இடுகைகள்

பிட்ஸ்!- அரிய விலங்குகள்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அரிய விலங்குகள் மீண்ட கதை!

படம்
அரிய விலங்குகள்! 1928   ஆம் ஆண்டு காணப்பட்ட Wondiwoi கங்காரு அழியப்பட்டதாக கருதப்பட்டது. பின்னர் உயிரியலாளர் நியூ கினியாவில் அதனைப் பார்த்து புகைப்படமெடுத்து அதன் இருப்பை உறுதி செய்தார்.   1870 ஆம் ஆண்டு தெற்கு பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள நியூ கலிடோனியா பகுதியில் terror skink ( Phoboscincus bocourti   ) என்ற பல்லிவகை அழிந்துவிட்டதாக கருதப்பட்டது. ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இப்பல்லியை 2003 ஆம் ஆண்டு கண்டுபிடித்தனர். சோலெனோடன்டே குடும்பத்தைச் சேர்ந்த பாலூட்டி இனமான சோலெனோடன் காணாமல் போனதாக கூறப்பட்டது. பின்னர் 2012 ஆண்டுக்கு பிறகு ஜப்பான் மற்றும் க்யூப நாட்டு ஆராய்ச்சியாளர்கள் இந்த நச்சு எச்சிலைக் கொண்ட விலங்கை கண்டுபிடித்தனர். 1950 ஆம் ஆண்டு இஸ்‌ரேலின் மார்ஸ்லேண்ட்ஸ் தீவு வறண்டுபோனது அங்கு வாழ்ந்த லடோனியா நிக்கிரிவென்டர் எனும் தவளை அழிந்துபோனதாக கருதப்பட்டது. பின்னர் பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு அவை வாழ்வதற்கான அடையாளங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.