இரண்டு முறை திருமணம் நின்றுபோக.. பிரசாத் கல்யாணத்தில் கரை சேர்ந்தாரா இல்லையா?
பெல்லி வரமண்டி இயக்கம் பிரசாத் பெஹ்ரா நடிப்பு பிரசாத் பெஹ்ரா, விராஜிதா இன்ஃபினிட்டம் மீடியா பிரசாத்திற்கு திருமணம் உறுதியாகிறது. ஆனால் திருமணத்தன்று மண்டபத்தில் இருந்து ஒருமுறை அல்ல இருமுறை பெண்கள் ஓடிப்போய்விடுகிறார்கள். இதனால் திருமணத்தின் மேல் வெறுப்போடு இருக்கிறார். அதேநேரம் அவரது காதலி கஞ்சன் என்பவர், தனது நண்பரை மணம் செய்துகொள்வதைக் கேட்டு பொறாமைப்படுகிறார். கஞ்சனை திரும்பவும் காதலிக்க முயல்கிறார். பிரசாத்திறகு மணமானதா இல்லையா என்பதே வெப்சீரிஸின் கதை. யூட்யூபில் வெளியாகும் தெலுங்கு வெப்சீரிஸூக்கு பெரிதாக பட்ஜெட் கிடையாது. அலுவலகம், வீடு என இரண்டே இடங்களில்தான் படம்பிடிக்கிறார்கள். இதற்கு முன்னர் சிவாஜி ராஜா, விராஜிதா நடித்த வெப் சீரிஸைப் பற்றி விமர்சனம் செய்திருக்கிறோம். வெப்சீரிஸில் சிவாஜி ராஜா தனியாக போராடி காமெடி செய்திருப்பார். தொடக்கத்தில் நன்றாக இருந்தாலும் ஒருகட்டத்தில் அவருக்கு துணையாக அல்லது எதிராக கவுன்டர் கொடுக்க யாருமே இல்லாத நிலையில் சலிப்பு தோன்ற ஆரம்பித்தது. பிரசாத் பெஹ்ராவின் எழுத்து இயக்கத்தில் பெல்லி வரமண்டி வேறு விதமாக அனுபவத்...