உணவு உற்பத்தி சரியக் காரணம் என்ன?
Sadhguru |
உணவு உற்பத்தி குறைகிறதா?
பல்லுயிர்த்தன்மை கொண்ட காடுகள் அழிவால், உணவு உற்பத்தி சரிவைச் சந்தித்துள்ளதாக ஐ.நா அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது.
உலகிலுள்ள பல்லுயிர்த்தன்மையை பாதுகாக்கும் காடுகள் அழிந்துவருவதால், ஆண்டுதோறும் உற்பத்தியாகும் உணவின் அளவு குறைந்து வருவதாக ஐ.நா அறிக்கை சுட்டிக்காட்டி எச்சரித்துள்ளது. தற்போது, பயிர்கள் பயிரிடும் பரப்பு 20 சதவீதம் அழிவைச் சந்தித்துள்ளது. இருபதே ஆண்டுகளில் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது என்று அறிக்கை அழுத்தமாக கூறியுள்ளதை நாம் கவனிக்கவேண்டும்.
காடுகள், பவளப்பாறைகள், சதுப்புநிலக்காடுகள், புல்வெளி நிலங்கள் ஆகியவை அழிவையும் ஐ.நா அறிக்கை கவனத்தில் கொண்டுள்ளது. உணவுச்சங்கிலியில் எவையும் விதிவிலக்கானவை அல்ல. பறவைகள் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை உண்கின்றன. சதுப்புநிலக் காடுகள் நீரினை சுத்திகரிக்கின்றன. உலகிலுள்ள 91 நாடுகள் இணைந்து செய்த ஆராய்ச்சி அறிக்கைகள் மூலம் இயற்கைச்சூழலின் பாதிப்புகள் மக்களுக்கு தெரிய வந்துள்ளன.
அழிந்த பரப்பில் 63 சதவீத தாவரங்கள், 11 சதவீத பறவைகள், 5% சதவீத மீன்கள் மற்றும் பூஞ்சைகள் ஆகியவை உள்ளடங்கும். இதில் பதினேழு சதவீத வௌவால்களும் அழியும் அபாயத்தில் உள்ளன.
”ஒருமுறை தாவரங்கள், உயிரினங்கள் அழிக்கப்பட்டுவிட்டால் திரும்ப அவற்றை மீட்பது மிகவும் கடினமான செயற்பாடாக மாறிவிடும். எதிர்காலத்தில் உணவு உற்பத்தி என்பதே மெல்ல அழிந்துவிடும். இப்போதே உலகின் பல பகுதிகளில் உணவு உற்பத்தி சரிவைச் சந்தித்து வருகிறது” என்றார் ஐ.நாவின் உணவு மற்றும் விவசாயத்துறை தலைவரான கிராஸியானோ டா சில்வா.
காடு அழிப்பிற்கு விவசாயம், நகர வளர்ச்சி மற்றும் குடிநீர் தேவை ஆகியவை முக்கியக் காரணங்கள். இயற்கைக்கு நெருக்கமாக இருந்த நிலங்கள் நச்சாக வேதி உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு அதிகரிப்பும் குறிப்பிடத்தக்க காரணமாக சுட்டலாம்.
மக்கள் தொகை காரணமாக, உணவு உற்பத்தி முன்பை விட அதிகரிக்கும் தேவை உள்ளது. அதேசமயம் காடுகள், பறவைகள், பூச்சிகள் ஆகியவை அழிக்கப்படுவதால் மகரந்தச்சேர்க்கை தடைபட்டு பயிர்களின் வளர்ச்சியும் முழுமையாகாது. பல்வேறு வகை பயிர்களையும் பயிர் செய்வது கடினமாகும்.
தற்போது மூன்றில் இருபங்கு பயிர்களாக கரும்பு, சோளம், அரிசி, கோதுமை , உருளைக்கிழங்கு, சோயாபீன்ஸ், பீட்ரூட், மரவள்ளி ஆகியவை உலகம் முழுக்க விளைவிக்கப்படுகின்றன. இவை தவிர 6 ஆயிரம் தாவரங்கள், பயிர்கள் ஏன் விளைவிக்கப்படவில்லை என்பதுதான் இப்போது பிரச்னையாக எழுகிறது.
“சிறப்பு அங்காடிகளில் உள்ள உணவுப்பொருட்கள் அனைத்தும் இறக்குமதியானவை. மேலும் அவற்றில் புதிய வகைகள் கிடையாது. இதன் அர்த்தம், குறிப்பிட்ட பயிர்களே தொடர்ந்து விளைவிக்கப்படுகின்றன என்பதுதான்.” என்றார் ஐ.நா. ஆய்வறிக்கை ஒருங்கிணைப்பாளர் ஜூலி பெலங்கர்.
தகவல்: theguardian.com
வெளியீட்டு அனுசரணை: தினமலர் - பட்டம்