எரிமலையில் இறைச்சி தயாரிக்க முடியுமா?





ஃப்யூச்சரிசம்




எரிமலையில் தயாரிக்கலாம் இறைச்சி!

விலங்குகளின் இறைச்சிக்கு மாற்றான ஆர்கானிக் இறைச்சிக்கான தேடுதலில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். என்ன காரணம்? இறைச்சி தயாரிப்பில் வெளிப்படும் பசுமை இல்ல வாயுக்கள் மற்றும் இயற்கை ஆதாரங்களின் அதீத செலவு.

தற்போது ஆல்ட் மீட் எனும் புதிய ஸ்டார்ட்அப், ஆர்கானிக் பொருட்களை தயாரித்துவரும் நிறுவனம். புதிய முயற்சியாக எரிமலையில் கிடைக்கும் நுண்ணுயிரிகளின் மூலம் இறைச்சியைத் தயாரித்துள்ளது.

யெல்லோஸ்டோன் தேசியப் பூங்காவில் நுண்ணுயிரியை எரிமலையிலிருந்து எடுத்து புரதத்தை தயாரித்தோம் என்கிறார் நிறுவன சிஇஓ தாமஸ் ஜோனஸ்.


சிகாகோவைச் சேர்ந்த கம்பெனி, பதப்படுத்தல் முறையில் புரதங்களை வளர்த்து இறைச்சியை தயாரித்துள்ளது.

மிக சவாலான சூழல்களில் வளரும் நுண்ணுயிரிகளின் புரதம் நம் உலகைக் காக்க உதவும் என நாங்களே நம்பவில்லை. ஆனால் ஆராய்ச்சி மூலம் அது சாத்தியமாகியுள்ளது என்றார் ஜோனஸ். பில்கேட்ஸ், ஜெஃப் பெசோஸ், வர்ஜின் நிறுவனர் ரிச்சர்ட் ஆகியோர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.

நன்றி: ஃப்யூச்சரிசம்





பிரபலமான இடுகைகள்