இடுகைகள்

குங்குமம் ஒருபக்கம்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ரோனியின் ஜாலி பக்கங்கள் 2!

படம்
ஒரு ரூபாய் கிளினிக்   மும்பையின் லோக்கல் ட்ரெயினின் ( கல்யாண் - சிஎஸ்டி ) பெண்கள் கம்பார்ட்மெண்ட் . இரவு 10.17 நிறைமாத கர்ப்பிணி வலியில் துடித்துக்கொண்டிருக்க உடனே தாதர் ஸ்டேஷனில் வண்டி நிறுத்தப்பட்டு ஒரு ரூபாய் கிளினிக்கின் டாக்டர் பிராஜ்வாலித் அவருக்கு சிகிச்சை அளிக்க , பிறந்த குழந்தையும் தாயும் நலம் . கடந்த மார்ச் 2017 இல் மும்பை உயர்நீதிமன்றத்தில் சமூக செயல்பாட்டாளர் சமீர் ஜாவேரி , ரயில் நிலையங்களில் நிகழும் விபத்துகளுக்கு அவசர உதவி அளிக்க மருத்துவமனைகள் அவசியம் என வாதிட , அதை ஏற்ற நீதிமன்ற உத்தரவின்படி முதல்கட்டமாக தாதர் , கர்லா , வடாலா , கட்கோபார் , முலுந்த் ஆகிய இடங்களில் 24 மணிநேரமும் செயல்படும் வண்ணம் Magicdill என்ற தனியார் நிறுவனத்தின் உதவியுடன் கிளினிக் அமைக்கப்பட்டன . ஒரு கிளினிக்கில் நான்கு மருத்துவர்கள் சேவைபுரியும் இங்கு மினிமம் சிகிச்சை கட்டணம் ரூ .1. தற்போது 14 ஸ்டேஷன்களில் ஒரு ரூபாய் கிளினிக் செயல்பட்டு வருகிறது . n>   ஜாக்கி ஜம்ப் ! கிங்சைஸ் வாழ்க்கை வாழ யாருக்குத்தான் ஆசையில்லை . ஆனால் அதற்கும் பில் போட்டால் மனசு தாங்குமா

ரோனியின் ஜாலி பக்கங்கள்!

ஆஸ்திரேலியா கட்டில் ! இன்று நாம் கர்லான் மெத்தையில் கரடுமுரடாக படுத்து புரண்டாலும் முந்தைய ஜெனரேஷன் பயன்படுத்திய பொருட்கள் ஆல்வேஸ் கிளாசிக்தானே ! அதையேதான் இணையத்தில் வைரலாகியுள்ள ஆஸ்திரேலிய விளம்பரமும் ஞாபகப்படுத்தியுள்ளது . ட்விட்டரில் மின்னல் வேக வைரலிலுள்ளது ,   ஆஸ்திரேலியாவின் மேட் இன் ஆஸ்திரேலியா கட்டில் விளம்பரம்தான் . நாம் இந்தியாவில் காலங்காலமாக பயன்படுத்திய கற்றாலை நார் , நூலில் செய்வார்களே அதே கட்டில்தான் . டிரெடிஷனல் இந்தியர்களுடையது என்ற பெயரில் மார்க்கெட்டிலுள்ள இக்கட்டில் நீளம் , அகலம் எல்லாம் கஸ்டமரின் விருப்பத்திற்கேற்ப செய்து தரப்படும் என உலா வரும் விளம்பரத்தில் கிறுகிறுப்பு தருவது கட்டிலின் விலைதான் . அப்படி என்ன விலை ? ஜஸ்ட் ரூ . 50 ஆயிரம் .  முதல்வர் திறந்து வைத்த டாய்லெட் ! விஐபிகளை சூப்பர் மார்க்கெட் , ஜவுளிக்கடை , நகைக்கடை என ரிப்பன் வெட்டி கடையை ஓபன் செய்ய கூப்பிடுவார்கள் . ஆனால் மத்தியப்பிரதேச முதல்வரை புதுமையாக டாய்லெட் திறக்க அழைத்திருக்கிறார்கள் . போபாலில் திறந்தது டாய்லெட்தான் . ஆனால் அது பிரத்யேகமாக திருநங்கைகளுக்கானது என்

ஜாலி பிட்ஸ்!

படம்
பேபி ட்ரைவர்! ஹாஸ்பிடலை அல்ட்ரா மாடர்னாக மாற்றினாலும் அதன் சுத்தம் , மருந்து வாசம் , அதீத அமைதி உள்ளே நுழைந்ததும் மம்மிக்களின் இடுப்பிலுள்ள பேபிக்கள் அலற ஆரம்பித்து விடுகின்றன . அமெரிக்காவில் பேபிக்களின் நெர்வஸ் குறைக்க புது ரூட் பிடித்துள்ளனர் . அமெரிக்காவின் சான்டியாகோவிலுள்ள ரேடி குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு கார் கொடுத்துள்ளனர் . விளையாட்டு கார் அல்ல பாஸ் . ஆபரேஷன் அவசியம் உள்ள குழந்தைகள் காரில் ஜாலியாக ஆபரேஷன் தியேட்டருக்கு செல்லலாம் . மெர்சிடஸ் , லம்போர்க்கின் , பிஎம்டபிள்யூ என எட்டு சாய்ஸ்களும் இதிலுண்டு . கார்களுக்கு டொனேஷனை சான்டியாகோ காவல்துறை கொடுத்துள்ளதோடு , ஆபரேஷன் நேரங்களில் க்யூட் காரில் உலாவரும் பேபி ட்ரைவர்களுக்கு டெடி பியர் உட்பட பல கிப்ட்களையும் கொடுத்து நெர்வஸ் போக்குவது ஃபன் ஐடியா .  ஏர்போர்ட்டில் ஜாலி டான்ஸ் ! ஏர்போர்ட்டில் விமானத்திற்காக வெயிட்டிங் . ஃபிளைட் லேட் . விமானம் கிடைக்காததால் அனைத்து வேலைகளும் கடலில் பிளாஸ்டிக் போல தேங்கும் டென்ஷன் . அதே சிச்சுவேஷனை ஜாலி டான்ஸால் ஒரு பெண் சூப்பராக சமாளித்திருக்கிறார் .