சீனாவின் பசுமை அரசியல் செயல்பாடுகள் செல்லும் திசை!
சீனாவின் பசுமை அரசியல் செயல்பாடுகள் செல்லும் திசை!
green politics in china
joy y zhang,michal barr,
pluto press
சீனாவின் சோலார் பேனல்கள், பேட்டரி உலகின் மூலை முடுக்கெங்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு சீனா, கொடுத்த சூழல் மாசுபாட்டின் விலை என்ன என்பதைப் பற்றி க்ரீன் பாலிட்டிக்ஸ் இன் சீனா நூல் பேசுகிறது. முக்கியமாக பொதுவாக எழுதப்படும் ஆங்கில நூல்கள் போல, இந்த நூல் சீனாவின் கம்யூனிச கருத்தியல் முரண்பாடுகளை விமர்சனத்திற்குள்ளாக்கவில்லை. அரசின் செயல்பாடுகள், அந்தளவு இயற்கையை பாதுகாக்கும் விதமாக இல்லை என்பதை மட்டுமே கூறுகிறது.
நூலில், சீனாவைச் சேர்ந்த சூழலியல் எழுத்தாளர்களின் நூல்கள், சூழலியல் விவாதங்களுக்கு தேவையான வகையில் பல்வேறு தகவல்களை எடுத்துப் பேச பயன்பட்டுள்ளன. இதில், அரசுக்கு ஆதரவான வகையில் எழுதப்பட்டுள்ள தேசியவாத நூல்களும் உள்ளடங்குகிறது. இணையத்திலுள்ள நாட்டின் மீது சூழலின் மீது அக்கறை கொண்டவர்கள், சீனமொழி நூல்களின் கட்டுரைகளை, கருத்துகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் சமூக வலைத்தளங்கள் வழியாக வெளியிடுவதையும் நூலின் எழுத்தாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
தன்னார்வ சூழல் அமைப்புகள் எப்படி செயல்படுகின்றன, அவற்றின் தாக்கம் என்ன, அரசு சூழல் அமைப்புகளின் செயல்பாட்டை எப்படி பார்க்கிறது என்ற பார்வையை அறிந்துகொள்ள நூல் உதவுகிறது. அதேசமயம் இணையத்தில் தணிக்கை முறை உள்ளதாக கூறப்படும் சீனாவில், காற்று மாசுபாடு பற்றிய மக்களின் கருத்துகள் அரசுக்கு எதிராக மாறியதைக் குறிப்பிடும் சம்பவம் முக்கியமானது. அரசு சாராத தன்னார்வ அமைப்புகள், அரசு அங்கீகரித்த தன்னார்வ அமைப்புகள் என இரண்டுக்குமான வேறுபாடு, கிடைக்கும் ஆதரவு, நிதி என பலவற்றையும் விளக்கியுள்ளனர். அடிப்படையாக தன்னார்வ சூழல் அமைப்பு செயல்பட ஒரே நிபந்தனைதான். செயலில் கவனம் வைக்கவேண்டும். அரசின் கருத்தியலில் அல்ல என்பதே அது.
சீனாவிலுள்ள அமெரிக்க தூதரகம், காற்று மாசுபாடு தனது அமைப்புகளைப் பயன்படுத்தி சோதனை ஒன்றை செய்து முடிவுகளை வெளியிடுகிறது. இதற்கும், அரசின் தகவல்களுக்கும் வேறுபாடுகள் வர, மக்கள் அமெரிக்க தூதரகத்தின் பக்கம் நின்றனர். வேறு வழியில்லாத சீனா, விமர்சனங்களை சமாளிக்கும் விதமாக காற்று மாசுபாட்டை அளவிடும் உள்நாட்டு திட்டத்தை வெளியிடுகிறது. அதிலும் கூட தேசபக்தி வெளியானதே ஒழிய உண்மையான தகவல்கள் கிடைக்கவில்லை.
பறவைகளை கவனித்தலுக்கு மக்களை பழக்கப்படுத்தி சூழல் சார்ந்த அக்கறையை ஏற்படுத்தி அமைப்புகள் பற்றிய செய்திகள் மகிழ்ச்சியைத் தருகிறது. சீனாவில், பொருளாதார வளர்ச்சி பெரிதளவு மேம்பட்டுவிட்டது. இனியேனும், சூழல் பாதிப்புகளுக்கு கவனம் கொடுத்து அதை மேம்படுத்தினால் மாசுபாடுகள் கட்டுக்குள் இருக்கும். அந்த வகையில், ஒரு காலத்தில் பெய்ஜிங்கில் காற்று மாசுபாடு பற்றிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டு விமர்சனங்கள் குவிந்தன. இன்று, சீனா காற்று மாசுபாட்டை பெருமளவு முயற்சி எடுத்து சாதித்தும் காட்டியுள்ளது உண்மையிலேயே பாராட்ட வேண்டியதுதான்.
நூலின் இறுதிப்பகுதியில் சூழல் மாசுபாட்டில் உணவுப்பொருட்களில் சேரும் தோல் கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் ஆகியவற்றைப் பற்றி சீனத்தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகும் நிகழ்ச்சியை உதாரணம் காட்டி விளக்கியுள்ளனர். இந்த சமையல் நிகழ்ச்சியும், இதுதொடர்பாக வரும் மாசுபாடு விஷயமுமே அதிர்ச்சியைத் தருகிறது.
கோமாளிமேடை குழு
கருத்துகள்
கருத்துரையிடுக