வட்டி விகிதம் ஏற்படுத்தும் சாதக, பாதகங்கள்! - பாயும் பொருளாதாரம்

 

 

 

 


பாயும் பொருளாதாரம்
8

வட்டி விகிதம் ஏற்படுத்தும் சாதக, பாதகங்கள்!


உள்நாட்டு உற்பத்தி குறைவைப் பற்றி பேசினோம் அல்லவா? கும்பமேளாவுக்கு மக்களை ரயிலில் கூட்டிவந்து ஆற்றில் குளிக்கவைப்பதை விட அரசுக்கு நிறைய கடமைகள் பொறுப்புகள் உள்ளன. மும்பையில் முஸ்லீம் நடிகரைக் கத்தியால் குத்திவிட்டார்கள். அவர் முஸ்லீம் என்பதால் அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என மதவாத கட்சி வாதிடக்கூடும். பொருட்களின் விலை ஆண்டுதோறும் ஏறிக்கொண்டேதான் இருக்கும். அதை பணவீக்கம் எனலாம். மக்களின் வருமானம் உயர்ந்தால் பணவீக்கம் பற்றி பல்வேறு வர்க்க மக்களும் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், வருமானம் குறைந்து வேலைநேரம் அதிகரித்து பொருட்களின் விலையும் விண்ணுக்கு ஏறினால் மக்கள் வெளிப்படையாக பேசுவார்கள். கைக்கூலி ஊடகங்கள் முணுமுணுப்பாக பேசிவிட்டு, கோவில் குடமுழுக்கு, எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சு, பற்பசையில் உப்பு இல்லை என திசைதிருப்ப பல பிரச்னைகள் உண்டுதானே?

விலைவாசி உயர்வு, வேலையின்மை என பல்வேறு காரணங்களால் மக்கள் காசை செலவழிக்காமல் சேமித்து வைப்பார்கள். இப்படியான சூழலில் விலைபோகாத பொருட்கள், மெல்ல விலை குறையும். விலைவாசிக்கு ஏற்றபடி, சம்பளம் ஏறாதபோது மக்கள் வறுமையில் வீழ்வார்கள். வேலையின்மையை குறைவாக காட்ட வெறும் அளவீடுகளை நம்பாமல் உண்மையாக உழைத்த அரசுகளும் இந்தியாவில் இருந்தன. உலகளவிலான பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், ஆராய்ச்சி அமைப்புகளும் ஆய்வில் ஈடுபட்டு கல்வி, பசி, பட்டினி, பெண்களின் முன்னேற்றம், உள்நாட்டு உற்பத்தி பற்றியெல்லாம் ஆய்வறிக்கை வெளியிடுகிறார்கள். இவை நாட்டிற்கு முதலீடு கிடைக்க உதவுகிறது.

அரசுக்கு வருமானம் என்பது தரகு வேலை பார்த்து கொடுப்பதால் வராது. வரிதான் முக்கியமான வருவாய் ஆதாரம். நேர்முக வரி, மறைமுக வரி என இருவகையில் வரி உருவாக்கப்படுகின்றன. ஒருவர் வண்டி வாங்கினால் அதிலேயே அவர் சாலைவரி,விற்பனை வரி, கல்விக்கான வரி என பலதையும் இணைத்துத்தான் கட்டுகிறார். அதிகபட்ச விலை என்பதே வரி உள்ளடங்கியதுதான். சில பொருட்களுக்கு அரசு அதிக வரி விதித்து அதன் பயன்பாட்டைக் குறைக்க முயலும். செயற்கை சர்க்கரை கொண்ட பொருட்கள், புகையிலை ஆகியவற்றை உதாரணமாக கூறலாம். தொழில் முதலீடுகளை செய்யும் நிறுவனங்களுக்கு,  குறிப்பிட்ட ஆண்டுகள் மட்டும் வரிச்சலுகை, சுங்கவரி ரத்து ஆகிய சலுகைகள் இருக்கும். அந்த நிறுவனங்கள் மூலம் மக்களுக்கு வேலைவாய்ப்பு, வருமானம் ஆகியவை கிடைப்பதே முக்கிய காரணம். அதிக வருவாய் ஈட்டும் தொழிலதிபர்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது. குறைவாக சம்பாதித்தால் குறைந்த வரி. மேற்கு நாடுகள் அதிக வரி வாங்கினாலும் மக்களை பிச்சைக்காரர்கள் போல நடத்துவதில்லை. நலத்திட்டங்கள் வழியாக மக்களுக்கு பணத்தை திரும்ப வழங்குகிறார்கள்.

