லவ் இன்ஃபினிட்டி: எதிர்த்துப் பேசினா தப்பா?
freepik |
லவ் இன்ஃபினிட்டி
குமார் சண்முகம்
தொகுப்பு: மீகா, வில்லி ஜான்சன்
எனக்கு தோல்வி பயம்ங்கிறது புதுசு கிடையாது. ஆனால் நடக்கிற சமயம் எனக்கு பயங்கிற டென்ஷன் ஆகும்.
விரும்பியது கிடைக்கும்போது
கரும்பாக இனிக்கின்ற மனமே
நினைத்தது நடக்காமல்
போனால் நெஞ்சம் கொதிப்பது
ஏன்? சொல் மனமே
உனக்கு Phone பண்ணலாம்னு நினைத்தேன். நீதான் ஆத்தா வீட்டில் இருக்கிறாய். எப்படி பேச முடியும்னு நினைத்து பண்ணலை. ஏன் அப்பாகிட்ட சண்டை போடற. சண்டை போட்டா. உன் பிரச்னை தீர்ந்திடுமா. (What is the problem? I don't Know) என்னைப் பாரு. எங்கப்பா என்னை கண்டபடி திட்டினாலும் நான் பேசாம அமைதியா இருந்துருவேன். ஏன்னா அவங்க கிட்டதான் பணம் வாங்கணும். நம்ம அப்பாதானே திட்டறாங்க. இதுக்குப் போயி எதுக்கு உன் மனசை கஷ்டப்படுத்திக்கிறே? நான் தனியா இருக்கும்போது நினைப்பேன்.
என்னடா நாம் இந்த 19 வது வயசுல இந்தளவு கஷ்டத்தை அனுபவிக்கிறோமேன்னு. ஆனால் எந்தவொரு கசப்பான நிகழ்வுகளுக்கு பின்னாடிதான் இனிப்பான நிகழ்ச்சிகள் நடக்கும்.
எக்சாம்பிளுக்கு என்னையே எடுத்துக்க. என்னைப் பாராட்டுகிற வாயாலேயே திட்டும் வாங்குவேன். ஆசிர்வாதமும் வாங்கியிருக்கேன். இங்க இருக்கிற உறவுகளில் எதுவும் உண்மை இல்ல. எனவே இருக்கிறவரை முடிஞ்சவரை எல்லார்கிட்டேயும் Soft ஆகவே Behave பண்ணு.
நான் பையன் சண்டை போடலாம். நீ எதுக்கு சண்டை போடற. நீ தனியாக இருந்து என்ன பண்ணப் போற. என்ன இவன் சராசரி மாதிரி பேசறான்னு நினைக்காத. பேசறதுக்கும், எழுதறக்கும் பெண் உரிமை நல்லாருக்கும். Practical ஆ யோசிச்சுப் பாரு.
சண்டை போட்டா உன் பிரச்னை தீர்ந்திடுமா? எதுவுமே மென்மையாக கையாளணும் புரியுதா? நானே வீட்ல சண்டை போட்டுக்கிட்டுத்தான் இருக்கேன். அப்பா திட்டுவாரு. கொஞ்ச நேரத்துல கூல் ஆகி Close ஆயிடுவாரு.
எல்லாரும் ஒரேமாதிரி இருப்பாங்களா? நாமதான் கொஞ்சம் Adjust பண்ணிப் போகணும். வீட்ல எல்ஐசிக்கு என் பேரைத்தான் நாமினியாக அப்பா போட்டிருக்காரு. ஆனா அவரோட நான் நேரா பேசவே மாட்டேன். கரெக்டா Monday காலைல காசு எவ்வளவு வேணும்னு கேப்பாங்க. அவ்வளவுதான். நீ அதிகமாக பேசாத, எதிர்த்தும் பேசாத . Ok வா.
(காதலும் நட்பும் தொடரும்)
முதல் கடிதம் எழுதின மைதிலி லேசுபட்ட ஆளில்லை. காரியம்னா தன்னோட கேங்கை வெச்சா சாதிப்பா. மோகன், தனக்கு பிரச்னைன்னா ஊரே வந்து முதுகைத் தட்டி ஆறுதல் சொல்லணும், சொல்ல வைப்பேன்னு நம்புற ஆளு. கவிதா, ப்ரெண்டுனா காலை ஃபிரேக்பாஸ்ட் பில் கட்டணும், மாசத்துல வர்ற ஏதாவது தினம்னா கூட க்ரீட்டிங் கார்டு கொடுக்கணும்னு எதிர்பார்க்குற ஆளு. ரூபா, கேரக்டர் உங்களுக்கே புரிஞ்சிருக்கும். பாசத்தை கொட்டுவா. கோபத்தையும் அதேமாதிரிதான் காட்டுவா.
இந்தக்கதையில வர்றவங்க எல்லோருமே இன்னைக்கு திசைக்கு ஒண்ணா பிரிஞ்சுட்டாங்க. ஆனா மோகனுக்கு தான் தோத்துப்போன வலி மறையவே இல்லை. அதை அவன் வெவ்வேறு விதமாக ஃப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்லுவான். ஆனா உள்ளுக்குள்ள நமக்கு மைதிலி கிடைக்கலயேங்கற ஆற்றாமை அதிகம்.