சியர்ஸ் ஃபோக்ஸ் - இன்ஸ்டாகிராமில் காதல் தம்பதிகள்
Hiking.org |
இன்ஸ்டாகிராமைக் கலக்கும் ஜோடிகள் இவர்கள். இதில் என்ன புதுசு. அனைவரும் உலகை தம்பதிகளாக சுற்றிவந்து நம்மை பிரமிக்க வைக்கிறார்கள் என்பதுதான் செம ரவுசு.
ரிஷப் - நிராலி -gypsycouple
இழுத்தணைச்சு ஒரு உம்மா தரூ என்ற போஸில் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிடும் ஜோடி. உலகமெங்கும் 42.7 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். போகும் இடமெங்கும் தெறிக்கும் ரொமான்ஸ் படங்களை ஷூட் செய்து பதிவிடுவதுதான் வெற்றிக்கு காரணம்.
பிடித்த ஸ்பாட்கள்: லேக் பேலஸ், உதய்பூர்.
கிரண் - சச்சின் wroom _with kiran _sachin
தனித்தனி பைக்கில் வ்வ்ரூம் என பாய்வது இந்த மும்பைத் தம்பதிக்கு பிடித்தமான ஒன்று. ஹோண்டா சிபிஆர் 250 ஆரில் ஒருலட்சத்து 75 கி.மீ பயணித்து சாதனை செய்திருக்கிறது இந்த ஜோடி.
எனக்கு பில்லியனில் உட்கார்ந்து சென்று அலுத்துவிட்டது எனும் கிரண், முன்னர் ஐடியில் வேலை பார்த்தவர். சச்சின், ரேசிங் மனிதர். கிரண், பாரம்பரிய பஞ்சாபிக் குடும்பம் என்றாலும் பைக் ஓட்டுவதற்கு அஞ்சவில்லை. இரண்டே மாதங்கள்தான் ட்ரெய்னிங் எடுத்தேன். அப்புறம், நானே துணிச்சலாக வண்டி ஓட்டத் தொடங்கிவிட்டேன் என்கிறார் கிரண்.
பருவநிலை, சீசன் எனப் பார்க்காமல் ஊர்சுற்றி வீடியோ புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதியும் சூப்பர் பயணவெறி காதல் ஜோடி இது.
சவி - வித் bruisepassports
சவிக்கு கஃபே பிடிக்கும், வித்துக்கு மியூசியம் பிடிக்கும். ஆனால் இருவரின் காதல் புகைப்படங்களை நம் அனைவருக்கும் பிடிக்கும். இங்கிலாந்தில் கிடைத்த வங்கி கணக்குகளை நிறைக்கும் வேலையை 2015 இல் கைவிட்டுவிட்டு ஊர் சுற்ற கிளம்பிவிட்டது இந்த ஜோடி.
91 நாடுகளுக்கும் மேலாக சுற்றி வந்துவிட்டது சவி - வித் ஜோடி. நாங்கள் எங்களை புகைப்படம் எடுக்கும்போது காதல் தருணத்தை கொல்வது ஆகாது. ஏனெனில் அந்த கணத்திலும் அடுத்து புகைப்படத்தை பார்க்கும் ஒவ்வொரு கணமும் அந்த காதலை மனதில் உணர்வோமே.
எங்களுக்கு வீடு என்று சொல்வது அப்போது பயணம் செய்யும் நாட்டின் இடத்தைத்தான். எனக்கு இந்தோனேஷியாவின் பாலி பிடிதித்திருந்தது. எங்கள் பெற்றோர்களைப் பார்க்க டெல்லிக்குச் செல்வோம். அதுதவிர இடையிடையே நிறைய பயணங்கள் போவோம்.
எங்களது திருமணம் என்பது பொறுப்புகளால் எழுந்தது அல்ல. இரு ஆன்மாக்களுக்கான இணைப்பு எனப் புரிந்துகொள்ளுங்கள். எங்கள் இருவரும் தனித்தனியே பொருளாதார பலத்தில் நிற்கிறோம். ஒருவரின் கனவுக்கு ஒருவர் உதவுகிறோம். நாங்கள் ஜாலியாக வாழுகிறோம் அவ்வளவுதான் ப்ரோ சொல்லுவேன் என சிரிக்கிறார் சவி.
நேகா - அரிந்தம் - breathtaking. postcards
குர்கானைச் சேர்ந்த நேகா - அரிந்தம் ஜோடியை இணைத்தது ஜாலி டூர்கள்தான். இதுவரை பதினான்கு நாடுகளை சுற்றிவந்து இன்ஸ்டாகிராமை நிறைத்திருக்கிறார்கள் புகைப்படங்களால். துருக்கியில் ஹாட் பலூனில் பயணித்தது மறக்க முடியாத பயணம். நியூசிலாந்திலுள்ள பாலிநேசியன் ஸ்பா, காதல் ஸ்பாட்டாக அரிந்தம் கூறுகிறார்.
தாரா - கௌதம் cluelesscompass
பதினேழு நாடுகளைச் சுற்றி வந்த சூப்பர் தம்பதிகளுக்கு பூர்விகம் பெங்களூரு. ஸ்லோவேனியாவில் பசுமையான ஆப்பிள் மரங்களிடையே நடந்து சென்றது எங்கள் வாழ்வில் மறக்கமுடியாத தருணம் என்கிறார் தாரா. க்ரீன் ஆப்பிள்களை சாப்பிட்டது சூப்பர் சப்புக்கொட்டியபடி பேசுகிறது இந்த ஜோடி. நாங்களும் அப்படித்தான் மேடம்.
நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - சோனாலி, ரெஹ்னா