இடுகைகள்

பாயும் பொருளாதாரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஏற்றுமதி, இறக்குமதியில் உள்ள வேறுபாடுகள்!

படம்
    பாயும் பொருளாதாரம் 10 ஒரு நாட்டில் தயாரிக்கும் பொருளை இன்னொரு நாடு விலைக்கு வாங்கிக்கொண்டால் அது இறக்குமதி. ஒரு பொருளை ஒரு நாடு இன்னொரு நாட்டிற்கு விற்பது ஏற்றுமதி. நியூசிலாந்தில் பால் வளம் அதிகம். எனவே, அவர்கள் அதை வளம் குன்றிய ஏழை நாடுகளுக்கு விற்கிறார்கள். சில நாடுகளில் இலவசமாக கொடுத்து தங்களுடைய பால் பொருட்களுக்கான சந்தையை உருவாக்கிக்கொள்ள முயல்கிறார்கள். ஏன்? ஏனென்றால் அங்கு பால்வளம் மிகுதி. இதனால் பால், பால் பொருட்கள் விலை மலிவாக கிடைக்கிறது. இப்போது உதாரணத்தைப் பார்ப்போம். நியூசிலாந்து பாலை பால் பொருட்களை மலிவாக விற்கிறது. சீனா, சோலார் பேனல்களை மலிவான விலையில் உற்பத்தி செய்து கொடுக்கிறது என்றால் பரஸ்பரம் இரு நாடுகளும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு பொருட்களை விற்றுக்கொள்ளலாம். இது இருநாடுகளுக்குமே லாபம்தான். தேசப்பாதுகாப்பு என முட்டுக்கொடுத்து தொலைத்தொடர்பு நுட்பங்களை அமெரிக்காவிடமிருந்து இந்தியா வாங்கலாம். ஆனால், காசு ஏராளமாக செலவாகுமே? பதிலுக்கு சீனாவிடம் குறைந்த விலைக்கு சிறந்த தொழில்நுட்பங்களை ஆசியாவிலேயே பெறலாம். ஆனால் இந்திய அரசை நடத்தும் மதவாத கட்சிக்கு கமிஷன் போய்...

வட்டி விகிதம் ஏற்படுத்தும் சாதக, பாதகங்கள்! - பாயும் பொருளாதாரம்

        பாயும் பொருளாதாரம் 8 வட்டி விகிதம் ஏற்படுத்தும் சாதக, பாதகங்கள்! உள்நாட்டு உற்பத்தி குறைவைப் பற்றி பேசினோம் அல்லவா? கும்பமேளாவுக்கு மக்களை ரயிலில் கூட்டிவந்து ஆற்றில் குளிக்கவைப்பதை விட அரசுக்கு நிறைய கடமைகள் பொறுப்புகள் உள்ளன. மும்பையில் முஸ்லீம் நடிகரைக் கத்தியால் குத்திவிட்டார்கள். அவர் முஸ்லீம் என்பதால் அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என மதவாத கட்சி வாதிடக்கூடும். பொருட்களின் விலை ஆண்டுதோறும் ஏறிக்கொண்டேதான் இருக்கும். அதை பணவீக்கம் எனலாம். மக்களின் வருமானம் உயர்ந்தால் பணவீக்கம் பற்றி பல்வேறு வர்க்க மக்களும் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், வருமானம் குறைந்து வேலைநேரம் அதிகரித்து பொருட்களின் விலையும் விண்ணுக்கு ஏறினால் மக்கள் வெளிப்படையாக பேசுவார்கள். கைக்கூலி ஊடகங்கள் முணுமுணுப்பாக பேசிவிட்டு, கோவில் குடமுழுக்கு, எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சு, பற்பசையில் உப்பு இல்லை என திசைதிருப்ப பல பிரச்னைகள் உண்டுதானே? விலைவாசி உயர்வு, வேலையின்மை என பல்வேறு காரணங்களால் மக்கள் காசை செலவழிக்காமல் சேமித்து வைப்பார்கள். இப்படியான சூழலில் விலைபோகாத பொருட்கள், மெல்ல விலை குறையு...

