இடுகைகள்

ஓபியம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாஃபியா உதவியுடன் குற்றவழக்குகளை ஆராயும் கேம்பிரிட்ஜ் பட்டதாரி!

படம்
  மை ரூம்மேட் இஸ் டிடெக்டிவ் சி டிராமா ராக்குட்டன் விக்கி 36 எபிசோடுகள் பார்க்க நன்றாகவே இருக்கின்றன. தலைப்பு சற்று பொருந்தி வரவில்லை. கொரிய டிராமாக்களைப் பார்த்து இப்படி தலைப்பு வைப்பார்கள் போல. லூ யாவோ என்பவரைத் தேடி காவல்துறை நிறையப் பேர் வந்திருக்கிறார்கள். தூங்கி எழுந்தவர், ஐயையோ என தப்பி ஓடுகிறார். ஆனால் எதிரே வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சியோவோ, லூவின் மூக்கில் குத்தி அவரை லாக்கப்ப்பிற்கு அழைத்து செல்கிறார். வழக்கு இதுதான். அவர் தொழிலதிபர் ஒருவரை கொன்றிருக்கிறார் என காவல்துறை சந்தேகப்படுகிறது. முன்தினம் நடந்த விருந்தில், லூ கடன் கொடுத்த தொழிலதிபரை திட்டியது   அனைவருக்கும் தெரிந்த செய்தியாகிவிடுகிறது. எனவே, காவல்துறை லூவை முக்கிய குற்றவாளியாக கருதுகிறது. லூ, சாசோன் என்ற வெளிநாட்டு வங்கியில் பணியாற்றுகிறார். தனது மீதுள்ள குற்றத்தை அவரே துடைப்பதோடு குற்றவாளியையும் கண்டுபிடித்து கொடுக்கிறார். அதிலிருந்து இன்ஸ்பெக்ட்ர் சியோவோ, ஆலோசகர் லூ யாவோ, பத்திரிகையாளர் பாய் யூனிங் ஆகிய மூவரும் கூட்டணி போட்டு குற்றங்களை கண்டுபிடிக்க தொடங்குகிறார்கள். கேம்ப்ரிட்ஜில் பட்டம் பெற்ற லூ, வாடகை

தாலிபன் எனும் அடிப்படை மதவாத தீவிரவாத இயக்கம் தோன்றிய வரலாறு!

படம்
  பா ராகவன் எழுத்தாளர் தாலிபன் பா ராகவன்   கிழக்கு பதிப்பகத்தின் முன்னாள் ஆசிரியரும், இந்நாள் மெட்ராஸ் பேப்பர் இணைய பத்திரிகையின் முதன்மை ஆசிரியருமான பா ரா எழுதிய நூல். நாவல்களை எழுதினாலும் கூட கட்டுரை நூல்களை திறம்பட நயமாக எழுதுவதில் சோடை போகாத எழுத்தாளர். வளரும் எழுத்தாளர்களுக்கு பயிற்சி வகுப்பு எடுத்து புதிய எழுத்தாளர்களை உருவாக்கி வருகிறார். அதில் அவருக்கு வருமான நலம் இருந்தாலும் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. கணபதி துதி முடிந்தது. நூலைப் பற்றி பார்ப்போமா? ஆப்கனிஸ்தான் பற்றிய நூலை படித்து முடிக்கும்போது, அங்கு மீண்டும் தாலிபன் ஆட்சி தொடங்கியிருக்கிறது. அதன் நேரடி விளைவாக மக்கள் துன்பமுற தொடங்கியிருக்கிறார்கள். இந்த அவல வாழ்க்கை ஏன் என பெண்கள் தற்கொலை செய்துகொண்டு வருகிறார்கள். மரணம் மிகப்பெரும் விடுதலை அல்லவா? ஆப்கனிஸ்தானில் ஓபியம் பயிரிட்டு அதை விற்பதன் மூலம் அந்த நாட்டிற்கு பெருமளவு பணம் கிடைக்கிறது. ஆனால் இந்த வியாபாரத்தால் பாகிஸ்தான், ஆப்கனிஸ்தானுக்கு லாபம் என்றாலும் போதைப்பொருள் சார்ந்த நிறைய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற வகையில் இந்தியாவுக்கு பெரும் தலைவலி.   த

சீனாவுக்கு கொடுக்கப்பட்ட ஹாங்காங்!

படம்
  இங்கிலாந்து மிகவும் தந்திரமான காரிய க்கார நாடு. தனது நலனுக்காக பிற நாடுகளை அழித்து மக்களைக் கொல்லவும் அது தயங்கியதில்லை. இந்தியாவை காலனி நாடாக்கிய தன்மையில் இதற்கான ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன. அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளை இந்த வகையில் சேர்க்கலாம்.  இங்கிலாந்து சீனாவில் இருந்து பீங்கான், தேயிலை, பட்டு ஆகியவற்றை இறக்குமதி செய்து வந்தது. இதற்கு தொகையாக வெள்ளியை வழங்கிவந்தது. ஒரு கட்டத்தில் சீனர்களின் பொருட்கள் தேவை, ஆனால் அவர்களுக்கு கொடுக்க வெள்ளி இல்லை. என்ன செய்வது? எனவே தந்திரமாக யோசித்த இங்கிலாந்து அரசியல்வாதிகள், வணிகர்கள் ஒரு திட்டம் வகுத்தனர். அதுதான், போதைப்பொருட்களை சீனாவில் கள்ளத்தனமாக விற்பது. அதில் கிடைக்கும் தொகையை வைத்து வெள்ளி வாங்கி அதனை இறக்குமதி செய்யும் பொருட்களுக்காக கொடுத்துவிடுவது....  இந்த சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரத்தை சீன பேரரசர் அறிந்து தடுத்தார். இதனால் ஓபியம் தொடர்பான போரை சீனாவும் இங்கிலாந்தும் நடத்தின. இந்த வகையில், 1839, 1856 ஆகிய ஆண்டுகளில் போர்கள் நடைபெற்றன. சீனா படைக்கு அப்போது பெரிய படைகளும் கடற்படைகளும் இல்லை.எனவே இரும