விண்வெளியில் ஒலியை அறிய முடியுமா?
thought.co |
விண்வெளியில் ஒலியை அறிய முடியுமா?
சுருக்கமாக சொன்னால் முடியாது. டிவி, சினிமாக்களில் ஒலி அமைப்போடு பார்த்து பழகியதால் விண்வெளியில் இளையராஜாவின் பாடல்களைக் கேட்கலாம், சிவந்து போச்சு நெஞ்சு பிஜிஎம் கேட்கலாம் என நிறையப் பேர் நினைக்கலாம். ஆனால் இயற்பியல் இதனை சாத்தியம் இல்லை என்றே கூறுகிறது.
விண்வெளியின் கதிர்வீச்சுகளை இயற்பியல் உபகரணங்கள் மூலம் உள்வாங்கி அதனை ஒலியாக்கும் முயற்சிகள் வானியலில் நடைபெற்று வருகின்றன. இவை சரியானவையா? பலனளிக்குமா? என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது.
ஒலி பரவ காற்று எனும் ஊடகம் அவசியம். காற்று மூலக்கூறுகளால் நாம் பேசுவது பிறருக்கு கேட்கிறது. அதனை மனிதரின் மூளை புரிந்துகொள்கிறது. காற்று மூலக்கூறுகள் அழுத்தப்படும் அளவு அதிகரித்தால் நம் காதில் விசில் சத்தம் அல்லது பொறி கலங்கி பூமி அதிரும் ஒலி கேட்கக்கூடும்.
நன்றி: Thought.co