அறிவால் பகை வெல்வோம் - பாயும் பொருளாதாரம்

படம்
      பாயும் பொருளாதாரம் 7 அறிவால் பகை வெல்வோம் கையில் நிறைய ஆயுதங்களை வைத்திருப்பவர்கள், அதை எங்காவது பயன்படுத்திப் பார்க்க முயல்வார்கள். அதை தவிர்க்கமுடியது. மனித குண இயல்பே அப்படித்தான். இந்த வகையில் அமெரிக்கா, தனது பொருளாதார வளர்ச்சிக்கு பலிகடாவாக மாற்ற கனடாவை, கிரீன்லாந்தை நிர்பந்தித்து வருகிறது. பெரிய பொருளாதாரத்திற்கு அதிகளவு இயற்கை வளங்கள் தேவை. அதை அடைய பிற நாடுகளை விலைக்கு வாங்கி, நேரடியாக அல்லது மறைமுகமாக காலனியாக்கினால் மட்டுமே பெறமுடியும். பெரிய அரசு, சிறிய அரசு என இரண்டுக்குமே சேவை வரி செயல்பாடு என அனைத்திலும் வேறுபாடுகள் உண்டு. அரசு இயங்குவதில் கருத்தியல் முக்கியத்துவம் பெறுகின்றன. வலதுசாரிகள், அரசு தனிப்பட்ட வணிகம், தொழிலதிபர்கள், தொழில்கள் எதிலும் அரசு தலையிடாது பார்த்துக்கொள்கிறார்கள். மக்களை உயிரோடு பாதுகாப்பது மட்டுமே அரசின் கடமை. என்னென்ன செய்யவேண்டும் என்பதைக் கூறுவதல்ல. தொழிலதிபர்களுக்கு குறைந்தளவு வரியே அரசு விதிக்கும். இதெல்லாம் வலது கருத்தியல். இதில் மதம் சேர்ந்தால் புல்டோசர்கள் பிரதமர் கட்டித்தந்த வீட்டைக்கூட இடிக்கும். ஊழல்கள், கொலை, கொள்ளை மன்...

பெரிய வணிகம் செய்வதிலுள்ள லாபம் - பாயும் பொருளாதாரம்!

படம்
  5 பாயும் பொருளாதாரம் பெரிய தொழில் பெத்த லாபம் இந்தியாவில் சாதி இருக்கிறதோ இல்லையோ, சிறுகுறு தொழில்கள் நிறைய அழிந்துவிட்டன. வரி தீவிரவாதம் ஒருபுறம், பெருவணிகர்களின் எல்லைமீறிய வணிகம், அரசின் ஆதரவின்மை எல்லாமே முக்கிய காரணம். பெரிய வணிகம் எப்படியோ கடன் பெற்று அதை அரசே ஏற்றுக்கொள்ள பிழைத்துவிடுகிறது. பொதுவாக நிறைய பொருட்களை வாங்குபவர்களுக்கு அதன் விலை இயல்பாகவே குறைவாக வருகிறது. அவர் அதை விற்று வரி தீவிரவாதத்தை சமாளித்து தேர்தல் பத்திரத்தை வாங்கிவிட்டால் போதும். வணிகத்தை காப்பாற்றிவிடலாம். தொழில் தடுமாறுகிறதா, பாரத்தை தள்ளும்போது ஐலேசா சொல்வது போல பாரத் மாதா என அலறி அழுதால் போதும். தொழில் நன்னிலைக்கு மீண்டும் விடும். பெரிய தொழிலோ, சிறு தொழிலோ திறமையான தொழிலாளர்கள் முக்கியம். பொருட்களை நவீனமான செயல்முறையில் உற்பத்தி செய்வதில் சமரசம் செய்யக்கூடாது. பெரிய தொழில் பார்க்க பிரமாண்டமாக தெரிந்தாலும் அதில் மாற்றங்களை ஏற்படுத்துவது கடினம். நிறைய பிரிவுகள் இருப்பதால், பிறர் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்கமாட்டார்கள். செக்குமாடு போல மாதசம்பளத்திற்காக ஓடிக்கொண்டிருப்பார்கள். உழைத்தாலும் பாராட்...

