மூளையில் மின்னல் வெட்டுதா?
Pexels.com |
பொதுவாக மூளை தொடர்பான ஆராய்ச்சிகளும் அதன் உண்மைத்தன்மையும் மிகச்சிக்கலான தன்மை கொண்டவை. விளக்கப்புகுந்தால் அதை கூறுபவருக்கு மட்டுமல்ல; புரிந்துகொள்ள நினைப்பவருக்கும் பூமி வலமிருந்து இடமாக சுற்றி பொறி கலங்கும்.
நாம் தெரிந்துகொள்ள வேண்டியது, நியூரான்கள் எப்படி தொடர்பு கொள்கின்றன. மின் துடிப்புகளாக செய்திகள் அனுப்பப்படுகின்றன. இதுதொடர்பான செய்திகளை அறிய முற்படுவதற்கு முக்கியக் காரணம், பார்கின்சன் மற்றும் அல்சீமர் தொடர்பான நோய்களுக்கு இவை உதவுமே என்பதுதான்.
மனித மூளையின் எடை 1.4 கி.கி
மூளையிலுள்ள நியூரான்களின் எண்ணிக்கை - 100 பில்லியன்
உடலின் இருபது சதவீத ஆற்றல் மூளையின் பயன்பாட்டிற்கு செல்கிறது. இதுவே மின்தூண்டுதலுக்கு ஆதாரம்.
ஒரு நியூரானிலிருந்து 70 மில்லிவோல்ட் மின்சாரம் உருவாகிறது.
இசிடி சிகிச்சையில் 450 வோல்ட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது.
கடல் உயிரினமான ஈல், இரண்டு மில்லி செகண்டுகளில் 860 வோல்ட் மின்சாரத்தை உருவாக்குகிறது.
நன்றி: க்வார்ட்ஸ்