இடுகைகள்

சுசாந்த் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜென் இசட் இளைஞனின் காதல்கதை - சி லா சோ

படம்
சி லா சோ- தெலுங்கு இயக்கம் - ராகுல் ரவீந்திரன் இசை - பிரசாந்த் விகாரி ஒளிப்பதிவு எம் சுகுமார் திருமணத்திற்கு முன்னே போர்ச் கார் வாங்கவேண்டும், ஐரோப்பா டூர் போக வேண்டும் என லட்சியங்களை வைத்துள்ள இளைஞர், தன் திருமணத் துணையை எப்படி தேர்ந்தெடுக்கிறார் என்பதே கதை. தலைப்பு பற்றி கேட்டால் கல்யாண மாப்பிள்ளை என்று பொருள் சொல்கிறது விக்கிப்பீடியா. அதிலேயே ஒரு ஆர்வத்தை ஏற்படுத்திவிடுகிறது படம். ஆஹா இளைஞர்களுக்கான படம். இதனால் நாயகன் சுசாந்த் ஷார்ட்ஸ் போட்டே பாதிநேரம் நடித்திருக்கிறார். இதனால் படமும் இயல்பாக வந்துள்ளது. கிடைத்த கேப்பில் எல்லாம் வெண்ணிலா கிஷோரின் காமெடி, இனிமையாக நம்மைக் கவர்கிறது. பஞ்சாபி பெண்ணான ரூகானி சர்மா உண்மையில் நடிக்க முயற்சி செய்திருக்கிறார். பிரசாந்த் விகாரி கிடைத்த  வாய்ப்பில் சிறப்பான இசையில் மனதை ரசிக்க வைக்கிறார். சிம்பிளான கதையில் பெண்களை கௌரவமாக காட்டியுள்ளதற்கு சபாஷ் சொல்லி இயக்குநர் ராகுல் ரவீந்திரனை பாராட்டலாம். ரோகிணி, அனுஹாசன், ஜெயப்பிரகாஷ் கொஞ்ச நேரம் வந்தாலும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஐயையோ கதை என்று சொன்னால் பஸ் டிக்கெட