முத்தாரம் பிட்ஸ்!






விண்வெளியில் டூர்!

அண்மையில் இங்கிலாந்தைச் சேர்ந்த வர்ஜின் நிறுவனர் ரிச்சர்ட் பிரான்ஸன் பின்லாந்தில் Virgin Galactic நிறுவனத்தின் மூலம் 2018 இல் விண்வெளி சுற்றுலாவுக்கு மக்களை கூட்டிச்செல்லும் திட்டத்தை அறிவித்துள்ளார். 2016 ஆம் ஆண்டிலிருந்து விண்வெளிக்கு சென்று திரும்பும் விமானங்களை சோதித்து வருகிறார் பிரான்ஸன்.


"விண்வெளிக்கு பயணிப்பதற்கான சோதனைகளை செய்து வருகிறோம். அடுத்த ஆண்டில் விரைவில் விண்வெளிக்கு செல்வோம்" என நம்பிக்கை தெரிவித்துள்ளார் பிரான்ஸன். 2007 ஆம் ஆண்டிலிருந்து விண்வெளிக்கு செல்லும் பிளானை தன் கனவாக கொண்டிருக்கிறார் இவர். Spaceshiptwo விமானம், பயணிகளை பூமியின் பரப்பிற்கு மேல் 15 ஆயிரம் மீட்டர் கொண்டு செல்லும். தற்போது 700 டிக்கெட்டுகளை விற்பனைக்கு வைத்திருக்கிறது வர்ஜின் காலக்டிக் நிறுவனம். ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 2,50,000

ரஷ்யாவின் ஆயுத உடை!

ரஷ்யாவில் Ratnik 3 என்ற புதிய நவீன ஆயுத உடையை தயாரித்து ஆச்சரியப்படுத்தியுள்ளனர். அணுஆயுத பாதிப்பை தடுக்கும் வாட்ச் உட்பட 59 ஹைடெக் விஷயங்கள் இதனை வஜ்ர வலிமை கொண்டதாக மாற்றியுள்ளது. புதிய உடைக்கு இன்ஸ்பிரேஷன் ஸ்டார் வார்ஸ் படத்தின் இம்பீரியல் ஷாடோ ஸ்‌டோர்ட்ரூப்பர்கள்.

ரோஸ்டெக் நிறுவனம் தயாரித்துள்ள இந்த உடையில் புல்லட்ப்ரூப், ஹெல்மெட், HUD திரை என அசத்துகிறது."மின்காந்த அலைகள் , நியூக்ளியம் வெடிப்பின் கதிர்வீச்சுகள் உள்ளிட்டவற்றிலிருந்து அலர்ட் செய்து காப்பாற்றும் வசதி கொண்டது" என்கிறார் பிரிசிஷன் மெஷின் எஞ்சினியரிங் நிறுவனத்தைச் சேர்ந்த ஆலெக் ஃபாஸ்டோவ். ரஷ்யா இப்படி முயற்சிக்கிறது எனில் அமெரிக்கா, அயர்ன்மேன் போல உடையை ராணுவ வீரர்களுக்கான உருவாக்கி வருவதோடு அடுத்த தலைமுறைக்கான புதிய லேசர் ஆயுதங்களையும் உருவாக்கி வருகிறது. இதில் சீனாவும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறது.

சோடியம் பேட்டரி!

இன்று லித்தியம் அயான் பேட்டரிகள்தான் ஸ்மார்ட் போன் டூ கார்கள் வரை உலகை ஆளுகின்றன. லித்தியம் என்பது விலைமதிப்பு கூடிய பெறுவதற்கு அரியதும் கூட. இதற்கான மலிவு மாற்றுப்பொருளாக ஸ்டான்ஃபோர்டு யூனிவர்சிட்டி சிபாரசி செய்துள்ளது சோடியம் எனும் உப்பு.

"லித்தியத்திற்கு சோடியம் ஈடாகாது என்றாலும் மலிவான மாற்று நமக்கு அவசியம்" என்கிறார் ஸெனால் பாவ். சோடியம் பேட்டரிகள்(standard 18650) லேப்டாப்பிலும் பயன்படுகின்றன. அனோட் ஓக் இலையின் டிசைனில் அமைந்துள்ளது. சோடியம் அணுக்கள், பிரிந்தும் இணைந்தும் மின்திறனை அதிகம் தேக்கிவைக்கும் திறன் கொண்டவை என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மின்திறனில் லித்தியம் முன்னணியில் இருந்தாலும் சோடியம் அதனை விட 80% விலை குறைவு. இக்கட்டுரை, நேச்சர் எனர்ஜி ஆய்விதழில் வெளியாகியுள்ளது.  


 மாரத்தான் 26.2 கி.மீ.

1896 ஏதேன்ஸில் ஒலிம்பிக்ஸ் விளையாட்டைத் தொடங்கியவர்,Pierre de Coubertin. முதன்முதலில் போஸ்டனில் 1897 ஏப்ரல் 19 அன்று மாரத்தான் போட்டி நடைபெற்றது. கி.மு.490 இல் பெர்சியர்களுக்கும், ஏதேன்ஸ் அரசுக்கும் மாரத்தான் என்ற நகரில் நடந்த போரில் ஏதேன்ஸ் வென்றது என்ற செய்தியை சொல்ல Pheidippides என்ற வீரர் 25 கி.மீ. பாய்ந்தோடி வந்து Niki(வெற்றி) என்ற வார்த்தையை மட்டும் உச்சரித்துவிட்டு கீழே விழுந்து இறந்துபோனார்.

 மாரத்தான் பாலத்திலிருந்து ஒலிம்பிக் ஸ்டேடியம் வரை 24.85 கி.மீ தூரத்திற்கு மாரத்தான் நடைபெற்றது. இதில் கிரீக்கைச் சேர்ந்த தபால்காரர் 2:58:50 நிமிடங்களில் போட்டியை முடித்து No.1 இடம் பிடித்தார். 25பேர் கலந்துகொண்ட போட்டியில் 9 பேர் மட்டுமே இலக்கை எட்டிப்பிடித்தனர்.

1908 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்ஸில், மாரத்தான் போட்டி வொய்ட்சிட்டி மைதானத்திலிருந்து வின்ட்சர் காஸ்டில்வரை  26 கி.மீ தூரம் நடைபெற்றது. பின் ராணி குடும்பம் விளையாட்டை பார்க்க வசதியாக 385 யார்டுகள் இடம் அதிகரிக்கப்பட்டது. IAAF இதே தொலைவை மாரத்தானுக்காக நிர்ணயித்தது அப்படியே தொடர்கிறது. 

தொகுப்பு: லோக்கல் ப்ரூஸ்லீ, வினோதா எஸ்.