இடுகைகள்

தொன்மை உலகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மூன்றாம் உலக முத்தமா?

படம்
கிஸ் கதை! மாலை நேரம். காதலியோடு நடக்கிறீர்கள். எதையோ சொல்ல நினைக்கிறீர்கள். மெல்லிய புன்னகையோடு ஒரக்கண்ணால் காதலியைப் பார்க்கிறீர்கள். பெண்கள் 360 டிகிரியில் அனைத்தும் அறிவார்களே! உங்களது  அசட்டுத்தனத்தைப் பார்த்தபடி உதடு கடித்து இன்னும் ஏண்டா லேட் என படபடப்பாக பார்க்கிறார். அவரின் இதயத்துடிப்பு மெல்ல உங்களுக்குக் கேட்கிறது. அப்போது நீங்கள் நடந்துசெல்லும் இடம் கார்னரை எட்டுகிறது. அங்கு சோடியம் வேபரின் தொந்தரவு கூட இல்லை. என்ன நடக்கும்? வாய்ப்பை துணிச்சலாக பயன்படுத்துகிறீர்கள்?  மெல்ல தலைசாய்த்து இதழோடு இதழ் ஒட்டி எடுக்கிறீர்கள். மெல்ல ம் என திணறி முழுக்க ஒப்புக்கொடுக்காமல் பின்னர் உங்கள் கைகளுக்கு இதமாக அர்ப்பணித்து காதலியும் நிற்கிறார். இதை நீங்கள் பென்சன் வாங்கும் காலத்தில் நினைத்தாலும் எப்படி நடந்த து என நினைத்து ஆச்சரியப்படுவீர்கள். ஆனால் இதற்கு காரணம் நமது முன்னோர்கள்தான் என்பதால் மடத்தனம் என்றோ முட்டாள்தனம் என்றோ நினைப்பதை தூரம் தள்ளி வையுங்கள். தொன்மைக்காலத்தில் தாய் உணவை அரைத்து மென்று வாய் வழியாக குழந்தைக்கு கொடுப்பதே பழக்கம். இதுதான் முத்தமாக மாறி இன்றைக்கும் ச