பாயும் பொருளாதாரம் முடிவுகளும் விளைவுகளும்

  பாயும் பொருளாதாரம் முடிவுகளும் விளைவுகளும் மதவாத கட்சிக்கு வாக்களித்துவிட்டு சிறுபான்மையினரின் வீடு கோவில்களை புல்டோசர் இடிப்பதை சிரித்துக்கொண்டே வேடிக்கை பார்ப்பது போன்றதல்ல. ஒருவர், குறிப்பிட்ட பொருளை கடையில் வாங்கிவிட்டு அதன் மதிப்பை அதிகமாக கருதிக்கொள்வதுண்டு. சிலர் ஒருவர் வைத்துள்ள பொருளுக்கு ஆசைப்பட்டு அதிக விலை கொடுப்பதாக சொன்னாலும் சம்பந்தப்பட்டவர் அதெப்படி இதை நீ வெலைக்கு கேட்கலாம். எனக்கு பிடிச்ச பொருள். விற்கமாட்டேன் என்று கூறுவதுண்டு. சூதாட்டம் விளையாடுவதைக் கூட மனிதர்களின் முடிவு தொடர்புடையதாக சொல்லலாம். இன்று ஆன்லைன் ரம்மியை ஒன்றிய, மாநில அரசுகளே ஊக்குவிக்கின்றன. சில மாநிலங்களில் லாட்டரி குலுக்கல் நடைமுறையில் உள்ளது. இதில் எல்லாம் வெல்வது அரிதிலும் அரிதாக நடைபெறுவது. இதன் அர்த்தம் பெரும்பாலும் நடக்காது என்பதுதான். வானிலை ஆய்வு மையம், பகல் வெயில் பளிச்சென அடிக்கும் என்று அறிக்கை வெளியிடும் அன்றைக்கு அடைமழை பெய்வது போல்தான். எதையும் கணிக்க முடியாது. சந்தையில் பங்குகள் ஓகோவென உயரத்திற்கு செல்லும் என்று வணிக டிவி சேனல்கள் ஒப்பாரி வைக்கும். அந்த சமயம் பார்த்து ரூபாயின் ம...

பொருட்களின் விலையே அதன் விற்பனையை தீர்மானிக்கும் காரணி - பாயும் பொருளாதாரம்

படம்
  பாயும் பொருளாதாரம் ஆதிகாலத்தில் மனிதர்களுக்குத் தேவையாக இருந்தது உணவு, உடை, இருப்பிடம். இன்றும் கூட அதே தேவைக்காகவே பெரும்பாலான மக்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். உழைக்கிறார்கள்தான். ஆனால், அதன் பயன் அவர்களுக்கு கிடைப்பதில்லை. முதலாளித்துவ தத்துவத்தில், அரசு பெரும் சக்தியாக இருந்து மக்களிடமிருந்து பணத்தை வரியாக பிடு்ங்கி பெரு நிறுவனங்களுக்கு கடனாக வழங்கிவிடுகிறது. வேலைவாய்ப்பு, வளர்ச்சி என ஏதேதோ பிதற்றல்கள்... மனிதர்களின் அடிப்படைத் தேவைகள் இன்றுவரை அப்படியே உள்ளன. கூடுதலாக, அவை பின்வரும் தலைமுறையினருக்காகவும் சேர்த்துவைக்கத் தொடங்கியுள்ளனர். நீர், காடு, வன விலங்குகள், பாறைகள்,மரம் செடி கொடிகள், மணல், எண்ணெய், தாது, எரிவாயு என அனைத்துமே தீர்ந்துவிடக்கூடிய வளங்கள். அவற்றை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். நீரை மழை பெய்யும்போது குட்டைகள், ஏரிகளை தூர்வாரி வைத்து சேமித்தால் நிலத்தடி நீர் உயரும். இதன்விளைவாக குடிநீர் பற்றாக்குறை தீரும். அப்படி இல்லையெனில், பற்றாக்குறை உருவாகும். பட்டினி, பஞ்சம் எல்லாமே இப்படி உருவானவைதான். நடப்பு காலத்தில் வணிகர்கள் செயற்கையாக பொருட்கள் தட்டுப்பாட்டை உருவா...