மலம் பச்சையாக இருக்கிறதா? கவனம் தேவை
லிவ் சயின்ஸ் |
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் .ரோனி
மலம் பச்சையாக இருந்தால் ஆபத்தா?
மலத்தின் நிறம் என்பது பொதுவாக நீங்கள் சாப்பிடும் உணவுப்பொருட்களைப் பொறுத்தது. சில நோய்களைக் கண்டறிய மலம் உதவுகிறது என்பது மறுக்க முடியாது. ஆனால் நீங்கள் மணத்தக்காளி, தண்டுக்கோலி ப்ரோக்கோலி என வெளுத்துவிட்டு பாத்ரூமில் காந்தி போல ஆராய்ச்சி செய்தாலும் ரிசல்ட் க்ரீன்தான்.
கல்லீரலில் சேகரிக்கப்பட்டுள்ள பைல் எனும் கொழுப்பு கரைக்கும் நீர்மத்தின் நிறம், மஞ்சள் கலந்த பச்சை. குடல்களில் பரவிப் பாயும் பைல் நீர்மம், என்ஸைம் மூலம் பல்வேறு மாற்றங்களைக் காண்கிறது. இதன் விளைவாகவும் மலம் பச்சையாகத் தோன்றலாம்.
அதேசமயம் புற்றுநோய் சிகிச்சையில் மலம் பச்சை நிறத்தில் வருவது நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதைக் குறிக்கிறது. நீர்மமாக பச்சை நிறத்தில் வயிற்றுப்போக்கு போவது ஆபத்தின் அறிகுறி.
பாக்டீரியா சால்மோநெல்லா, ஒட்டுண்ணி கியார்டா ஆகியவை நம்மை தாக்கினாலும் மலம் பச்சையாகச்செல்லும். எனவே கவனமாக தார்பாய் ஹோட்டல்களை தவிர்த்துவிட்டு சோறு முக்கியம் பாஸ் வெ.நீலகண்டனின் பரிந்துரைகளை ஏற்று ஆரோக்கியம் காப்போம்.
நன்றி: லிவ் சயின்ஸ்.