இடுகைகள்

ஆசிரியர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆசிரியர்களின் கல்விச்சிந்தனைகளை வளர்க்கும் திட்டம்!

படம்
 கல்வித்துறையில் கண்டுபிடிப்புகளின் தேவை!  ஆசிரியர்களிடையே புதிய சிந்தனைகளை வளர்த்து கல்வித்திறனை அதிகரிக்க, மத்திய அரசு ஜீரோ இன்வெஸ்ட்மென்ட் இன்னோவேஷன்ஸ் ஆப் எஜூகேஷன் இனிஷியேட்டிவ்ஸ் (ZIIEI) திட்டத்தைச் செயற்படுத்தி வருகிறது.  இந்தியாவிலுள்ள பல்வேறு துறைகளில் புதிய கண்டுபிடிப்புகள் நடந்து வருகின்றன. ஆனால் கல்வித்துறையில் இந்த மாற்றங்கள் குறைவாக இருக்கின்றன. இதற்காக இந்திய அரசு, புதிய முயற்சிகளை நடைமுறைக்கு கொண்டு வர முயன்று வருகிறது.  பள்ளியில் மாணவர்களுக்கு கற்பிக்கும் முறைகளில் மாற்றம் கொண்டுவர ஆசிரியர்களின் பங்களிப்பு அவசியம். அவர்களின் ஆதரவின்றி மாணவர்களை ஊக்கப்படுத்துவது கடினம். இதனால் அவர்களுக்காகவே அரசு, அரவிந்தர் சொசைட்டியுடன் இணைந்து கல்வி மாற்றச் சிந்தனைகளை உருவாக்கி வருகிறது.  இதற்காக 2015ஆம் ஆண்டு உருவான (ZIIE)இத்திட்டத்தில் இந்தியா முழுக்க உள்ள திறமையான 65 ஆசிரியர்களை இணைத்துள்ளனர். இவர்களின் கல்வி பயிற்றுவிக்கும் யோசனைகளை அரசுப்பள்ளிகளில் செயற்படுத்த திட்டம் வகுத்துள்ளனர்.  கல்வித்துறையில் பிற துறைகளைப் போல அதனை கற்பிக்கும் முறை தொடங்கி பாடங்கள், தேர்வு, மதிப்பெண் என பல்

மறைந்துபோன சாக்பீஸ்களின் வரலாறு!

படம்
சாக்பீஸ்களின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது. காரணம், அனைத்து வகுப்புகளும் புரஜெக்டர்கள் மூலம் நடக்கத் தொடங்கிவிட்டன. சாக்பீஸ்களின் காலம் வேறுமாதிரியானது. போர்டை கறுப்பாக்க இலைகளை பறித்து வந்து கரும்பலகைகளில் பூச மாணவர்களுக்கு இடையே கடும் போட்டி நடக்கும். சாக்பீஸ் காரம் மூக்கில் நுழைய அதனை தூய்மைப்படுத்தியதை இனி பலரும் இனிய நினைவாக மனதில் வைத்துக்கொள்ளவேண்டியதுதான். சாக்பீஸ் பெட்டிகளை தலைமையாசிரியரின் அறையிலிருந்து எடுத்து வரும் அதிகாரம், ஆசிரியர்களுக்கு நெருக்கமான மாணவர்களுக்கு மட்டுமே உண்டு. அதை எடுத்துவருவதும், பாதுகாப்பதுமான பணிகளை லீடர்கள் செய்து வந்தனர். மினி சர்வாதிகாரியாக உணர வைத்த பெருமைக்கு சாக்பீஸூம் முக்கியக் காரணம். புகழ்பெற்ற சாக்பீஸ்களைத் தயாரிக்கும் ஜப்பான் நிறுவனமான ஹோக்கோரோமோ புல்டச் சாக், தன் தயாரிப்புகளை நிறுத்திவிட்டது. இந்த நிறுவனத்தை கொரிய நிறுவனம் கையகப்படுத்திவிட்டது. சாக்பீஸ் டேட்டா இனி,,,, சாக்பீஸ் கால்சியம் கார்பனேட்டில் உருவாக்கப்படுகிறது. கடலில் கிடைக்கும் கோகோலிதோபோர்ஸ் எனும் பாசியைப் பயன்படுத்தி சாக்பீஸ்கள் உருவாக்கப்படுகின்றன. பின்னர் வணிக