வைரஸ்களுக்கு அழிவில்லையா?




Image result for virus



வைரஸ்களுக்கு அழிவில்லையா?

வைரஸ்கள் பாக்டீரியாவையே கொன்று தின்னும் ஆக்ரோஷம் கொண்டவை. அதேசமயம் அவற்றைக் கட்டுப்படுத்தினாலும் அவற்றை முழுமையாக அழிக்க முடியவில்லை. சாகாவரம் பெற்ற வேதாளர் போல வைரஸ்கள் அழிக்க முடியாதவையா?

தாவரங்கள் மற்றும் விலங்குகளின் உடலில் வைரஸ்கள் தம்மைத் தாமே பெருக்கிக்கொள்கின்றன. இதனை மேற்சொன்ன உயிரிகள் அனுமதிக்கின்றன. வைரஸ்கள் வெனோம் பட உயிரி போல. தானே தன்னைப் பெருக்கிக்கொள்ள முடியாது. அதற்கு ஒரு ஊடகம் தேவை. அதுதான் தாவரங்கள் அல்லது மனிதர்களாக இருக்கிறது.

டிஎன்ஏ அல்லது ஆர்என்ஏ அமைப்பைக் கொண்டுள்ள வைரஸ்களுக்கு தம்மைப் பெருக்கிக்கொள்ள உயிருள்ள உயிரியின் உடல் தேவை. ஒட்டுண்ணியாக இருந்து தம் செல்களை பெருக்கிக்கொள்கின்றன என்கிறார் மருத்துவர் ஓட்டோ யாங்.

நன்றி: லிவ் சயின்ஸ்