இந்திய அரசு தனது மதவாத கருத்தியலை பரப்ப, எழுத, ரீல்ஸ் போட  இளைஞர்களை்த் தேடி வருகிறது. அவர்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் இருந்து காசு கொடுக்கிறது.  மக்களுக்கு சென்று சேர்வது அரசின் செயல்பாடுகள்தான். வெற்று பேச்சும் மட்டுமே வாழ்க்கை உதவாது. மதவாத செயல்களுக்கு உறுதுணையாக இருந்து ஆதரிக்கும் இணைய வல்லுநர்களுக்கு மாதம் குறிப்பிட்ட தொகை அளிப்பதாக சில மதவாத கட்சியின் மாநில ஆட்சித்தலைவர்கள் கூறியுள்ளனர். அரசு செலவிடவேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

பொதுவாக அரசு ஏழை, விளிம்புநிலை மக்களுக்கு உதவிடும் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு நிதியுதவியை வழங்கும். குறிப்பாக வேலையின்மை, மாற்றுத்திறனாளிகள், முதுமை அடைந்தவர்கள் என குறிப்பிடலாம். இதற்கடுத்து, கல்வி, சுகாதாரம், கொள்கைகள் சார்ந்து நிதியுதவியை வழங்குகிறது. சாலை, ரயில், வான்வழிப்போக்குவரத்திற்கான அடிப்படைகளை உருவாக்குவதற்கு பெருமளவு நிதி தேவை. காற்றாலைகள், சோலார் பேனல்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவது, மின்வாகனங்களின் பரவலை ஊக்கப்படுத்துவது ஆகியவற்றை அரசு செய்கிறது.

கையில் காசு உள்ளவனோ இல்லையோ கொடுக்கும் காசிற்கு சிறந்த சேவையை வழங்குவது, தனியார் நிறுவனங்கள் வழங்கும் சேவையை ஒழுங்குமுறைப்படுத்துவது அரசின் கடமை. இதில் பின்வாங்குவது, கண்டுகொள்ளாமல் இருப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. உற்பத்தித் திறனை அளிக்க அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி நடைமுறைப்படுத்துகிறது.

ஒரு நாட்டின் அரசு, வரி மூலம் வருமானம் பெறுகிறது. அதேசமயம் ஏராளமான கோடி நிதியை அயல்நாட்டு வங்கி, நிறுவனங்களிடமிருந்து பெறுகிறது. இப்படி பெற்ற நிதியை வட்டியுடன் சேர்த்து அடைக்க வேண்டும். கடனைப் பெறுவதற்கான தகுதியாகவே ஏராளமான சீர்திருத்தங்களை ஏற்று ஒப்பந்தம் செய்து கையெழுத்திடும் அவசியம் உண்டு.

செலவிடுவது, கரன்சியை அச்சிடுவது, கடன்பெறுவது ஆகியவற்றில் அரசு சமநிலை பேணவேண்டும். அவ்வாறு இல்லாதபோது நாட்டின் பணம், செல்லாக்காசாகிவிடும். முன்பு இந்திய ஆட்சித்தலைவர் பணமதிப்பு நீக்கம் செய்தது போல, இப்போதும் டிவி சேனலில் தோன்றினால், இரண்டாயிரம் ரூபாய் நோட்டு செல்லாதோ என்ற அச்சம் மக்களுக்கு எப்போதும் உள்ளது. நாட்டிலுள்ள தங்கத்தின் இருப்பை கணக்கிட்டு கரன்சி அச்சிடப்படுகிறது.

அரசும் மத்திய வங்கியும் சேர்ந்து திட்டமிட்டு வட்டிவிகிதத்தை தீர்மானிக்கின்றன. வட்டிவிகிதம் அதிகமானால் கடன் வாங்குவது கடினமாகும். குறைந்தால், எளிதாக கடன் பெற்றுவிடலாம். மத்திய வங்கி, நாட்டிலுள்ள தேசிய தனியார் வங்கிகளுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை வழங்குகிறது. வங்கிகளின் சேவையில் அதிருப்தி ஏற்பட்டால், மத்திய வங்கி அதை தீர்த்துவைக்கும் சேவைகளை வழங்குகிறது.

