இடுகைகள்

கார்பன்டை ஆக்சைடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மீன்களுக்கு உணவாகும் கார்பன் டை ஆக்சைடு!

படம்
கரியமிலவாயு இனி விலங்குகளுக்கு உணவு! விவசாயம், உணவுத்துறை மூலம் வெளியாகும் கரியமிலவாயுவை விலங்குகளுக்கு உணவாக்கும் தொழில்நுட்பத்தை இங்கிலாந்து நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த டீப் பிரான்ச் பயோ டெக்னாலஜி(Deep branch Biotechnology) நிறுவனம், கார்பன் டை ஆக்சைடை விலங்குகளுக்கு உணவாக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளது.  கார்பன் டை ஆக்சடை வெளியிடும் நிறுவனங்களோடு இணைந்துள்ள இந்த நிறுவனம், சிமெண்ட், மின்சாரம், ஆக்சிஜன், புரதம் ஆகியவற்றைத் தயாரிக்கிறது. இதிலுள்ள புரதச்சத்து மீன்களுக்கும் பிற விலங்குகளுக்கும் உணவிடப் பயன்படுகிறது. முதலில் இந்நிறுவனத்தின் கண்டுபிடிப்பான பாக்டீரியா, கார்பன் டை ஆக்சைடை உண்கிறது. இது வெளியிடும் வாயுவைப் பக்குவப்படுத்தினால், புரத உணவு தயாரிக்கப்படுகிறது.  2021 ஆம் ஆண்டு புரத உணவை தொழிற்சாலைகள் நிறுவி பெருமளவு தயாரிக்க டீப் பிரான்ச்  நிறுவனம், முடிவு செய்துள்ளது. கரியமிலவாயுவை பாக்டீரியா மூலம் புரத உணவாக்குவது 1970 ஆம் ஆண்டிலேயே உருவான ஐடியாதான். ஆனால் தற்போதுதான் அதனை வணிகரீதியில் செயல்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

கொசு கடிப்பதன் பின்னால் உள்ள அறிவியல் என்ன?

படம்
சிலரை மட்டும் கொசு கடிக்க காரணம் என்ன? நண்பர்களோடு வெளியே செல்லும்போது சில இடங்களில் உங்களை மட்டும் கொசு கடிப்பதாக உணர்வீர்கள். சிலர் அங்கு கொசு இருப்பதையே உணராதவர்களாக இருப்பார்கள். அதற்கு காரணம் பல. அதில் முக்கியமானது நாம் வெளிவிடும் கரியமில வாயு. இதன் அடர்த்தியைப் பொறுத்தே கொசுக்கள் நம்மைக் குறிவைத்து தாக்குகின்றன. அடுத்து, பாக்டீரியாக்கள்( eptotrichia ,  Delftia ,  Actinobacteria Gp3  and  Staphylococcus ) தோல்வழியாக வெளியேறும் வியர்வையில் செய்யும் பல்வேறு வேதிவினைகள். இவை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் மற்றும் உடலின் தோல் வெப்பம் ஆகியவை கொசுக்களை சிலரை நோக்கி அதிகம் ஈர்க்கின்றன. கருப்பு நிறத்தை நோக்கி அதிகம் ஈர்க்கப்படுவதாகவும் ஆராய்ச்சி அறிக்கைகள் கூறுகின்றன. நிஜமோ பொய்யோ கொசு கடித்தால் எந்த ஆராய்ச்சியும் வேண்டாம். பட்டென ஒரே போடு. சோலி முடிந்தது. நன்றி: லிவ் சயின்ஸ்