்தையாக பயிற்சி கொடுத்தது. ஆனால் லூலு, தோட்டத்திலுள்ள முயல்களையும் அணில்களையும் சேஸ் பண்ணி லபக்கி லன்ச் சாப்பிடவே மெனக்கெட்டது. இந்த கருப்பு பப்பியை வைத்து பாம்களை எக்காலத்திலும் கண்டுபிடிக்க முடியாது என விரக்தியடைந்த ஏஜன்சி, லூலுவை பணியிலிருந்து தடாலடியாக டிஸ்மிஸ் செய்துவிட்டது.தற்போது அதன் ட்ரெய்னர் வீட்டில் குழந்தைகளுடன் ஜாலியாக விளையாடிக்கொண்டிருக்கிறது லூலு. நாட்டிபாய்! 


6
ஐலேசா ரயில்!

பைக்,பஸ், ஆட்டோ செல்ஃப் எடுக்காமல் தள்ளிய எக்ஸ்பீரியன்ஸ் நம்மில் பலருக்கும் இருக்கலாம். ஆனால் ரயிலை தள்ளியிருக்கிறீர்களா? இந்த அரிய புதுமைச்சம்பவம் நடந்தது சாட்சாத் நம் புதிய இந்தியாவில்தான்.

மும்பையின் சென்ட்ரல்- லக்னோ செல்லும் சுவிதா எக்ஸ்பிரஸ் பயணத்துக்கு ரெடியாகும்போது திடீரென சிக்னல் தாண்டி சென்று நின்றது. 16 கோச்சுகளைக் கொண்ட சுவிதா ரயிலை கையால்தள்ளி பிளாட்பார்முக்கு கொண்டு சேர்த்திருக்கிறது ரயில்வே போர்ட்டர்கள், போலீஸ் அதிகாரிகள் கொண்ட குழு. "ரயிலைத்தள்ளிய 40 பேர்களைக் கொண்ட ரயில்வே டீமுக்கு 10 ஆயிரம் பரிசு அறிவித்துள்ளோம்." என கித்தாய்ப்பாய் பேசுகிறார் மும்பை டிவிஷனல் மேலாளர் முகுல் ஜெயின். ஐலேசா சொன்னீங்களா? 

 7
தேர்வுக்கு ஆப்சென்ட்; மதிப்பெண்ணில் டாப்!-ரோனி

பிட் அடித்து பாஸாவது ஒரு கேட்டகிரி என்றால், பரிட்சைக்கு வராமலே யூனிவர்சிட்டி டாப்பர்ஸ் பட்டியலில் இடம்பெறுவது அசாதாரணம்தானே? மும்பை மாணவர் மார்க் வாங்கியதில் ஏகத்துக்கும் கன்ஃப்யூஷன்.என்னதான் பிரச்னை?

மும்பையின் அரசு சட்டக்கல்லூரி மாணவி பார்ஷ்வா பன்கரியா, கடைசி செமஸ்டரில் ஆப்சென்ட் என ரெக்கார்ட் சொல்லுகிறது. ஆனால் பரிட்சையில் பாஸாகி டாப் மார்க்(71.75%) வாங்கியதை அவரது விடைத்தாள் ப்ரூப் செய்ய தாறுமாறு கன்ஃப்யூஷன். மும்பை யூனிவர்சிட்டி ஆன்லைனில் ரிசல்ட்டுகளை வெளியிடுவதற்கான முயற்சியில் 18 லட்சம் விடைத்தாள்கள் தேங்கியதால் ஏற்பட்ட குளறுபடியே ஆப்சென்ட் மேட்டருக்கு காரணம் என பின்னர் தெரிந்துள்ளது. மூவாயிரத்திற்கும் மேற்பட்ட விடைத்தாள்கள் காணவில்லை என்பதால் இன்னும் 13 பாடங்களுக்கான ரிசல்ட் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம்

8
வளர்ப்பு பிராணிகளுக்கு வரி!-ரோனி

வாழ்ந்தாலும் செத்தாலும் வரி கட்டிவிட்டு அடுத்த வேலையை பாருங்கள் என்பதுதான் இன்றைய அரசின் மாறாத தத்துவம். காலனி கால ஆங்கிலேயர்களுக்கு இணையாக புதிய வரிகளை கண்டுபிடித்து மக்களை பிழிந்து கல்லா கட்டுவதை பஞ்சாப் அரசு விதித்துள்ள வரி நிரூபிக்கிறது.  

அண்மையில் பஞ்சாப் அரசு, வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிராணிகளான நாய், பூனை,ஆடு,பன்றி,யானை,ஒட்டகம்,குதிரை,எருமை உள்ளிட்ட பிராணிகளுக்கு வரி கட்டவேண்டும் என பெருமையாக அறிவித்தவர் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அமைச்சருமான நவ்ஜோத்சிங் சித்து. ஒவ்வொரு விலங்குகளுக்கும் தனி ஐடியோடு அதன் உடலில் மைக்ரோசிப்பும் பொருத்தி, ஆண்டுதோறும் பணம் கட்டி லைசென்ஸை புதுப்பித்துகொள்ளும் வசதியும் அறிமுகமாயுள்ளது. நாய்,பூனை,பன்றி ஆகிய விலங்குகளுக்கு ரூ. 250, ஓட்டகம், குதிரை,எருமை,யானை ஆகிய விலங்குகளுக்கு ரூ.500 கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.  

 நன்றி: குங்குமம்





பிரபலமான இடுகைகள்