கொள்கை, நடைமுறை என இரண்டுக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது. வட்டிவிகிதம் ஏற்றுவது, உயர்த்துவது பற்றி முறையாக ஆய்வு நடத்தி அதன் அடிப்படையில் அதை தீர்மானிப்பது நல்லது. இல்லையென்றால், அரசு எதிர்பார்க்கும் மாற்றங்கள் மக்களுக்கு அணுவளவும் பயன் தராது.

பொருளாதார மந்த நிலை, பேரிடர் என்பது பங்குச்சந்தை, வேளாண்மை விலை வீழ்ச்சி, வேலையின்மை காரணமாக ஏற்பட்டுள்ளன. இதற்கு உதாரணமாக 1929ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட பங்குச்சந்தை வீழ்ச்சியை அடையாளம் காட்டலாம். 1930ஆம் ஆண்டு, வறட்சி காரணமாக பயிர்கள் விளைச்சல் சோபிக்கவில்லை. இதனால் விவசாயிகள் ஏழ்மையில் வீழ்ந்தனர். மக்களிடம் உணவு உண்ணவே காசில்லை. இந்த நிலையில் கார்கள் எப்படி விற்கும்? கார் நிறுவன முதலாளி, பணியாட்களை தடாலடியாக நீக்கினார். 1931ஆம் ஆண்டு, நிறைய மக்கள் உணவின்றி, வேலையின்றி தெருக்களில் திரியத் தொடங்கினர். 1932ஆம் ஆண்டு, அமெரிக்காவின் மோசமான பொருளாதார நிலை அதைச் சார்ந்திருந்த பிறரையும் பாதிக்கத் தொடங்கியது.

பொருளாதார மந்தநில காலத்தில் அரசு நிதியை செலவிட்டு திட்டங்களை செய்தால் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சம்பளமாக கிடைக்கும் அந்த பணத்தை மக்கள் செலவிடுவார்கள். வணிகம் வளரும். நிறுவனர், புதிய பணியாளர்களை வேலைக்கு எடுப்பார். இந்த விளக்கத்தை பொருளாதார வல்லுநர் ஜான் மேனார்ட் கீனெஸ் கூறினார். இதன் செயல்பாட்டு வடிவத்தை அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட், கட்டுமானத் திட்டத்தின் மூலம் உருவாக்கினார். கூடுதலாக கரன்சியை அதிகம் அச்சிட்டார். வட்டிவிகிதத்தைக் குறைத்தார். வரியை ஏற்றினார். இத்தனைக்கும் பிறகுதான் அமெரிக்க பொருளாதாரம் மேலே ஏறியது.
எரிபொருட்களுக்கு அயல்நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளைச் சார்ந்துள்ளன. அதாவது அரபு நாடுகள். அவை, அமெரிக்காவிற்கு முக்கியமாக கச்சா எண்ணெய்யை பெருமளவு வழங்குகிறது. 1973ஆம் ஆண்டு, அரபு நாடுகள் இஸ்ரேலை எதிர்க்கும் நோக்கத்தில் அமெரிக்காவிற்கு கச்சா எண்ணெய்யை வழங்க மறுத்தது. இதனால் அமெரிக்காவில் எரிபொருளின் விலை அதிகரித்தது. அதையொட்டி பொருட்களின் விலையும் கூடியது.

சந்தை சூழலைப் பொறுத்து வங்கிகளின் வட்டிவிகிதம் மாற்றப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும். வட்டிவிகிதம் உயர்வு, குறைவு என இரண்டுக்குமே சாதக, பாதக அம்சங்கள் உண்டு. வங்கிகளின் வட்டி இருபது சதவீதம் அதிகரித்தால் எப்படி கூவி அழைத்தாலும் கடனை யாரும் வாங்க மாட்டார்கள். மக்கள் செலவிடுவதைக் குறைத்தால் பொருட்களின் விலை குறையும். ஆனால், வேலையின்மை அதிகரிக்கும். அதை எதிர்த்து மக்கள் போராடுவர்.



 

 











 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்