சூப்பர் ஜீரோ ஹீரோவான கதை!
studioflicks |
ஜீரோ
ஆனந்த் எல் ராய்
மனு ஆனந்த்
அஜய் - அதுல்
தனிஷ்க் பக்ஷி
Steemit |
சூப்பர் ஜீரோவாக இருப்பவர் எப்படி பலருக்கும் இன்ஸ்பிரேஷன் மனிதராக மாறுகிறார், சூழல்கள் எப்படி அவரை மாற்றுகின்றன என்பதுதான் ஜீரோவின் கதை.
மீரட்டில் வாழும் ஜெகஜால குள்ள மனிதர். தன் அப்பாவின் தவறினால் மரபணு பிரச்னை ஏற்பட்டுவிட்டது என புகார் சொல்லி அப்பாவிடம் அடிவாங்குவதில் தொடங்குகிறது ஷாருக்கானின் நடிப்பு.
சூப்பர் ஸ்டார் அண்டர்வேரோடு தெருவில் ஓடுவதை நினைத்துப் பாருங்கள். அசரவேயில்லை. அப்படியே ஷாருக்கான் செய்கிறார். அவருக்கு உயரம் கூட பிரச்னையில்லை. தனக்கு காதலி தேவை, குறிப்பாக மனைவி என தேடுதலில் இருக்கும்போது வானியலாளர் ஆஃபியா பிந்தரை சந்திக்கிறார். செரிபெரல் பால்சியால் பாதிக்கப்பட்ட பெண்ணை நடனம், இயல்பான பேச்சு என பேசி படுக்கை வரை வந்துவிடுகிறார். ஆனால் அப்போது பபிதா குமாரி மீதான காதல் தலைதூக்க, கல்யாணத்தைக் கூட தூக்கிப்போட்டுவிட்டு பபிதாகுமாரியிடம் வந்துவிடுகிறார். அவர், தன் காதலனை இழந்த கோபதாபத்தில் இருக்கிறார். இருவரும் உண்மையான அன்பு என்றால் என்ன என விவாதம் நடத்துகின்றனர்.
அவருக்கு அப்போதுதான் ஆஃபியாவின் மீதான தன் காதல் புரிகிறது. உடனே கிளம்பிச் சென்றால், ஆஃபியா அடுத்தடுத்த அதிர்ச்சியை பரிசாக தருகிறார். என்ன அது என்பதுதான் ஜீரோ படத்தின் கதை.
பவ்வா சிங்காக - ஷாருக், ஆஃபியாவாக - அனுஷ்கா கோலி, பபிதாகுமாரியாக - அனுஷ்கா என அனைவரும் நிறைவான நடிப்பு. இதனை ஹோம் வீடியோவாக பார்ப்பது நல்லது. சினிமாவுக்கான பெரிய பரபரப்பு முனைப்பு படத்தில் கிடையாது.
படத்தின் தோல்விக்கும் அதுவே காரணமாக இருக்கலாம். இசையமைப்பாளர் அஜய் - அதுல் இசையில் நம்மை உருக விடுகிறார். அதுவும் ஆஃபியா உடனான காதலில் அஜய் ஜோத்பூரின் குரலில் வரும் பாடல் மனதைக் கரைக்கிறது.
உண்மையான காதலை தேடும் வாழ்க்கையில் ஒருவர் அதை எப்படி தேடிக் கண்டுபிடிக்கிறார் என்பதே கதை. பிறப்புக் குறைபாடு, கல்வி இல்லாத நிலை என்பதைத் தாண்டி தனக்கான ஆன்மாவை பவ்வா சிங் எப்படி கண்டுபிடித்தார் என்பதை பிரமாண்டமாக சொல்ல நினைத்து தடுமாறி விட்டார்கள்.
- கோமாளிமேடை டீம்