பிரெக்ஸிட் பிரிவால் இங்கிலாந்துக்கு என்னாகும்?







பிரெக்ஸிட் பிரிவால் இங்கிலாந்துக்கு என்ன நடக்கும்?


பிரிட்டன், ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிவது உறுதி. இது தாமதமானாலும் நடக்கப்போகிறது. தனிநாடாக நிற்கும் வணிகம் உட்பட அனைத்தையும் இங்கிலாந்து அரசு தீர்மானிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்காக தெரசா மே பல்வேறு நாடுகளுக்குச் சென்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகிறார்.

அடுத்த பதினைந்து ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி என்பது 9 சதவீதம் குறைவாகவே இருக்கும்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து கிடைத்து வந்த பொருட்கள் அனைத்தும் இனி கிடைக்காது. இதன் அர்த்தம், இங்கிலாந்து இனி சுங்கவரி அதிகமாக கட்டவேண்டி இருக்கும். இதனால் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஐரோப்பிய யூனியனிலிருந்து 30 சதவீத உணவுப்பொருட்கள் இங்கிலாந்துக்கு வருகின்றன.

நன்றி: தி கார்டியன்.காம்