கலவரச்சூழலில் தற்காப்பை உறுதிசெய்துகொள்வோம்!
பாதுகாப்பு மனநிலை தீவிரவாத தாக்குதல் நடந்தாலும் அதை தடுக்க சில பலவீனமான அரசுகளால் முடியாது. பதிலுக்கு அரசை கேள்வி கேட்கும் சமூக செயல்பாட்டாளர்களை பிடித்து வழக்கு போட்டு சிறையில் அடைப்பார்கள். அவர்களின் விமர்சனங்களில் உண்மை இருப்பதுதான் காரணம். இது பாதுகாப்பான மனநிலை அல்ல. பேரிடர் காலங்களில் ஆயுதங்களை, வெடிமருந்துகளை வாங்கி குவித்துவிட்டால் உயிர் பிழைத்துவிடலாம் என நினைக்காதீர்கள். அது பிழை. மூளையைப் பயன்படுத்தி யோசிக்கவேண்டும். எப்படி அந்த சூழ்நிலையில் எதிர்வினையாற்றுவது என திட்டங்களை வகுக்க வேண்டும். பாதுகாப்பு மனநிலை கருத்தை அமெரிக்க விமானப்படையைச் சேர்ந்த ஜான் போய்டு உருவாக்கினார். வயிறு சொல்லும் அறிவுரை சண்டை போடுவதா, ஓடிவிடுவதா என்பதை உங்கள் புத்தி கூறும். தேவை கூர்மையான திறன் கொண்ட காது. சில நேரங்களில் நாம் அன்புக்குரியவர்களை பாதுகாக்கும் நெருக்கடியில் சிக்குவோம். ஒருவரோடு சண்டை போட்டுக்கொண்டே இன்னொருவரை பாதுகாப்பது எளிதான செயல் அல்ல. தாக்குவது, தப்பி ஓடுவது என இரண்டில் எதையும் நீங்கள் செய்யலாம். விபத்து, தாக்குதல் காலங்களில் மக்கள் பெரும்பாலும் திகைத்து என்ன செய்வதென தெரிய...